Easy Tutorial
For Competitive Exams

பொதுத்தமிழ் - தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்

அன்னி பெசன்ட் அம்மையார்

வாழ்க்கைக்குறிப்பு:

  • இயற் பெயர் = அன்னி உட்
  • ஊர் = இலண்டன் நகரம்

படைப்பு:

  • பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார், அதனை “தாமரைப் பாடல்” என்பர்
  • விழித்திடு இந்தியா

இதழ்:

  • நியூ இந்தியா
  • காமன் வீல்

குறிப்பு:

  • 1893இல் இந்தியா வந்தார்
  • இந்தியாவில் பிரம்ம ஞான சபை பணிகளை மேற்கொண்டார்
  • இந்தியாவில் மகளிர் சங்கம் தொடங்கினார்
  • 1917 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித முதன் பெண்மணி இவர் தான்
  • சாரணர் இயக்கத்தை இந்தியாவில் பரப்பினார்
  • பனாரஸ்(காசி) மத்திய இந்து பள்ளி மற்றும் கல்லூரியை நிறுவினார்
  • தன்னாட்சி இயக்கத்தை தோற்றுவித்தார்
  • இவர் “நான் தூங்குபவர்களை தட்டி எழுப்பும் தண்டோரா, அவர்களை விழித்தெழச் செய்து தாய் நாட்டிற்கு தொண்டு புரிய வைப்பேன்” என்றார்
  • பிரம்ம ஞானசபையின் தலைமையிடத்தை சென்னை அடையாரில் நிறுவினார்
  • அடையாரில் ஒரு நூலகத்தை நிறுவி பழமையான சம்ஸ்கிருத நூல்களைப் பாதுகாத்து வந்தார்


மூவலூர் ராமாமிர்தத்தம்மாள்

வாழ்க்கைக்குறிப்பு:

  • 1883-ஆம் ஆண்டு பிறந்தார்.
  • தந்தை பெயர் கிருஷ்ணசாமி - பொருளாதார கடைநிலை காரணமாக குடும்பத்தை விட்டு சென்றுவிட்டார்.
  • வளர்ப்புத் தாய் அறுபது வயது முதியவருக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி செய்தபோது, மணமுடிக்க மறுத்து தனக்கு இசையும், நாட்டியமும் கற்றுத்தந்த சுயம்பு என்பவரை மணந்தார்.
  • 27.06.1962 அன்று தனது எண்பதாம் வயதில் மறைந்தார்.

குறிப்பு:

  • "தமிழகத்தின் அறிஞர் அண்ணா அவர்களால் அன்னிபெசன்ட்” எனப் புகழப்பட்டார்
  • வறுமை காரணமாக தாயால் பத்து ரூபாய்க்கு தேவதாசி ஒருவரிடம் சிறுவயதிலேயே விற்கப்பட்டார்.
  • 1917-ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் தேவதாசி முறைக்கு எதிரான தனது முதல் போராட்டத்தை தொடங்கினார்.
  • சுயமரியாதை திருமணங்களை ஆதரித்தார்.
  • பேச்சாளர்கள் பேச ஆங்கிலேயர்கள் தடை விதித்திருந்த போது, தனது கருத்துக்களை கரும்பலகையில் எழுதி மக்கள்முன் வைத்தார்.
  • இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பிய காந்தியடிகளை ஆங்கிலேயர் கைது செய்ததைக் கண்டித்து மூவர்ணக் கொடியை ஆடையாக அணிந்து கொண்டார். கதராடையை ஊர் ஊராக கொண்டுசென்று விற்றார்.
  • காந்தியத்தை ஏற்போர் குடிசையில் வாழவேண்டும் என்ற காந்தியடிகளின் கட்டளையை ஏற்று தனது ஒட்டு வீட்டை விடுத்து குடில் அமைத்து வாழ்ந்தார். அக்குடிலின் வெளியே "கதர் அணிந்தவர்கள் உள்ளே வரவும்” எனும் பலகை தொங்கியது.
  • பெரியார், திரு.வி.க, வரதராசலு, தருமாம்பாள், நீலாம்பிகை, மலர்முகத்தம்மையார், தாமரைக்கண்ணியம்மையார் ஆகியோருடன் இணைந்து தேவதாசி முறையை ஒழிக்க பாடுபட்டனர்.
  • 1938-ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போர் பேரணியில் திருச்சி உறையூர் முதல் சென்னை வரை 42 நாட்கள், 57 மைல் நடைபயணம் மேற்கொண்டார். வழியில் 87 பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார்.


