Easy Tutorial
For Competitive Exams

TNPSC Group-VIII இந்துமதம்

அன்மைக்கால அருளாளர்கள் :

* அன்மைக்கால அருளாளர்கள் இந்தியாவில் வாழ்ந்தவர்கள்
* ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
* விவேகானந்தர்
* பாம்பன் சுவாமிகள்

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் :
* 19 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மிகவாதிகளுள் ஒருவராவார். இவர் விவேகானந்தரரின் குரு ஆவார்.

* அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்து அதையே வலியுறுத்தியவர்.

* பிப்ரவரி 18, 1836 - ஆம் ஆண்டு கதாதர் - திராம் - சந்திரமணி தேவி தம்பதியருக்கு நான்காவது குழந்தையாக மேற்கு வங்காளத்திலுள்ள “காமாரர்புகூர்" என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தார்.

* சிறு வயதிலிருந்தே பக்தி பாடல்களைப் பாடுவதிலும், புராணக் கதைகளைக் கேட்பதிலும், இறைவனின் திருவுருவமேனியை களிமண்ணில் செய்வதிலும் ஆர்வமாக இருந்தார்.

* காளி உபாசகராக இருந்தார். தட்சிணேசுரம் காளிகோயிலில் அர்ச்சகராகப் பணியாற்றினார். தினமும் கோயிலின் அருகில் இருந்த பஞ்சவடி என்ற காட்டுப் பகுதியில் காளியை நினைத்து தியானம் செய்தார்.

* காளியின் தரிசனத்தைக் காண முயன்றும் அவரால் இயலாத போது, இறுதியில் காளிசிலையின் கைகளில் இருந்த வாளால் தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது பேரானந்த ஒளி அவரை ஆட்கொண்டது.

* சுற்றத்தார் சாரதாமணி என்ற பெண்களை அவருக்கு மணம் முடித்து வைத்தனர். பெண்ணை காளியின் வடிவமாக நினைத்த அவர் ஒருநாள் மனைவியை காளியாக நினைத்து பூஜை செய்து அவரது கால்களில் விழுந்து வணங்கினார்.

* பைரவி பிராம்மணி என்ற பெண்மணியிடம் தாந்திரிக சாதனைகளை கற்றுத்தேர்ந்தார்.

* தோதாபுரி என்பவாரிடம் அத்வைத வேதாந்தம் கற்றார். அதன்பின் "நிர்விகல்ப சமாதியில்" ஆறுமாதங்கள் இருந்தார்.

* அப்போது ராமர்-சீதை, கிருஷ்ணன்-ராகை, இயேசு, நபிகள் நாயகம் ஆகியோர் அவருக்கு காட்சியளித்ததாகக் கூறினார்.

* இவருடைய சீடர்களில் முக்கியமானவர் விவேகானந்தர் ஆவார். இராமகிருஷ்ணருடன் அன்றாடம் பழகி வந்த மகேந்திரநாத் குப்தா என்பவரர் எழுதிய டைரி குறிப்புகளே பின்னாளில் 'ஸ்ரீராமகிருஷ்ணாரின் அமுத மொழிகள் ” என்ற பெயரில் தொகுக்கப்பட்டது.

* இறுதி நாட்களில் தொண்டைப் புற்றுநோய் அவரை தாக்கியது. அவருடைய சீடர்கள் காசிப்பூர் என்ற இடத்தில் தோட்ட வீட்டில் வைத்து வைத்தியம் செய்தனர். எனினும் வைத்தியம் பலனிக்காமல் 1886, ஆகஸ்ட் 16 அன்று மகா சமாதியடைந்தார்.

ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள்:
* பிறர் எதைச் செய்ய வேண்டுமென்று நீ விரும்புகிறாயோ, அதையே நீ செய்.

* மனிதர்கள் புகழ்வதும் விரைவு, இகழ்வதும் விரைவு, எனவே மற்றவர்கள் உன்னைப் பற்றிக் கூறும் வார்த்தைகளைப் பொருட்படுத்தாதே.

* பாவமும், பாதரசமும் எளிதில் ஜீரணமாகாது.

* ஆசையை அகற்றிப் பற்றுதலற்றுக் காமம் புரிவதே உனக்கான சிறந்த வழியாகும்.

