Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் பாரதியார் , பாவேந்தர் பாரதிதாசன், வெ. இராமலிங்கம் பிள்ளை(நாமக்கல் கவிஞர்), தேசிக விநாயகம் பிள்ளை

பாரதியார்

வாழ்க்கைக் குறிப்பு:

  • இவரின் இயற்பெயர் = சுப்பிரமணியம்
  • பெற்றோர் = சின்னசாமி ஐயர், இலட்சுமி அம்மாள்
  • மனைவி = செல்லம்மாள்
  • காலம் - 11.12.1882-11.09.1921(39 ஆண்டுகள்)

புனைப் பெயர்கள்:

  • காளிதாசன்
  • சக்திதாசன்
  • சாவித்திரி
  • ஓர் உத்தம தேசாபிமானி
  • நித்திய தீரர்
  • ஷெல்லிதாசன்

சிறப்பு பெயர்கள்:

  • புதுக் கவிதையின் முன்னோடி
  • பைந்தமிழ்த் தேர்பாகன்(பாவேந்தர்)
  • சிந்துக்குத் தந்தை(பாவேந்தர்)
  • நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா(பாவேந்தர்)
  • காடு கமழும் கற்பூரச் சொற்கோ(பாவேந்தர்)
  • பாட்டுக்கொரு புலவன் பாரதி(கவிமணி)
  • தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி
  • தேசியக்கவி
  • விடுதலைக்கவி
  • அமரக்கவி
  • முன்னறி புலவன்
  • மகாகவி
  • உலககவி
  • தமிழ்க்கவி
  • மக்கள் கவிஞர்
  • வரகவி

உரைநடை நூல்கள்:

  • ஞானரதம்(தமிழின் முதல் உரைநடை காவியம்)
  • தராசு
  • சந்திரிகையின் கதை
  • மாதர்
  • கலைகள்

கவிதை நூல்கள்:

  • கண்ணன் பாட்டு
  • குயில் பாட்டு
  • பாஞ்சாலி சபதம்
  • காட்சி(வசன கவிதை)
  • புதிய ஆத்திச்சூடி
  • பாப்பா பாட்டு
  • பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி
  • பாரததேவியின் திருத்தசாங்கம்
  • விநாயகர் நான்மணிமாலை

சிறுகதைகள்:

  • திண்டிம சாஸ்திரி
  • பூலோக ரம்பை
  • ஆறில் ஒரு பங்கு
  • ஸ்வர்ண குமாரி
  • சின்ன சங்கரன் கதை
  • நவதந்திரக்கதைகள்
  • கதைக்கொத்து(சிறுகதை தொகுப்பு)

நாடகம்:
ஜெகசித்திரம்

பொதுவான குறிப்புகள்:

  • எட்டயப்புர சமஸ்தானப் புலவர்கள் "பாரதி" என்ற ம் அளித்தனர்
  • தம்மை "ஷெல்லிதாசன்" என்று அழைத்துக்கொண்டார்
  • தம் பூனூலை கனகலிங்கம் என்ற ஆதிதிராவிடற்கு அளித்தவர்
  • தம் பாடல்களுக்கு தாமே மெட்டு அமைத்த கவிஞர்
  • 1905இல் சக்கரவர்த்தினி என்ற இதழ் தொடங்கினார்
  • கர்மயோகி, பாலபாரத் ஆகிய இதழை நடத்தினார்
  • சென்னை ஜனசங்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார்
  • நிவேதிதா தேவியைச் சந்தித்த பின் தீவிரவாதி ஆனார்
  • இவரின் ஞானகுரு - நிவேதிதா தேவி
  • இவரின் அரசியல் குரு = திலகர்
  • பதினான்கு மொழிகள் அறிந்தவர்
  • இவர் தம்பி" என அழைப்பது - பரலி நெல்லையப்பர்
  • பாரதியார் பாடல்களை முதன் முதலில் மக்களுக்கு அறிமுகம் செய்தவர் பரலி நெல்லையப்பர்
  • பாரதியார் பாடல்களை முதலில் வெளியிட்டவர் = கிருஷ்ணசாமி ஐயர்
  • பாரதியின் படத்தை வரைந்தவர் “ஆர்ய என்ற பாஷ்யம்"
  • பாரதிக்கு "மகாகவி" என்ற பட்டம் கொடுத்தவர் வ.ரா(ராமசாமி ஐயங்கார்)
  • பாரதி சங்கத்தை தொடங்கியவர் = கல்கி
  • மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார்
  • இவரின் முதல் பாடல் வெளிவந்த இதழ் = விவேகபானு(1904, தலைப்பு = தனிமை இரக்கம்)
  • இவர் கீதையை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்
  • பதஞ்சலி தத்திரத்திற்கு உரை எழுதி உள்ளார்
  • தாகூரின் சிறுகதைகள் 11ஐத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்
  • பாரதியார் நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்தில், `தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் பொது எனக்கு வருத்தம் உண்டாகிறது. தமிழனை விட மற்றொரு சாதி அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்குச் சம்மதமில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்
  • உரைநடை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, “கூடிய வரை பேசுவது போலவே எழுதுவது தான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி" என்கிறார் தமிழில் முதன் முதலில் கருத்துப்படங்கள் வெளியிட்டவர் இவரே
  • "புவியனைத்தும் போற்றத் தமிழ்மொழியைப்புகளில் ஏற்ற, கவியரசன் இல்லை என்ற குறை என்னால் தீர்ந்தது; நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல்" என்று அறிவித்தார்
  • “சுவை புதிது பொருள் புதிது! வளம் புதிது! சொல் புதிது! சோதிமிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மாகவிதை என் கவிதை" என்று சூளுரைத்தார்

சிறப்பு:

  • கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர் இவரே
  • பரலி நெல்லையப்பர் = பாரதியார் ஒரு அவதாரப் புருஷர், இவர் நூலைத் தமிழர் வேதமாகக் கொள்வார்களாக
  • நாமக்கல் கவிஞர் = பாரதியை நினைத்திட்டாலும் சுதந்திரத்தின் ஆவேசம் சுருக்கென்று ஏறும்; இந்தியன் நான் என்றிடும் நல் இறுமாப்பு உண்டாம்
  • கவிமணி = பாட்டுக்கொரு புலவன் பாரதி
  • பாரதியின் சுயசரிதமே தமிழின் முதல் சுயசரிதம்
  • சிற்பி பாலசுப்ரமணியம் - "அவனுக்கு(பாரதி) நந்தனார் சரித்திரக் கீர்த்தனை மெட்டும் தெரியும்; ஜப்பானிய ஹைக்கூ லாவகமும் புரியும். தாகூரையும் அறிவான்; வால்ட் விட்மனின் புதுக்கவிதை ஒளியையும் உணர்வான். காளிதாசனான அவன் ஷெல்லிதாசனாகவும் தன்னை அறிவித்துக் கொண்டவன். சுதந்திரத்தையும் பெண் உரிமையையும் புதுயுகக் கனவுகளையும் நவநவமான மொழிகளில் பேசியவன்" என்கிறார்.
  • அனைவரும் தாய்நாடு எனக் கூற பாரதி மட்டும் தந்தையர் நாடு எனக் கூறியவர்
  • வையாபுரிப்பிள்ளை = இவருடைய பாடல்களில் கருத்தாழமும், ஆற்றலும், எளிமையும், இசை நயமும், தொடர் இன்பமும் ஒருங்கு அமையக் காண்கிறோம். இவ்வளவு சிறந்த கவிஞர் தமிழுலகில் சில நூற்றாண்டுகளாகத் தோன்றவில்லை
  • Dr.H.Cousins = அழகின் தூய - வாய்மையான வடிவத்தை பாரதி கவிதையிலே காண இயலும்

பாரதியை பற்றி பாவேந்தர்:

  • பைந்தமிழ்த் தேர்ப்பாகன்
  • செந்தமிழ்த் தேனி
  • சிந்துக்குத் தந்தை
  • குவிக்கும் கவிதைக் குயில்
  • இந்நாட்டினைக் கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு
  • காடு கமழும் கற்பூரச் சொற்கோ
  • கற்பனை ஊற்றாம் கவிதையின் புதையல்
  • திறம் பாட வந்த மறவன் புதிய
  • அறம் பாட வந்த அறிஞன்
  • என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்
  • தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
  • தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்
  • பாரதியார் உலககவி - அகத்தில் அன்பும்
  • பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர்
  • ஒருர்க்கொரு நாட்டுக்குரியதான
  • ஒட்டைச் சாண் நினைப்புடையார் அல்லர்

மேற்கோள்:

  • யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிப்போல் இனிதாவது எங்கும் காணோம்
  • சொல்லில் உயர்வுதமிச் சொல்லே - அதைத் தொழுது படித்திடடி பாப்பா
  • மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்
  • ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை சாதியில்
  • உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்
  • வாக்கினிலே ஒளி உண்டாம்
  • தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்
  • செங்கமிம் நாடென்ற போதினிலே

பாவேந்தர் பாரதிதாசன்

புரட்சிக் கவிஞர், பாவேந்தர், தமிழ்நாட்டின் இரசூல் கம்சதேவ் என்று சிறப்பு பெயர் கொண்ட பாரதிதாசன் புதுவையில் கனகசபை - இலக்குமியம்மாள் என்பவருக்கு மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் கனக சுப்புரத்தினம்.

நூல்கள்:

  • குடும்ப விளக்கு - மணிமேகலை வெண்பா
  • பாண்டியன் பரிசு - காதல் நினைவுகள்
  • சேரதாண்டவம் - கழைக்கூத்தின் காதல்
  • இருண்ட வீடு - அமைதி
  • தமிழச்சின் கத்தி - செளமியன்
  • பிசிராந்தையார் - நல்ல தீர்ப்பு
  • குறிஞ்சித்திட்டு - தமிழ் இயக்கம்
  • அழகின் சிரிப்பு - காதலா? கடமையா?
  • தமிழியக்கம் - சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
  • இசையமுது - இரண்யன் அல்லது இணையற்ற வீரன்
  • இளைஞர் இலக்கியம் - எதிர்பாராத முத்தம்
  • திருக்குறள் உரை - கண்ணகி புரட்சிக் காவியம்
  • பாரதியார் மீது கொண்ட பற்றினால் பாரதிதாசன் எனப்பெயர் மாற்றிக் கொண்டார்.
  • இவர் வாழ்ந்த காலம் - 29.04.1891 முதல் 21.04.1964 வரை
  • தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகியவற்றில் புலமை மிக்கவர்.
  • இவர் குயில் என்னும் இதழை நடத்தினார்
  • (இரசூல் கம்சதேவ் உருசிய நாட்டின் மாக்கவிஞர்)
  • நாளை என் தாய்மொழி சாகுமானால் - இன்றே நான் இறந்து விடுவேன் - ரசூல் கம்சதேவ்(ருஷ்யா)
  • தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளைக் கவிதை வடிவில் தந்தவர்.
  • பாரதிதாசன் பரம்பரை என்றொரு கவிஞர் பரம்பரையே இவர்காலத்தில் உருவானது.
  • 16 வயதில் இவர் புதுவை அரசின் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார்.
  • 18 வயதில் அரசு இவருக்கு அரசுக் கல்லூரியில் தமிழாசிரியார் பொறுப்பை வழங்கியது.
  • எ.கா: வாணிதாசன், கம்பதாசன், சுப்புரத்தினம்(சுரதா) என்று தம்மை அழைத்துக்
  • பிற்காலத்தில் சிறகடித்த வானம்பாடிகளுக்கு இவரே முதலெழுத்தும் தலையெழுத்தும் ஆவார்.
  • 1920 ஆம் ஆண்டு பழநியம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
  • தமிழக அரசினால் ஆண்டுதோறும் சிறந்த கவிஞர்களுக்குப் பாவேந்தர் விருது வழங்கப்படுகிறது.
  • திருச்சிராப்பள்ளியில் பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம் அமைத்துச் சிறப்பு செய்யப்பட்டுள்ளது.
  • சஞ்சீவி பர்வதத்தின் சாரல் - பொதுவுடைமை பற்றியது
  • அழகின் சிரிப்பு - இயற்கையை வர்ணிப்பது
  • குடும்பவிளக்கு - கற்ற பெண்களின் சிறப்பு பற்றியது
  • இருண்ட வீடு - கல்லாத பெண்களைப் பற்றியது
  • எங்கெங்கு காணினும் சக்தியடா - தம்பி ஏழுகடல் அவள் வண்ணமடா
  • பாரதியின் கட்டளைக்கிணங்கப் பாடிய பாடல்.
  • பாரதியார் இப்பாடலை நீசுப்பிரமணிய பாரதியின் கவிதாமண்டலத்தைச் சேர்ந்த கனகசுப்புரத்தினம் எழுதியது என்று குறிப்பிட்டு சுதேசமித்திரனுக்கு அனுப்பினார்.
  • பு:அ.பெரியசாமி என்பவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களுக்கு தேர்ந்தவர்.
  • அறிஞர் அண்ணா 1946 ல் புரட்சிக் கவிஞர் என்னும் பட்டத்தை அளித்தார்.
  • புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • தன்மான இயக்கத்தின் சிறந்த பாவலர் என பெரியாரால் பாராட்டப்பெற்றவர்.
  • பொன்னி, குயில் போன்ற இதழ்கள் நடத்தினார்.
  • செக் மொழியில் இவரின் பாடல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
  • பாரதியாரை முதன்முதலில் ஒரு திருமண வீட்டில் சந்தித்தார்.
  • நாடு, மொழி, இனம் சமுதாயச் சீர்திருத்தம் முதலானவற்றைப் பாடுபொருளாகக் கொண்டு இவர் இயற்றிய நூல்கள் - இரவா இன்பக்களஞ்சியங்கள் எனப்படுகிறது.
  • செந்தமிழை செழுந்தமிழாக காண ஆவல் கொண்டவர்.
  • சுப்புரத்தினம் ஓர் கவி - பாரதியார்
  • பாரதிதாசன் - தமிழ்க்கவி, தமிழரின் கவி, தமிழின் மறுமலர்ச்சிக்காகத் தோன்றிய கவி.
  • 1990ஆம் ஆண்டு இவருடைய படைப்புகளை தமிழ்நாடு அரசு பொது உடமையாக்கியது.

மேற்கோள்கள் :

  • தொண்டு செய்வாய் தமிழுக்குத்
    துறைதோறுந் துறை தோறுந் துடித்தெழுந்தே
  • தமிழுக்கும் அமுதென்று பேர்
  • எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
    மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
  • தமிழே நீயோர் பூக்காடு நானோர் தும்பி
  • உள்ளே தொட்டால் உசிரில் இனிக்கும் தெள்லுதமிழ்
  • தேனொக்கும் செந்தமிழே! நீ கனி! நான் கிளி
    வேறென்ன வேண்டும் இனி?
  • எங்கள் பகைவர் எங்கோ மரைந்தார்
    இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
  • உறுதி! உறுதி! ஒன்றே சமூகம்
    என்று எண்ணார்க்கு இறுதி! இறுதி!
  • புதியதோர் உலகு செய்வோம் கெட்ட
    போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்
  • இருட்டறையில் உள்ளதடா உலகம்
  • எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான
    இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையகம்
  • கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக்
    கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்
  • எளிமையினால் ஒரு தமிழன்
    படிப்பில்லை என்றால் இங்குள்ள எல்லாரும்
    நாணிடவும் வேண்டும்.
  • தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாதே !!
  • கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி!