முத்துலட்சுமி ரெட்டி

  • இந்தியாவில் முதன்முதலில் மருத்துவப் பட்டம் பெற்றபெண்மணியும், தமிழக சட்ட மேலவையில் முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமையும் பெற்றவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.
  • நாட்டிலேயே முதல் பெண்கள் இயக்கமான இந்திய மாதர் சங்கத்தை துவக்கி கடைசிவரை அதன் தலைவியாக இருந்தவர் என்கிற பல சாதனைகளுடன் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்தவர்.
  • புற்று நோய் என்றாலே அனைவருக்கும் ஒரு மரணபயம் ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு ஆட்கொல்லி நோயான புற்று நோய்க்கு நம் நாட்டிலேயே, அதுவும் நமது சென்னையிலேயே மிகத்தரமான சிகிச்சையை பெற முடிகிறது என்றால் அதற்கு காரணம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

வாழ்க்கைக்குறிப்பு:

  • பிறப்பு: 886 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி பிறந்தார் - புதுக்கோட்டை (திருக்கோகர்ணம்
  • தந்தை : நாராயண சுவாமி , தாய் : சந்திரம்மா
  • உடன் பிறந்தவர்கள் சுந்தரம்மாள், நல்லமுத்து என்று இரண்டு தங்கைகளும், இராமையா என்று ஒரு தம்பியும் ஆகும்.
  • கனவர்: சுரந்தரரெட்டி
  • இரண்டு மகன்கள். மூத்த மகன் இராம்மோகன் திட்டக்குழுவின் இயக்குநராகப் பணியாற்றினார். இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி - மருத்துவர்.
  • 1907ம் ஆண்டில் சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார். 1912ல் மருத்துவப்பட்டம் மருத்துவராக வெளியே வந்தார்.
  • இந்தியாவிலேயே மருத்துவம் படித்த முதல் பெண் என்று பெயர் பெற்றார் முத்துலட்சுமி ரெட்டி. மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி
  • சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றினார்.
  • மறைவு: 1968-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி தனது 82 வயதில் இயங்க மறுத்து நின்றது.

சமூகப்பணி:

  • 1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணைத்தலைவராகத் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவியில் இருந்த ஐந்தாண்டுளில் சில புரட்சி சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
  • தமிழக மேலவைக்கு உறுப்பினராக 1926 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • தேவதாசி ஒழிப்புத் திட்டம், பெண்களின் திருமண வயதை உயர்த்தும் சட்டம் போன்றவை இவரின் சிறந்த பணிகள், தொடர்ந்து அவர் பெண்கள் விழிப்புணர்ச்சிக்கும், பெண்கள் காப்பகங்களுக்கும் சேவை செய்ய ஆரம்பித்தார்.
  • இந்திமொழிக் கிளர்ச்சியில் பங்குபெற்றார்.
  • தமிழிசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, தமிழாசிரியர்களின் ஊதிய உயர்வுப் போராட்டம் எனத் தமிழ்ப் பணிகள் செய்தார்.
  • மாதர் இந்திய சங்கம் நடத்திய பெண்களுக்கான 'ஸ்திரீ தர்மம்' என்னும் மாத இதழின் ஆசிரியராக விளங்கினார்.
  • வறுமையில் வாடிய பெண்களுக்கும், நடத்தையில் தடம் தவறிய பெண்கள் தங்களுக்குப் பிறந்த குழந்தைகளை குப்பைத் தொட்டியில் அவ்வை இல்லம் அடையாறில் அமைந்துள்ள இதனை அமைத்தவர் முத்துலட்சுமி.
  • 1925 ல் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் லண்டன் சென்று அங்குள்ள செல்சியா மருத்துவமனையில் தாய், சேய் மருத்துவ ஆராய்ச்சியும், இராயல் புற்றுநோய் மருத்துவனையில் புற்று நோய் பற்றிய ஆராய்ச்சியும் செய்துவந்தார்.
  • அதன் பலனாக சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க பலவிதங்களிலும் நிதி திரட்டினார். இன்று புற்று நோயாளிகளுக்குப் புகலிடமாக விளங்கும் அடையாறு. புற்றுநோய் மருத்துவமனைக்குப் அன்றைய பாரதப் பிரதமர் நேரு அவர்கள் 1952-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அடிக்கல் நாட்டினார்.
  • நூல்கங்களை உருவாக்கினார். மருத்துவர் செளந்திரம் ராமச்சந்திரன் துணையோடு காந்திகிராமப் பணிகளைத் தொடங்கினார்.