* உன்னிடம் தீவிர நம்பிக்கை இருக்குமானால் நீ மனமுருகித் தேடும் பொருள் உனக்கு கிடைக்கும்.

* கோபத்தில் மனிதனுக்கு பகுத்தறிவு போய் விடுகிறது.

* உபதேசம் செய்பவர்கள் பலர், பின்பற்றி நடப்பவர்களோ சிலர்.

* பக்தியையும் பிரேமையையும் பற்றிய ரகசியங்களைத் தினமும், உன் ஆயுள் உள்ளளவும் கற்றுக்கொள், அது உனக்கு எப்போதும் பலனைத் தரும்.

* ஒருவனுடைய குணதோஷங்கள் அவனுடைய சகவாசத்தைப் பொருத்து அமைகின்றன.

விவேகானந்தர்:
* 19-ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. இராமகிருஷ்ண பரமஹம்சாரின் முக்கியச் சீடராவார்.

* இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத தத்துவங்களை அடிப்படையாக கொண்டு பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.

* விவேகானந்தர் 1863 ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் நாள் விசுவாநாத் தத்தா - புவனேஸ்வரி தேவி என்ற தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

* கல்கத்தாவில் பிறந்த இவரது தாய்மொழி வங்காளமாகும். இளம் வயதில் சிறந்த விளையாட்டு வீரராகத் திகழ்ந்தார். சிறந்த பகுத்தறிவாதியான இவர் சிறுவயதிலிருந்தே தியானம் செய்யும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தார்.

* பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியிலும், பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியிலும் பயின்றார். தத்துவத்தை முதன்மைப் பாடமாகக் கொண்டு பயின்றார்.

* இறைத்தத்துவங்கள் பற்றிய பல ஐயங்கள் அவர் மனதில் தோன்றின.

* இறைவனின் படைப்பில் பல முரண்பாடுகள் இருப்பதாகக் கருதினார். இது பற்றி பலரிடம் விவாதித்தும் அவரது ஐயங்களுக்கு தெளிவு கிடைக்கவில்லை. இவரது சகோதர் பூபேந்திரநாத் தத்தா இந்திய விடுதலைப் போராட்ட வீரராவார்.

* கி.பி.1881-இல் முதன் முதலாக இராமகிருஷ்ண ரை சந்தித்தார். எதையுமே பகுத்தறிவுடன் சிந்திக்கும் விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணாரின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை .

* பின்னர் இராமகிருஷ்ணாரின் ஈடுபாட்டால் பக்தி மார்க்கம், ஞானமார்க்கம் இரண்டின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொண்டார்.

* இராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பின் துறவிகளான சீடர்களில் இவரும் ஒருவராவார். நான்கு ஆண்டுகள் இந்தியா முழுவதும் சுற்றி வந்த மக்களின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை முறை ஆகியவற்றை அறிந்து கொண்டார்.

* டிசம்பர் 1892-இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவே மூன்று நாட்கள் ஒரு பாறை மீது அமர்ந்து தியானம் செய்தார். அந்த பாறை "விவேகானந்தர் பாறை" என்று அழைக்கப்படுகிறது.

* 1893 - ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் கலந்து கொண்டு "சகோதர, சகோதாரிகளே" என்று ஆரம்பித்து அவர் ஆற்றிய சொற்பொழிவிற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. மேலைநாடுகளில் வேதாந்த கருத்துகளை அறிமுகப்படுத்தினார்.

* இவர் வெளிநாடு செல்வதற்கு தேவையான உதவிகளையும், வெளிநாட்டிலிருந்து வந்த போது சிறப்பான வரவேற்பையும் அளித்து இவரைப் பெருமைப்படுத்தியவர் இராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி ஆவார்.

* இவருடைய முக்கிய சீடர்கள் சகோதரி நிவேதிதா, சுவாமி சதானந்தர், அளசிங்கப் பெருமாள் ஆவர்.

* கல்கத்தாவில் இராமகிருஷ்ண மடத்தை நிறுவி பல தொண்டுகள் செய்தார்.

* 1902-ஆம் ஆண்டு ஜுலை -4 ஆம் நாள், தனது 39வது அகவையில் பேலூரில் விவேகானந்தர் காலமானார்.