சிறப்புரைகள் :

  • அறிவுக் கோயிலைக் கட்டி அதில் நம்மைக் குடியேற்ற விரும்புகின்ற பேரறிஞன் - புதுமைப்பித்தன்
  • பாரதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஓர் உண்மையான கவி - கு.ப.ரா
  • அவர்தம் பாடல்களைப் படிக்கின்ற அன்னியனும் தமிழனாகி விடுவான் - அ.சிதம்பரநாத செட்டியார்.
  • தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாதமரம், கூடில்லாத பறவை என்று பாடிய உருசியக் கவிஞர் இரசூல் கம்சதேவ் போலவே பாவேந்தர் பாரதிதாசனும் விளங்குகிறார்.
  • இவர் எழுதிய பிசிராந்தையார் நாடகம் சாகித்திய அகாதெமிப் பரிசு பெற்றது.
  • வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே என்னும் பாடலை புதுவை அரசு தனது வாழ்த்துப் பாடலாக கொண்டுள்ளது.

வெ. இராமலிங்கம் பிள்ளை:

  • நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (அக்டோபர் 19, 1888 - ஆகஸ்ட் 24, 1972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார்.
  • "கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர்.
  • முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்
  • இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி இருந்ததால் இவர் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு :

  • இராமலிங்கனார் பழைய சேலம் மாவட்டம், தற்போதைய நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெங்கடராமன், அம்மணியம்மாள் ஆகியோருக்கு பிறந்தார்.
  • திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரசின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர் தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர்.
  • ஓவியம் தவிர இவருக்கு கவிதை புனையும் ஆற்றலும் இருந்தது. 1924ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவர் எஸ்.சீனிவாச ஐயங்கார் அறிவித்த ஒரு போட்டியில் தேசபக்திப் பாடல்களை எழுதித் தங்கப் பதக்கம் பரிசு பெற்றார். அதுமுதல் இவர் பல கவிதைகளைப் புனைந்து தள்ளினார்.
  • அரசின் தடையுத்தரவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர் 1932இல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர். தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர் பதவியும், பத்ம பூஷண் பட்டமும் பெற்றவர்.
  • சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தவர். தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது.
  • சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • 1942இல் இவர் எழுதிய புதினம் மலைக்கள்ளன் புத்தக உருவில் வெளி வந்தது. இதுவே திரைப்படமாக 1954இல் பட்சி ராஜா பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியை அடைந்தது. வதலில் சாதனை புரிந்தது
  • இப்படம் எம்.ஜி.ஆருக்கு ஏராளமான புகழைச் சேர்த்து திரையுலகில் புகழின் உச்சிக்கு எடுத்துச் சென்றது. தமிழ் தவிர இப்படம் இந்தி (ஆசாத்) மலையாளம் தஸ்கரவீரன்) தெலுங்கு (அக்கிராமுடு, கன்னடம் (பெட்ட கள்ளா), சிங்களம் சூர சேனா) போன்ற மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு எல்லா மொழிகளிலும் அமோக வெற்றியைப் பெற்றது.
  • கவிஞரின் நாட்டுப் பற்றைப் போற்றும் வகையில் மாநில அரசு அவரை அரசவைக் கவிஞராகவும். பின்னர் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் நியமித்துச் சிறப்பித்தது. மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருதளித்துப் போற்றியது
  • காந்தியின் மீதும், காந்தீயத்தின் மீதும் மிகவும் ஈர்க்கப்பட்டிருந்தார் கவிஞர். காங்கிரஸ் கட்சியின் சில பொறுப்புக்களில் கூட சேலத்திலிருந்து செயல்பட்டிருக்கிறார். ஆனால் வாழ்க்கை அப்போது வளமானதாக இருக்கவில்லை.
  • சின்ன அண்ணாமலை என்பவர் தமிழ்ப்பண்ணை என்றொரு நூல் வெளியீட்டு நிறுவனம் வைத்திருந்தார். அவர் ஒரு தீவிர காங்கிரஸ்காரர். இந்த வெளியீட்டு நிறுவனக்கின் வாயிலாக கவிஞரின் சில பாடல்களும் புதினங்களும் புக்கக உருவில் வெளி வந்தன.
  • பாரதியார் வா.வே.சு ஐயர் போன்ற சான்றோர்களின் நட்பு இவருக்குக் கிடைத்திருக்கிறது. இவரது பாடல் ஒன்றைக் கேட்ட பாரதியார் பலே பாண்டியா என்று புகழ்ந்திருப்பது சரிந்திரத்தில் ஏற்கனவே பதிவான ஒன்று.
  • குமாரசாமி ராஜா மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தபொழுது அரசவைக் கவிஞராக இவரை அரசு 1949இல் நியமித்தது.
  • 1956 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் மேலவைக்குத் தேர்வு செய்யப்பட்டு மேலவை உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறார் சாகித்திய அகாடமியின் நிர்வாகக் குழுவிலும் உறுப்பினராக இருந்திருக்கிறார். 1971 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
  • தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த நாமக்கல்லிலுள்ள இல்லத்தை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம் ஆக்கியுள்ளது. இதில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
  • மேலும் சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலக பத்து மாடிக் கட்டிடத்திற்கு இவரது பெயர் சூட்டியுள்ளது தட்டாரத் தெரு என்று அழைக்கப்பட்டு வந்த இவர் வாழ்ந்த தெரு கவிஞர் இராமலிங்கம் தெரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • சேலம் அருங்காட்சியகத்தில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் உடைமைகள் காட்சிக்கு வைக்கப்பெற்றுள்ளன