விருதுகள்:

  • பெண் விடுதலைக்காவும், ஏழை, எளிய மக்களுக்காவும் தனது வாழ்வின் பெரும்பகுதியைச் செலவழித்த முத்துலட்சுமி ரெட்டிக்கு 1937 ஆம் ஆண்டு சென்னை மாநகரத் தலைமையாரல் ஆல்டர் வுமன் என்ற பட்டம் வழங்கப்பட்டது.
  • இவரின் நினைவாக புதுக்கோட்டையிலுள்ள அரசு மருத்துவமனைக்கு"டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை"என தமிழக அரசு பெயர் சூட்டியிருக்கிறது.
  • இந்திய அரசு முத்துலட்சுமியின் சேவைகளுக்காக பத்ம பூஷண் விருது கொடுத்து கெளரவித்தது.

டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்:

  • தமிழக அரசு தமிழகத்தில் வறுமைக் கோட்டிலிருக்கும் ஏழைப் பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் சத்தான உணவு | கிடைக்கச் செய்திட 2006-2007 ஆம் ஆண்டு முதல் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
  • கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்படும் உதவி தொகை ருபாய் 6 ஆயிரத்திலிருந்து , ரூபாய் 12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம்;

தமிழக அரசு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம் மூலம் கலப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் இருவகையாகப் பிரித்து அவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தினைச் செயல்படுத்துகிறது. இத்திட்டம் முன்பு அஞ்சுகம் அம்மையார்கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் என்கிற பெயரில் செயல்படுத்தப்பட்டது.

கலப்புத் திருமணம் முதல்வகை;

  • தமிழக அரசால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து. கொள்பவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளில் ஒருவர் கட்டாயம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
  • பெண்ணின் வயது 20 முடிந்திருக்க வேண்டும்.
  • வருமான உச்சவரம்பு எதுவுமில்லை.
  • திருமணம் நடந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • ரூபாய் 20000 வழங்கப்படும். இதில் ரூபாய் 10000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூபாய் 10000 காசோலையாகவும் வழங்கப்படும்.

கலப்புத் திருமணம் இரண்டாம்வகை;

  • தமிழக அரசால் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொள்ளும் முற்பட்ட வகுப்பினர்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளில் ஒருவர் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் முற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் இருத்தல் வேண்டும்.
  • பெண்ணின் வயது 20 முடிந்திருக்க வேண்டும்.
  • வருமான உச்சவரம்பு எதுவுமில்லை.
  • திருமணம் நடந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • ரூபாய் 10000 வழங்கப்படும். இதில் ரூபாய் 7000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூபாய் 3000 காசோலையாகவும் வழங்கி வருகிறது.


விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு

தில்லையாடி வள்ளியம்மை

  • பெயர் : வள்ளியம்மை
  • பெற்றோர் : முனுசாமி - மங்களம்
  • பிறந்த ஊர்: ஜோகன்ஸ்பர்க், தென்னாப்பிரிக்கா
  • காலம் : 1898 - 1913
  • நெசவுத்தொழிலாளியான வள்ளியம்மையின் தந்தை முனுசாமி, ஆங்கிலேயர்கள் தம் நாட்டுத்துணிகளை இந்தியாவில் விற்பனை செய்ததால் தம் தொழில் பாதிக்கப்பட்டதை அடுத்து வேலைத் தேடி தன் மனைவி மங்களம் அம்மையாருடன் புதுச்சேரியில் இருந்து சென்று தென்னாப்பிரிக்காவில் குடியேறினார்.
  • அங்கு ஜோகன்னஸ்பர்க் நகரில் சிறிய அளவில் காய்கறிக் கடை நடத்தினார்.
  • அங்கு, வள்ளியம்மை 1898-ல் பிறந்தார்.
  • தென்னாப்பிரிக்காவில் பிறந்தாலும் அவரின் தாயாரின் ஊரான தில்லையாடி பெயரை இணைத்து "தில்லையாடி வள்ளியம்மை" என அழைக்கப்படுகிறார்.
  • தில்லையாடி - நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்கடையூருக்கு தெற்கே 3 கி.மீ தொலைவில் உள்ளது.
  • தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு எதிராக அமைந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான ஆண்டு 1913.
  • தென்னாப்பிரிக்க திருமணச் சட்டப்படியும், கிறித்துவ மதச் சட்டப்படியும் நடைபெறாத திருமணங்கள் செல்லாது என்பதே அந்த தீர்ப்பு.
  • காந்தியடிகள் தீர்ப்புக்கெதிரான அறப்போராட்டத்தை தலைமையேற்று நடத்தினார்.
  • காந்தியடிகளின் உரிமை முழக்கத்தால் கவரப்பட்ட வள்ளியம்மை அறப்போராட்டத்தில் முனைப்புடன் பங்கேற்றார்.
  • வள்ளியம்மை கைது செய்யப்பட்ட நாள் - 23.12.1913
  • வள்ளியம்மை கைது செய்யப்பட்ட இடம் - வால்க்ஸ்ரஸ்ட்
  • அவருக்கு தென்னாப்பிரிக்க நீதிமன்றம் மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை அளித்தது.
  • சிறையில் மோசமான உணவால் காய்ச்சலுக்கு ஆட்பட்டு, போதிய மருத்துவம் அளிக்கப்படாததால் உயிருக்குப் போராடிய நிலையில் விடுதலை செய்யப்பட்டார்.
  • வீட்டில் படுத்த படுக்கையாக இருந்த வள்ளியம்மையை காண வந்த காந்தியடிகள் "சிறைத்தண்டனைக்காக நீ வருந்துகிறாயா?" எனக் கேட்டபோது, வள்ளியம்மை "இல்லை இல்லை மீண்டும் சிறை செல்லத் தயார்” என்றார்.
  • இந்தியர்கள் நலனுக்காக எத்தகு இன்னல்களையும் ஏற்பேன் என்ற வள்ளியம்மையின் பதிலைக் கேட்டு காந்தியடிகள் நெகிழ்ந்தார்.
  • சிறைச் சூழலால் உடல்நலம் குன்றிய வள்ளியம்மை, 22.02.1913 அன்று தனது 16-வது வயதில் காலமானார்.

காந்தியின் கருத்து:

  • "என்னுடைய சகோதரியின் மரணத்தைவிடவும் வள்ளியம்மையின் மரணம் எனக்குப் பேரிடியாக இருந்தது" என்றார் காந்தி.
  • வள்ளியம்மை குறித்து, "மாதர்களுக்கு அணிகலன்களாகத் திகழும் துன்பத்தைத் தாங்கும் மனவலிமை, தன்மானம், நல்லொழுக்கம் ஆகியவற்றிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தார். அவருடைய தியாகம் வீண் போகாது. சத்தியத்திற்காக உயிர்நீத்த அவருடைய உருவம் என் கண்முன் நிற்கிறது. நம்பிக்கைதான் அவரது ஆயுதம்” என்று "இந்தியன் ஒப்பீனியன்” இதழில் எழுதியுள்ளார்.
  • தென்னாப்பிரிக்க வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும்” என்று "தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம்” என்னும் நூலில் காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்புகள்:

  • தில்லையாடி வள்ளியம்மையை போற்றும் வகையில், அஞ்சல் தலையும், அஞ்சல் உறையும் வெளியிடப்பட்டது.
  • தமிழக அரசு, தில்லையாடியில் அவரது சிலையை நிறுவியுள்ளது.
  • தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் - கோ-ஆப்-டெக்ஸ், தனது சென்னையிலுள்ள 600-வது விற்பனை மையத்திற்கு "தில்லையாடி வள்ளியம்மை மாளிகை" எனப் பெயர் சூட்டியுள்ளது.