விவேகானந்தரின் கருத்துகள்:
* மனிதர்கள் இயல்பிலேயே தெய்வீகமானவர்கள் என்றும் இந்த தெய்வீகத்தை வெளிப்படுத்துவதே மனித வாழ்வின் நோக்கமாகும்.

* மக்கள் சேவையே மகேசன் சேவை. 'ரிஷிகளிடமும், சமூகத்தில் ஒரு பிரிவினரிடமும் மட்டுமே பரவியிருக்கும் ஆன்மிகம் சமூகத்தில் அனைவரிடமும் பரவ வேண்டும்."

* வேதாந்த கருத்துகளைப் பின்பற்றி செயல்படும் ஒருவர், எந்தப் பணியைச் செய்தாலும் அதை சிறப்பாகச் செய்ய முடியும்.

விவேகானந்தரின் பொன்மொழிகள்:
* நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்.

* நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாகத் திகழுங்கள்.

* உண்மைக்காக எதையும் துறக்கலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக்கூடாது.

* கடவுள் இருந்தால் அவனை நாம் காண வேண்டும். ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும். அப்படி இல்லையென்றால் நம்பிக்கையில்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு செய்வதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.

* உலகின் குறைகளைப் பற்றி பேசாதே. குறைகளை எண்ணி வருத்தப்படு. எங்கும் குறைகளை நீ காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விரும்பினால் உலகைத் தூற்றாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே.

* உலகிலுள்ள தீமைகளைப் பற்றியோ நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சு எண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் உலகமே ஒழுங்காகிவிடும்.

கவிதைகள் :
* "கடவுளைத் தேடி" என்னும் தலைப்பில் வங்கமொழியில் இவர் எழுதியுள்ள கவிதைகளை, தமிழில் திருமதி சௌந்தரா கைலாசம் என்பவர் மொழிபெயர்த்துள்ளார்.

எழுமின் விழுமின்!
* விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள் அவருடைய கூற்றான, எழுமின்! விழுமின் ! என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. முதலில் இந்தத் தொகுப்பு நூல் "ஞானதீபம்" என்ற பெயரில் வெளிவந்தது.

வேகானந்தரின் நினைவு மண்டபம்:
* கன்னியாக்குமரியில் இருக்கும் விவேகானந்தர் பாறையின் மேல் அமைந்துள்ளது. 1892 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி கன்னியாகுமரி வந்த விவேகானந்தர் கடலுக்குள் நீந்திச் சென்று அங்கிருந்த பாறையில் அமர்ந்து மூன்று நாட்கள் கடுந்தவம் செய்த இடத்தில் இம்மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபம் 1972-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

விவேகானந்தரின் கேந்திரம்:
* சுவாமி விவேகானந்தரின் போதனைகளைப் பரப்ப, ஜனவரி 7, 1972ல் ஏக்நாத்ஜி ரானாடே வால் கன்னியாகுமரியில் தோற்றுவிக்கப்பட்டது.

* இவ்வமைப்பின் மூலம் யோகா வகுப்புகள், பண்பாட்டு வகுப்புகள், ஆன்மிகச் சொற்பொழிவுகள், ஆளுமைத்திறன் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன.

சமர்த்த பாரத பருவம்:
ஆண்டுதோறும் டிசம்பர் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்கள், விவேகானந்தர் கன்னியாகுமரியில் தவம் செய்த நாட்களின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது.

குருபூர்ணிமா :
* மூதாதையர்களின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது.

சர்வதேச சகோதர தினம்:
சுவாமி விவேகானந்தர் சிகாகோ சமயமாநாட்டில் உரையாற்றிய தினமான செப்டம்பர் 11-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

கீதை ஜெயந்தி :
* பகவத் கீகையின் சிறப்பை எடுத்துரைக்க கொண்டாடப்படுகிறது.

சாதனாதினம்:
* விவேகானந்த கேந்திர நிறுவனர் ஏக்நாத்ஜி ரானடேவின் பிறந்தநாளான நவம்பர் 19ம் நாள் கொண்டாடப்படுகிறது.

