Easy Tutorial
For Competitive Exams

GS Indian Economy இந்திய பொருளாதாரம் - General Test 7

56927.முத்ரா வங்கியின் முதன்மை நோக்கங்களில் தவறானது எது?

1. குறுங்கடன் வாங்குபவரையும், பெறுபவரையும் ஒழுங்குப்படுத்துதல் மற்றும் குறுங்கடன் வழங்குவதில் நிலைத்த தன்மையை ஏற்படுத்துதல்.

2.சிறு தொழில் புரிபவர்கள், சில்லறை வியாபாரிகள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் தனிநபர்களுக்கு கடன் வழங்கும் சிறு நிதி நிறுவனங்களுக்கு, மேலும் நிதி மற்றும் கடன் வசதியை ஏற்படுத்தி தருதல்.

3. சிறு தொழில்களை மேற்கொள்வதற்கு வழங்கப்படும் கடன்களுக்கு உத்திரவாதம் வழங்குவதற்காக கடன் உத்திரவாத திட்டம் (CGS) ஆரம்பித்தல்.

4. கடன் வழங்குதல், கடன்பெறுதல் மற்றும் பகிர்ந்தளிக்கப்படும் மூலதனத்தை மேற்பார்வையிடல் ஆகியவற்றுக்கு பொருத்தமான தொழில்நுட்ப உதவிகளை அறிமுகப்படுத்துதல்
1 மட்டும் தவறு
2, 3 தவறு
4 மட்டும் தவறு
எதுவுமில்லை
56928.கூற்று 1: பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு மட்டுமே வட்டார ஊரக வங்கிகள் கடன் வழங்குகிறது.

கூற்று 2: வட்டார ஊரக வங்கியின் வட்டி வீதமானது தனியார் வங்கிகளின் வட்டி வீதத்தைப் போல் இருக்கும்.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Explanation:
வட்டார ஊரக வங்கியின் வட்டி வீதமானது கூட்டுறவு சங்கங்களின் வட்டி வீதத்தைப் போல் இருக்கும்.
56929.ஊரக வறுமையை தீர்மானிக்கும் காரணங்களில் தவறானது எது?
பண்ணை சாராத தொழில்களில் வேலைவாய்ப்பின்மை
பணவீக்கம்
குறைந்த உற்பத்தித் திறன்
பொதுத்துறைகளில் அதிக முதலீடு
Explanation:
ஊரக வறுமைக்கான காரணங்கள் நிலங்கள் சரியாக பிரிக்கப்பபடாமை பண்ணை சாராத தொழில்களில் வேலைவாய்ப்பின்மை பொதுத்துறைகளில் முதலீடு இன்மை பணவீக்கம் குறைந்த உற்பத்தி திறன் வளர்ச்சியின் நன்மைகளில் உள்ள சமனற்ற நிலை குறைந்த பொருளாதார வளர்ச்சி வீதம் பெரிய தொழிற்சாலைகளுக்கே முக்கியத்துவம் சமூக குறைபாடுகள்
56930.கூற்று 1: இந்தியாவை விட இலங்கை உடல் நலதரத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது.

கூற்று 2: உடல் நலதரத்தில் இந்தியாவை பொறுத்தவரையில் கேரளா மாநிலம் தமிழ்நாட்டை விட சிறப்பாக உள்ளது.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Explanation:

தங்கள் மக்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் வழங்குதலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதலும் மற்றும் மக்களின் உடல்நலத்தை மேம்படுத்துதலுமே அரசின் முதன்மையான கடமையாகும் என்று இந்திய அரசியலமைப்பு தெளிவாக வலியுறுத்துகிறது.
56931.2016, அக்டோபர் 4 நிலவரப்படி இந்தியாவின் ஊரக வேலையின்மை _____________சதவீதமாகும்.
6.5%
6.8%
7.5%
7.8%
Explanation:

2016ஆம் ஆண்டு ஊரக வேலையின்மை நகர்ப்புற வேலையின்மையை (10.1%) விட குறைவு ஆகும்.
56932.இந்தியாவின் ஊரக சாலை பகுதி_____________ கி.மீ ஆகும்.
22.50 இலட்சம்
26.50 இலட்சம்
28.50 இலட்சம்
32.50 இலட்சம்
Explanation:

இதில் 13.5 சதவீதம் பகுதிகளில் மட்டுமே சாலைகள் போடப்பட்டுள்ளன.
56933.தேசிய ஊரக நல அமைப்பு (NRHM) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு
ஏப்ரல் 8, 2004
ஏப்ரல் 12, 2004
ஏப்ரல் 8, 2005
ஏப்ரல் 12, 2005
Explanation:
நலிவடைந்த ஊரக மக்களுக்காக குறைந்த விலையில் எளிதில் பெறக்கூடிய தரமான ஆரோக்கிய வசதிகளை ஏற்படுத்தி தருவது NRHMன் நோக்கம் ஆகும்.
56934.2017 மார்ச் முடிவில் இந்தியாவின் _____________ சதவீத கிராமங்கள் முழுமையாக மின் தொடர்பைப் பெற்றிருந்தன.
98.25
98.50
99.25
99.75
Explanation:

வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்த இந்தியாவின் பல மாநிலங்களில் மின் வசதி இலவசமாக வழங்கப்படுகிறது மற்றும் ஊரக பகுதிகளில் மின் கட்டண வீதம் மிகக் குறைவாக உள்ளது.
56935.ஊரக பொருளாதாரத்தின் வேளாண்மை சார்ந்த பிரச்சனைகளாக கருதப்படுபவை எவை?
1. உள்ளீடுகள் கிடைக்காமை
2. பற்றாக்குறைவான பணியாளர்கள் மற்றும் சேவைகள்
3. பன்முக திறன் கொண்ட பணியாளர்கள் இன்மை
4. நிலங்கள் துண்டாடப்பட்டு சிறிது சிறிதாக இருத்தல்
5. வங்கி மற்றும் காப்பீடு வசதிகள் இன்மை
1, 2, 4
1, 2, 3
2, 3, 4
1, 3, 4
Explanation:

வேளாண்மை சார்ந்த பிரச்சனைகள் எதிர்பார்த்த அளவில் விழிப்புணர்வு, வேளாண் அறிவு, திறன் மற்றும் மனப்போக்கு போன்றவை இன்மை. உள்ளீடுகள் கிடைக்கப்றொமை அங்காடிப்படுத்தும் வசதிகள் குறைவு பற்றாக்குறையான பணியாளர்கள் மற்றும் சேவைகள் பன்முக திறன் கொண்ட பணியாளர்கள் இன்மை நிலங்கள் துண்டாடப்பட்டு சிறிது சிறிதாக இருத்தல் சிறு நிலங்கள் மற்றும் சிறு சிறு துண்டுகளாக்கப்பட்ட நிலவுடைமைகள் ஊரக பகுதிகளில் தங்கி பணியாற்றுவதற்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இன்மை பழமையான தொழில்நுட்ப முறைகள் மற்றும் நவீன தொழில் நுட்பங்களை குறைவாக பயன்படுத்துதல் குறைவான அரசு முதலீடு மற்றும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு விலையை நிர்ணயம் செய்ய இயலாமை.
56936.சிறு தொழில்கள் குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.

1. நகர்புற மையங்களுக்கு அருகிலேயே பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன.

2. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அங்காடிகளுக்கு பண்டங்களை உற்பத்தி செய்கின்றன.

3. விளையாட்டு உபகரணங்கள் தயாரித்தல், சோப்பு தயாரித்தல், மின் விசிறி தயாரித்தல், காலணிகள் தயாரித்தல், தையல் இயந்திரங்கள் மற்றும் கைத்தறி நெசவு முதலியன சிறு தொழில் நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
அனைத்தும் சரி
1, 2 சரி
2, 3 சரி
1, 3 சரி
Share with Friends