கவிஞரின் நாட்டுப்பற்று :

  • முத்தமிழிலும், ஓவியக்கலையிலும் வல்லவர், சிறந்த விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றதால் சிறைத் தண்டனையும் அடைந்தார்.
  • கத்தி யின்றி ரத்த மின்றி
    யுத்த மொன்று வருகுது
    சத்தி யத்தின் நித்தி யத்தை
    நம்பும் யாரும் சேருவிர்
    என்னும் பாடலை உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலாகப் பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார்.

மொழிப்பற்று :
தமிழ்த்தாய் வாழ்த்து
தமிழ் அன்னைக்குத் திருப்பணி செய்வோமே
தரணிக்கே ஓரணி செய்வோமே
அமிழிதம் தமிழ் மொழி என்றாரே
அப்பெயர் குறைவது நன்றாமோ

புதினம்

  • மலைக்கள்ளன், 1942
  • கற்பகவல்லி 1962
  • தாமரைக்கண்ணி 1966
  • மரகதவல்லி, 1962
  • மாமன் மகள்
  • காதல் திருமணம், 1962

கவிதை

  • தேசபக்திப் பாடல்கள், 1938
  • கவிதாஞ்சலி 1953
  • தமிழன் இதயம், 1942
  • தமிழ்மணம், 1953
  • சங்கொலி, 1953
  • காந்தி அஞ்சலி, 1951
  • மலர்ந்த பூக்கள், 1953
  • அவனும் அவளும் தமிழ்த்தேன். 1953
  • நாமக்கல் கவிஞர் பாடல்கள், 1960
  • பிரார்த்தனை, 1938

உரைநடைக் கட்டுரைகள் :

  • கவிஞன் குரல், 1953
  • தமிழ்மொழியும் தமிழரசும், 1956
  • பார்ப்பனச் சூழ்ச்சியா, 1948
  • கம்பன் கவிதை இன்பக் குவியல்
  • ஆரியராவது திராவிடராவது, 1947
  • திருக்குறள் - உரை
  • இசைத்தமிழ், 1965

தேசிக விநாயகம் பிள்ளை

கவிமணி கேசிக விநாயகம் பிள்ளை ஜூலை 27, 1876 - செப்டம்பர் 26, 1954 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர்.