இராணி மங்கம்மாள்

  • பெயர்: இராணி மங்கம்மாள்
  • கணவர் : சொக்கநாத நாயக்கர்
  • மகன் - மருமகள் அரங்க கிருஷ்ணமுத்து வீரப்பன் - சின்ன முத்தம்மாள்
  • பெயரன் விசயரங்கச் சொக்கநாதன்
  • மங்கம்மாள் தனது கணவர் மறைவுக்குப்பின், தன் மகன் இளம் வயதினனாக இருந்ததால் உடன்கட்டை ஏறாமால் அவனை வளர்த்து வந்தார்.
  • மகனுக்கு திருமணம் செய்வித்த பின்னர் முடி சூட்டினார்.
  • 7 ஆண்டுகள் ஆட்சி நடத்திய அரங்க கிருஷ்ணமுத்து வீரப்பன் அம்மை நோய் கண்டு காலமானார்.
  • சிலநாட்களில் மங்கம்மாளின் மருமகள் ஆண் மகவை ஈன்றார். பின் அவரும் காலமானார்.
  • மங்கம்மாளின் பெயரன் விசயரங்கச் சொக்கநாதன் அரியணை ஏற்றப்பட்ட ஆண்டு - கி.பி.1688
  • பெயரளவில் பெயரன் அரியணையில் இருக்க, பாட்டி மங்கம்மாள் நாட்டை திறம்பட ஆட்சி செய்தார்.
  • முகலாயர்களிடம் பணிதல்:
    • ஒளரங்கசீப் தளபதி சல்பீர்க்கான் செஞ்சிக்கோட்டையை 7 ஆண்டுகள் முற்றுகையிட்ட போது, மங்கம்மாள் அவருக்கு விலையுயர்ந்த பொருள்களைக் கொடுத்து நட்பை வளர்த்துக் கொண்டார். முகலாயரின் உதவியுடன் மராத்தியர்களிடம் இழந்த சில பகுதிகளையும், உடையார்பாளையம் சிற்றரசர் கைப்பற்றியிருந்த சில பகுதிகளையும் மீட்டார்.
  • திருவிதாங்கூர் போர்:
    • திருவிதாங்கூர் மன்னன் இரவிவர்மா, மதுரை நாயக்க அரசுக்கு செலுத்த வேண்டிய திறைபொருளை செலுத்தாமல், கல்குளம் பகுதியில் இருந்த நாயக்கர் படையைத் தாக்கி அழிக்க, தளபதி நரசப்பையன் தலைமையில் மங்கம்மாள் அனுப்பிய படை திருவிதாங்கூர் படையைத் தோற்கடித்தது.
  • தஞ்சைப் போர்:
    • தஞ்சை ஷாஜி கைப்பற்றிய நாயக்கர் பகுதிகளை, தளபதி நரசப்பையன் தலைமையில் படை அனுப்பி மீட்டார். தஞ்சை அமைச்சர் பாலாஜி பண்டிதர் படையெடுப்பின்போது பெரும்பொருள் கொடுத்தனுப்பினார்.
  • மைசூர்ப் போர்:
    • மைசூர் மன்னன் சிக்கதேவராயன் காவிரியின் குறுக்கே ஆணை கட்டியபோது, அதனை எதிர்த்து தஞ்சையுடனான பகை மறந்து தஞ்சை - மதுரை கூட்டுப்படையை உருவாக்கினார் மங்கம்மாள்.
    • கர்நாடகாவில் அவ்வமயம் பெய்த கடும்மழையால் சிக்கதேவராயன் கட்டிய அணைகள் உடைய, சிக்கல் தற்காலிகமாக முடிவடைந்தது.
  • மங்கம்மாள் சமயத் தொடர்பாக சிறையிலிருந்து விடுதலை செய்த பாதிரியார் - மெல்லோ
  • மங்கம்மாள் வரவேற்று விருந்தோம்பிய வேற்றுமதக் குரு - போசேத்
  • மங்கம்மாள் இசுலாமியர்களுக்கும் மானியம் அளித்து, நல்வாழ்விற்காகவும் பள்ளிவாசல்களுக்காகவும் நிலங்களை மானியமாக வழங்கினார்.
  • மதுரையில் அன்னச்சத்திரம் நிறுவினார்.
  • புதிய சாலைகளை அமைத்தார். காநியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலை "மங்கம்மாள் சாலை” என அழைக்கப்படுகிறது.
  • மீனாட்சி ஆலயத்தில் ஆணித் திங்களில் ஊஞ்சல் திருவிழா நடைபெற ஏற்பாடு செய்தார்.
  • கொள்ளிடம் வெள்ளம் ஏற்பட்டு துன்புற்ற மக்களுக்கு உணவு, உடை, உறைவிடம் வழங்க ஆணையிட்டார். மத்திய சந்தை, மதுரைக் கல்லூரி உயர்நிலைப்பள்ளிக் கட்டிடம், இராமநாதபுர மாவட்ட ஆட்சித்தலைவரின் பழைய அலுவலகம் ஆகியன மங்கம்மாள் கட்டியதாகக் கூறுவர்.

Share with Friends