விவேகானந்தர் இல்லம்:
* சென்னையில் திருவல்லிக் கேணியில் அமைந்துள்ளது சிகாகோவில் உரையாற்றிவிட்டு தாயகம் திரும்பிய விவேகானந்தர் 1897-ம் ஆண்டு பிப்ரவரி 6- ம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை இந்தக் கட்டடத்தில் தங்கியிருந்து ஒன்பது சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

* அதன்பின் இந்தக் கட்டடம் இராமகிருஷ்ண மடமாக செயல்பட்டு வந்தது. தற்போது விவேகானந்தர் இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. இராமகிருஷ்ண மடம் தற்போது மயிலாப்பூரில் செயல்பட்டு வருகிறது.

விவேகானந்தரின் புரட்சி கருத்துகள்:
* "துறவிகளின் நடுவில் நான் ஒரு புரட்சியாளர்” புரட்சியாளர்களின் நடுவில் நான் ஒரு துறவி” என்று கூறினார்.

* எனக்கு உருவம் இல்லை . நான் உருவம் இல்லாத துறவி என்று துணிந்து கூறியவர்.

* 'இந்த இகலோகத்தில் ஒரு கவளம் சோற்றுக்கு அலைய விட்டுவிட்டு, வேறு ஏதோ சொர்க்கத்தில் நிரந்தர ஆனந்தம் அளிக்கிறேன் என்று ஒரு கடவுள் சொன்னால், அந்த கடவுள் எனக்கு தேவையில்லை" என்று நாத்திகம் பேசிய ஆன்மிகவாதி.

* குருநாதரை ஸ்ரீ இராமகிருஷ்ண பரப்பிரம்மம்" என்று கூறினார்.

* சுவாமி விவேகானந்தர் வாழ்ந்த காலம் ஆங்கிலேயரிடம் பாரதம் அடிமைப்பட்டிருந்த காலமாகும். அப்போது சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பார்த்து சுவாமிஜி ஒரு கேள்வி கேட்டார். அதற்கான விடை இன்றளவும் கிடைக்கவில்லை . "சுதந்திரம் வேண்மென்றால் அதை இரண்டு நாட்களில் என்னால் கொண்டு வந்து விட முடியும். ஆனால் பெற்ற சுதந்திரத்தை பேணி காக்க மனிதர்கள் எங்கே?" என்று 1897-இல் கேட்டார்.

* "இந்திய சுதந்திரத்தைக் கட்டிக் காக்க தேவையானது கல்வி. அந்தக் கல்வி பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டமல்ல. மனிதனை உருவாக்குகிற கல்வி தேவை" என்றார். விவேகானந்தரின் பிறந்தநாள் "இளைஞர்கள் தினமாகக்" கொண்டாடப்படுகிறது.

பாம்பன் சுவாமிகள் :
* 1848-ஆம் ஆண்டு இராமேஸ்வரத்தில் சாத்தப் பிள்ளைக்கும் செங்கமலம் அம்மையாருக்கும் பாம்பன் சுவாமிகள் பிறந்தார்.

* பெற்றோர் இவருக்கு இட்டப்பெயர் அப்பாவு,

* சேஷகிரியார் என்ற பெரியவர் இவருக்கு வைத்தப்பெயர் குமரகுருதாசர் என்பதாகும்

* சுவாமிகள் சொந்த ஊர் பாம்பன் என்பதால் பாம்பன் சுவாமிகள் என அழைக்கப்பட்டார்.

* முருகன் மீது அளவற்ற பக்தி கொண்டு இளவயதிலேயே முருகப் பெருமான் மீது பாடல்கள் இயற்ற ஆரம்பித்து விட்டார்.

* ஆரணகிரிநாதரை தன் ஞானகுருவாக கொண்டார்.

* அருணகிரிநாதருக்கு முத்தைத்தரு என்று தொடக்கம் முருகனுக்கு அருளப்பட்டது போல இவருக்கும் முருகனால் "கங்கையை சடையில் தரித்து” என்னும் அடிகள் எடுத்துக் கொடுக்கப்பட்டது.

* இரண்டாம் அருணகிரிநாதர் என்று அழைக்கப்பட்டார். அருணகிரிநாதர் வழியில் சித்ரைக் கவிலகள் எழுதியுள்ளார்

* 20 ஆண்டுகள் இல்லற வாழ்வில் இருந்து பின் துறவறம் மேற்கொண்டார்.

* முருகப் பெருமானை முழுமுதற்கடவுளாகக் கொண்டு 6666 பாடல்களையும் 32 வியாசங்களையும் இயற்றியுள்ளார்.