படைப்புகள் :

  • பக்திப் பாடல்கள்
  • இலக்கியம் பற்றிய பாடல்கள்
  • வரலாற்று நோக்குடைய கவிதைகள்
  • குழந்தைப் பாடல்கள்
  • இயற்கைப் பாட்டுக்கள்
  • வாழ்வியல் போராட்ட கவிதைகள்
  • சமூகப் பாட்டுக்கள்
  • தேசியப் பாட்டுக்கள்
  • வாழ்த்துப் பாக்கள்
  • கையறு நிலைக் கவிதைகள்
  • கையறு நிலைக் கவிதைகள்
  • பல்சுவைப் பாக்கள்

வாழ்க்கைக் குறிப்பு :

சிவதாணுப்பிள்ளை ஆதிலட்சுமி தம்பதியர்க்கு இரண்டு பெண் குழந்தைகளை அடுத்து மூன்றாவதாக தேசிக விநாயகம் பிறந்தார். இரண்டு பெண்களுக்கு பின் பிறந்த ஆண் மகவுக்கு தான் வணங்கும் தேசிக விநாயகரின் பெயரை வைத்தார் சிவதாணுப்பிள்ளை

ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார். எம். ஏ. படித்த கவிமணி பின் ஆசிரியர் பயிற்சி படித்து தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார். உமையம்மை எனும் பெண்ணை 1901 இல் மணம் முடித்தார். நாஞ்சில் நாட்டார் தன் மனைவியை குட்டி பிள்ளாய் என்று அழைத்து கொண்டிருந்த நாட்களில் கவிமணி தன் மனைவியை தாயி என்று மரியாதையுடன் அழைப்பார். குழந்தைப்பேறு இல்லாத கவிமணி தனது அக்காள் மகன் சிவதாணுவை தனது மகன் போல வளர்த்தார்.

குழந்தை இலக்கியப் பணி :

தமிழில் குழந்தைகளுக்காக முதன்முதலில் தொடர்ச்சியாகப் பாடல்களை எழுதினார். 1938 ஆண்டு வெளியான அவருடைய மலரும் மாலையும் தொகுதியில் 25 க்கும் மேற்பட்ட குழந்தைப் பாடல்கள் 7 கதைப் பாட்டுகள் இடம்பெற்றிருந்தது.

தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு என்ற பாடல் இன்றளவும் பிரபலமாக உள்ள அவரது குழந்தைப் பாடல்களில் ஒன்று.

ஆசிரியர் பணி:

நாகர்கோவிலிலுள்ள கோட்டார் ஆரம்பப்பள்ளி, நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி மற்றும் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரி போன்றவற்றில் ஆசிரியராக 36 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

மொழிபெயர்ப்பாளர் :

எட்வின் ஆர்னால்டின் ஆசிய ஜோதியைத் தமிழில் தழுவி எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களைத் தழுவி தமிழில் எழுதினார்

ஆராய்ச்சியாளர் :

ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 1922-இல் மனோன்மணியம் மறுபிறப்புஎன்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார் சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார்.

கம்பராமாயணம் திவாகரம் நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார் காந்தளூர்ச்சாலைபற்றிய ஆய்வு நூலை எழுதினார்.

விருதுகள் :

24 டிசம்பர் 1940 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை கவிமணி என்ற பட்டம் வழங்கினார். 1943 இல் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார்.

பெரும் பொருள் வழங்க முன் வந்தபோது அதை வாங்க மறுத்து விட்டார். 1954 இல் கவிமணிக்குத் தேரூரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது. அக்டோபர் 2005இல் இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது

கவிமணியின் நூல்கள் :

  • அழகம்மை ஆசிரிய விருத்தம்
  • ஆசிய ஜோதி (1941)
  • மலரும் மாலையும் (1938)
  • மருமக்கள்வழி மான்மியம் (1942)
  • கதர் பிறந்த கதை, (1947)
  • உமார் கய்யாம் பாடல்கள் (1945)
  • தேவியின் கீர்த்தனங்கள்
  • குழந்தைச்செல்வம் கவிமணியின் உரைமணிகள்
  • மருமக்கள்வழி மான்மியம்

Share with Friends