Easy Tutorial
For Competitive Exams

TNPSC G4 - Chemistry (வேதியியல்) அமிலம், காரம் மற்றும் உப்புகள்(Acids,Bases,Salts) Notes - காரம்

அமிலம், காரம் மற்றும் உப்புகள் - II

காரங்கள்

* ஆல்குலி என்ற சொல்லின் பொருள் தாவர சாம்பல் ஆகும். இது ஆல்குவிலி என்ற அரேபிய சொல்லிலிருந்து பெறப்பட்டது.

*எல்லா ஆல்கலிகளும் காரங்கள், ஆனால் எல்லா காரங்களும் ஆல்கலிகள் அல்ல.

வரையறை:
*நீர்மக் கரைசல்கள் ஹைட்ராக்ஸில் அயனிகள் தரவல்ல உலோக ஆக்ஸைடு மற்றும் ஹைட்ராக்ஸைடு சேர்மங்கள் காரங்கள் எனப்படும்.


*அமில மழை - சல்பியூரிக் அமிலம், நைட்ரிக் அமிலம்

*கண்ணாடியைக் கரைக்க - ஹைட்ரோ புளுரிக் அமிலம் (HF)

*கண்ணைசுத்தப்படுத்த - போரிக் அமிலம்



காரங்களின் வகைப்பாடுகள்:


*கேத்தோடு கதிர்களின் பெருக்கத்திற்கு மேக்னட்ரான் பயன்படுத்தப்படுகிறது.



அன்றாட வாழ்வில் பயன்படும் காரங்கள்


இயற்பியல் பண்புகள் :

*காரங்கள் நிறமற்றவை, மணமற்றவை ஆனால் இரும்பு மற்றும் தாமிர ஹைட்ராக்ஸைடுகள் குறிப்பிட்ட நிறத்தைப் பெற்றிருக்கும்,

* காரங்கள் கசப்பு சுவையுடையவை,

* காரங்கள் அரிக்கும் தன்மையுடையவை

* சோப்பு மற்றும் எண்ணெய் போன்று தொடுவதற்கு வழவழப்பாக இருக்கும்.

* சிறந்த மின்கடத்திகள் .

* ஹைட்ராக்ஸில் (OH) தொகுதியைப் பெற்றிருக்கும்.

* உலோகம் இல்லாத ஒரே ஹைட்ராக்ஸைடு அமோனியம் ஹைட்ராக்ஸைடு (NH4OH)


வேதிப்பண்புகள்

1. காரங்கள் அமிலங்களுடன் வினைபுரிந்து உப்பையும் நீரையும் உருவாக்குகிறது.
இவ்வினை நடுநிலையாக்கல் வினை எனப்படும்.

* காரம் + அமிலம் -> உப்பு + நீர்

(எ.கா):
*KOH + HCl -> KCl + H2O

2. காரங்கள் உலோகங்களுடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை வெளியேற்றுகிறது.

(எ.கா):
* Zn + 2NaOH -> Na2znO2 + H2 $\uparrow$


அமிலத்துவம் :

* ஒரு மூலக்கூறு காரத்தில் இடப்பெயர்ச்சி செய்யத்தக்க ஹைட்ராக்ஸைடு அயனிகளின் எண்ணிக்கை.


காரத்தின் பயன்கள் :

1.சோப்பு, துணி மற்றும் பிளாஸ்டிக் செய்ய பயன்படுகிறது.

2. காகிதம், மருந்து தயாரிக்க பயன்படுகிறது.

3. ஆடைகளில் படிந்துள்ள கறை, எண்ணெய் பிசுக்களை அகற்ற பயன்படுகிறது.


நிறங்காட்டிகள் :

* கரைசல்களின் அமில மற்றும் காரத் தன்மையை ஒரு குறிப்பிட்ட துல்லியமான நிறமாற்றத்தின் மூலம் காட்டும் வேதிப்பொருட்கள் ஆகும்.

*(எ.கா): ஃபினாப்தலின்


Share with Friends