* ஒருநாள் தனது நண்பரிடம் துறவு பூணுவதற்கு பழனி செல்லப் போவதாய் கூறினார்.

* அதற்கு அவர் முருகனிடமிருந்து உத்தரவு கிடைத்ததா என வினவ கிடைத்து விட்டது என பாம்பன் சுவாமிகள் பொய் கூறிவிட்டார்.

* அன்றிரவு முருகன் பாம்பன் சுவாமிகள் முன் தோன்றி பொய் கூறியதற்காக கோபித்துக் கொண்டார்.

* உடனே பாம்பன் சுவாமிகள் நடுநடுங்கி துறவறத்தின் மேல் உள்ள ஆசையினால் அவ்வாறு கூறிவிட்டதாக மன்னிப்பு கேட்டார்.

* மேலும் முருகன் அழைக்காமல் தனர் பழனிக்கு வருவதில்லை என வாக்களித்தார்.

* அவரது இறுதிக்காலம் வரை அழைப்பு வரவேயில்லை . எத்தனையோ தலங்களுக்குச் சென்ற பாம்பன் சுவாமிகள் பழனிக்கு மட்டும் செல்லவேயில்லை.

* மேற்கண்ட நிகழ்வு நடந்தது 1881-ஆம் ஆண்டு ஆடிமாதம் சுக்கிரவாரம் ஆகும். சுமாமிகளின் அடியார்கள் ஆண்டுதோறும் அந்தநாளை நினைவுக்கூர்ந்து அந்நாளில் சத்தியம் தவறாமல் நடப்பதாக உறுதி புணுகிறார்கள். அந்த நாள் சத்திய திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இவர் இயற்றிய "சண்முகக் கவசம்” மிகவும் புகழ்பெற்றது.

* இவருடைய தமிழாசிரியர் பெயர் முனியாண்டிப் பிள்ளை ஆவார். இவரது வடமொழி ஆசிரியர் சேதுமாதவ அய்யர் ஆவார். சிறுவயதில் இவரை ஈத்த கந்தசஷ்டி கவசம் பின்னாளில் சண்முகக் கவசம் இயற்ற தூண்டுதலாக இருந்தது.

* 1894-ஆம் ஆண்டு பிரப்பன் வலசை என்ற ஊரில் நிஷ்டையில் இறங்கினார். திரு.வி.க அவர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.

* ஒருமுறை குதிரைவண்டியின் சக்கரம் இவரது கால் மீது ஏறிவிட்டதால் கால் எலும்பு முறிந்துவிட்டது. அதனால் பொது மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அப்போது சுவாமிகளின் வயது 73. மருத்துவர்கள் குணமடைவது கடினம் என்று கூறிவிட்டனர்.

* ஆனால் சுவாமிகள் தொடர்ந்து சண்முகக் கவசம் பாடி வந்தமையால் மயில் வாகனத்தில் வந்த முருகன் அருளால் கால் எலும்பு சேர்ந்து குணமடைந்தார்.

* அந்த நாள் "மயுர சேவன விழா" என ஆண்டுதேறும் மார்கழி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

* 30.05.1929-இல் தம் திருவுருவை மறைத்து சென்னை திருவான்மியுாரில் மகாசமாதி அடைந்தார்.

பாம்பன் சுவாமிகள் இயற்றிய நூல்கள் :
* சண்முக கவசம்,
* பரிபுஜன பஞ்சாமிர்த வண்ணம்,
* குமரகுருதாச சுவாமிகள் பாடல்,
* ஸ்ரீமத் குமார சுவாமியம்,
* திருவலங்கற்றிரட்டு,
* திருப்பா காசியாத்திரை,
* சிறு நூற்றிரட்டு ,
* சீவயாதனா வியாசம்,
* பரிபுரணானந்த போதம்,
* செக்கர்வேள் செம்மாப்பு,
* செக்கர் வேள் இறுமாப்பு,
* கராலய ரகசியம்,
* கமரவேள் பதிற்றுப் பத்தந்தாதி,
* சேந்தன் செந்தமிழ் குமாரஸ்தவம்,
* தென்னாட்டுத் திருத்தல் தரிசனம்,
* பத்துப் பிரபந்தம்,
* ஆனந்தக் களிப்பு,
* சமாதான சங்கீதம்,
* சண்முக சகச்சிர நாமார்ச்சனை.

Share with Friends