மனோன்மணியம்
- நாடகத்தமிழ் நூல்களுள் தலையாய சிறப்பு உடையதாக விளங்குவது மனோன்மணியம் ஆகும்
- வடமொழி நாடகங்களுக்கு ஈடாக நடிப்புச் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப் பெற்ற நூல் இது.
- இந்நாடகம் லிட்டன் பிரபு என்பார் ஆங்கிலத்தில் எழுதிய “இரகசிய வழி” என்ற நூலைத் தழுவி அமைந்தது.
- எனினும் இது வழிநூல் என என்னாது முதல் நூல் எனவே கொள்ளப்படும் சிறப்புடையது.
- நன்னூல் மரபு = அங்கங்களையும் காட்சிகளையும் அமைத்து எழுதுவது நாடக நன்னூல் மரபு
- இந்நாடகம் 5 அங்கங்களையும், 20 காட்சிகளையும் கொண்டு விளங்குகிறது.
- இடையே “சிவகாமி சரிதம்” என்னும் துணைக் கதை ஒன்றும் உள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார்:
- ஊர் = கேரள மாநிலம் ஆலப்புழை
- பெற்றோர் = பெருமாள் பிள்ளை, மாடாத்தி அம்மையார்
- இவர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
- கோடாக நல்லூர் சுந்தர ஸ்வாமிகள் என்பவரைத் தமது ஞானாசிரியராகப் கொண்டு ஒழுகி வந்தார்
சிறப்பு பெயர்:
- ராவ்பகதூர்
- தமிழ் செய்யுள் நாடக இலக்கியத்தின் தந்தை
இவரின் படைப்புகள்:
- நூல் தொகை விளக்கம்
- திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி
- திருவிதாங்கூர்ப் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி
- Some mile stones in tamil litt
- Some early sovereigns of travameare
மொழிப்பெயர்ப்பு நூல்கள்:
- இவர் திருமுருகாற்றுப்படை
- நெடுநல்வாடை
- மதுரைக்காஞ்சி
பாஞ்சாலி சபதம்
நூல் குறிப்பு:
- மகாபாரதக்கதையை பெண்ணுரிமைக் காப்பியமாகத் தமிழில் சுப்பிரமணிய பாரதி வடித்துத் தந்ததே பாஞ்சாலி சபதம்.
- இது இலக்கிய நயமும், கவிநயமும் கொண்டுள்ளது.
- பாஞ்சாலி சபதம் இரு பாகங்கள் கொண்டது.
- ஐந்து சருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்டது
- சூழ்ச்சிச்சருக்கம்
- சூதாட்டச் சருக்கம்
- அடிமைச் சருக்கம்
- துகிலுரிதல் சருக்கம்
- சபதச் சருக்கம்
ஆசிரியர் குறிப்பு :
- ஆசிரியர் : பாரதியார்
- தோற்றம் : 11.12.1882 இல் எட்டயபுரத்தில் பிறந்தவர்
- பெற்றோர் : சின்னச்சாமி அய்யர் , இலக்குமி அம்மையார்
- மறைவு : 1921 செப்டம்பர் 11 இல் இறந்தார்.
குயில் பாட்டு
நூல் குறிப்பு:
- பாரதியார் பாடிய கவிதைகளுள் குயில்பாட்டு ஒப்பற்ற கற்பனைக் கதைப்பாட்டாகும்.
- குயிலின் குரல் ஒலியில் உள்ளத்தைப் பறிகொடுத்த கவிஞர் அதன்மேல் காதல் அலைந்ததை ஒரு கனவுக் காட்சியாய்த் தத்துவக் கருத்துக்களை உள்ளடக்கி பாடிய அற்புதப் படைப்பாகும் குயில் பாட்டு.
- தன்னுணர்ச்சி வெளிப்பாடாய் அமைந்த இப்பாடல், எளிய - இனிய நடையில் கவிதைச் சுவையும், கற்பனை நலமும், அழகிய வருணனையும், அகப்பொருள் நயமும் நிறைந்த சொற்சித்திரமாகும்.
ஆசிரியர் குறிப்பு :
- பாரதியார் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும், இலக்குமி அம்மையாருக்கும் மகனாகத் தோன்றினார்.
- தேசியக்கவி, மகாகவி எனப் போற்றப்படுபவர்.
- இந்தியா, விஜயா என்னும் இதழ்களை வெளியிட்டார்.
- சுதேசமித்திரன் என்ற இதழின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார்.
இரட்டுறமொழிதல்
நூல் குறிப்பு:
- ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டுறமொழிதல் அணி எனப்படும்.
- இரண்டு பொருள்பட மொழிதலால் இரட்டுறமொழிதல் என கூறப்பட்டது.
- இதனைச் சிலேடையணி என்றும் அழைப்பர்.
ஆசிரியர் குறிப்பு :
- ஆசிரியர் – காளமேகப்புலவர் (15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவார்)
- இயற்பெயர் – வரதன்
- ஊர் – கும்பகோணம் (அ) விழுப்புரம் என்ற கருத்து நிலவுகிறது .
- இவர் வைணவத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறியவர் .
- இவர் சைவப் பாடல்கள் பாடுவதில் வல்லவர்.
- இவர் ஒரு ஆசு கவி ஆவார்.
- இயற்றிய நூல்கள் :
- திருவானைக்கா உலா
- சரஸ்வதி மாலை
- பரப்பிரம்ம விளக்கம்
- சித்திர மடல்
அழகர் சொக்கநாதர்
ஆசிரியர் குறிப்பு:
- அழகிய சொக்கநாதப் புலவர் திருநெல்வேலி மாவட்டத்தில் தச்சநல்லூரில்பிறந்தவர்
- இவரின் காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு
- படைப்புகள்:
- காந்தியம்மை பிள்ளைத்தமிழ்
- ராசி கோமதிஅம்மைபதிகம்
- முத்துசாமி பிள்ளை காதல் பிரபந்தம்
- கந்தியம்மை கும்மி
- கோதை கும்மி
- சிறப்பு:
- காந்தியம்மைப் பிள்ளைத்தமிழ் பாடியததற்காகஇராசவல்லிபுர வள்ளல் முத்துசாமி இவருக்கு வைரக்கடுக்கன் பரிசாக வழங்கினார்.
- அழகிய சொக்கநாதப் புலவர் சிலேடைப் பாடுவதில் வல்லவர் சான்று பாடல் :
- திருக்குறள்
- அறநூல்கள்
- கம்பராமாயணம்
- எட்டுத்தொகை,பத்துப்பாட்டு நூல்கள்
- சிலப்பதிகாரம்,மணிமேகலை-ஐம்பெரும் - ஐஞ்சிறுங்காப்பியங்கள்
- பெரிய புராணம்,நாலாயிரந்திவ்விய பிரபந்தம் - திருவிளையாடற்புராணம் - தேம்பாவணி - சீறாப்புராணம்
- சிற்றிலக்கியங்கள்
- மனோன்மணியம்,பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, இரட்டுறமொழிதல்
- இலக்கியம் நாட்டுப்புறப்பாட்டு,சித்தர் பாடல்கள்
- இலக்கியம் சமய முன்னோடிகள்
- இலக்கியம் prepare
- 1.திருக்குறள் மாதிரி தேர்வு
- 2.அறநூல்கள் மாதிரி தேர்வு
- 3.கம்பராமாயணம் மாதிரி தேர்வு
- 4. எட்டுத்தொகை,பத்துப்பாட்டு நூல்கள் QA
- One Liner QA - சிலப்பதிகாரம், மணிமேகலை & சீவக சிந்தாமணி