Easy Tutorial
For Competitive Exams

TNPSC Group-VIII இந்துமதம்

மந்திரம்

* மனனம் செய்பவனை திராணனம் செய்வது அல்லது இரட்சிப்பது மந்திரமாகும்

மந்திரங்களின் மகத்துவம் * மந்திரத்தை ஜபிக்க மந்திரத்திற்குரியதவதை ஜபிப்பவன் முன் தோன்றுகிறது என்பதை பாரிஸ் நகர விஞ்ஞானி ஒருவர் மெய்ப்பித்திருக்கிறார்

* மந்திரத்தால் யானை முதலிய மிருகங்களும் பாம்பு முதலிய விஷஜந்துக்களும் கட்டுப்படுகின்றன

* சைவ சமயாச்சாரியர்களும்ஆழ்வார்களும் முறையே பஞ்சாக்கர அட்டாட்சர மந்திரங்களை நவின்று செயற்கரிய செயல்கள் பலவற்றைச் செய்திருக்கிறார்கள்

மூல மந்திரங்கள்
* சிவன் மூலமந்திரம் - ஓம் நமசிவாய
* விஷ்ணு மூலமந்திரம் - ஓம் நமோ நாராயணாய
* தேவி மூலமந்திரம் - ஓம் உமா தேவ்யை நம:
* கணபதி மூலமந்திரம் - ஓம் கணபதயே நம:
* சுப்பிரமணியர்மூலமந்திரம் - ஓம் சரவண பவாய நம:
* சாஸ்தா மூலமந்திரம் - ஓம் சாஸ்த்ரு மூர்த்தியே நம:

மந்திர ஜபமுறை:
* ஜபம் மூன்று வகைப்படும் அவை மானஸம் மந்தம் வாசகம் ஆகும்

* மனதிற்குள் ஜபிப்பது மானஸமாகும். தனக்கு மட்டும் கேட்கும் வண்ணம் மெல்ல உச்சரிப்பது மந்தமாகும்.

* பிறர் அறிய உச்சரிப்பவாசகமாகும் மனதிற்குள் உச்சரிப்பது உத்தமம். மெல்ல உச்சரிப்பதுமத்யமம். பிறர் அறிய உச்சரிப்பது தமமாகும்.

பஞ்சாக்கரம்:
* பஞ்சாக்கரம் "ஓம் நமச்சிவாய என்பதாகும் சிவாய சிவனுக்கு நம - வணக்கம் சிவனுக்கு வணக்கம் எனப் பொதுவாகக் கூறுவர்

* இறைவன் உயிர்களின் மலத்தை ஒழித்து அருளால் ஆட்கொள்வதை இம்மந்திரம் உணர்த்துகின்றது

* "அம்மையப்பரே உங்களை நான் வணங்குகிறேன் என்னைப் பற்றி நிற்கின்ற ஆணவத்தையும் மறைத்தலையும் நீக்கி உமது அருளால் ஆட்கொண்டு அருள் புரிதல் வேண்டும் என்பது பஞ்சாக்கரத்தின் திரண்ட பொருளாகும்

* பஞ்சாக்கரம் நடுவேதமாகிய யஜூர் வேதத்தில் உள்ள ஏழு காண்டங்களில் நடுக்காண்டத்தில் நடுசம்ஹிதையில் ருத்ராத்யாயத்தில் நடுநாயகமாகக் கூறப்படுவதால் வேதம் அனைத்தும் பஞ்சாக்கரமயம் எனக் கூறலாம்

* வேதப் பொருளாகிய சிவபெருமானுக்குச் சிரம் போன்று விளங்கும் யஜூர்வேதத்தில் முகம் போன்று விளங்குவது ருத்ராத்யாயமாகும் அதன் கண்மணி போன்று “சிவ எனும் இரண்டழுத்துக்கள்விளங்குகின்றன

* பதினெட்டு வித்யைகளிலும் சுருதியே சிறந்தது அதனினும் சிறந்தது பஞ்சாக்கரமாகும் அதனினும் அதனுள் விளங்கும் சிவ எனும் எழுத்துகள் மிகச் சிறந்தனவாகும் என பிரமணங்கள் கூறுகின்றன

ஐந்து முகங்களும், பஞ்சாக்கர விளக்கமும்

பஞ்சாக்கரமும் பிரணவமும் * பஞ்சாக்கரம் பிரணவத்தின் உள்ளுறுப்பாகும் பஞ்சாக்கரமே பிரணவம் பிரணவமே பஞ்சாக்கரமாகும்

* ஸ்தூல பஞ்சாக்கரம் சூட்சம , காரண மகாகாரண மகாமநு என ஐந்து வகைப்படும்

ஸ்தூல பஞ்சாக்கரம்:
* ஸ்தூல பஞ்சாக்கத்தில் நகரம் முதலாகவும் யகரம் இறுதியாகவும் உள்ளது சம்பந்தர் அப்பர் சுந்தரர் முதலியோர் "நமசிவாயப் பதிகம் பாடியுள்ளனர் .

* ஒவ்வொரு பாட்டின் ஈற்றிலும் நமசிவாயவே எனப் போற்றப்பட்டுள்ளது

* ஸ்தூல பஞ்சாக்கரத்தின் அட்சரங்கள் நமசிவாய மாகும்.

* இப்பஞ்சாக்கரம் இம்மை மறுமைகளில் பயன் அளிக்கும்

சூட்சம பஞ்சாக்கரம்:
* சூட்சம பஞ்சாக்கரம் சிவாய நம என்பதாகும்
* இப்பஞ்சாக்கத்தின் பயன் மலத்தை நாசம் பண்ணும்

காரண பஞ்சாக்கரம்:
* காரண பஞ்சாக்கரத்தை "சிவாய என்றும் “சிவாய சிவ" என்றும் கூறுவர்

மகாகாரண பஞ்சாக்கரம்:
* சிவ எனும் இரண்டழுத்துக்களைக் கொண்டது இந்த மகாகாரணபஞ்சாக்கரம்

மகாமநு:
* இந்த 'சி' எனும் எழுத்தில் ச், வரிவடிவு, அ, பிரணவாட்சர மூலமாகும் இ, அம்மூலத்தை விளக்கும் பூரணமாகும்

* இம்மூன்றின் தோற்றமும் அசைவும் விந்தாகும் இதன் ஒலியே நாதம் இவ்வைந்தும் சேர்ந்ததே 'சி எனும் எழுத்தாகும் இதுகாறும் கூறிய விளக்கங்களால் பஞ்சாக்கரத்தின் மகிமை இனிது விளங்கும்.

அட்டாக்கரம்:
விஷ்ணுகாயத்திரியில் புகழப்பெற்ற நாராயணமந்திரத்தில் வாஸுதேவாய நாராயணாய விஷ்ணு எனும் மூன்றில் முக்கியமானது நாராயண மந்திரமாகும் அதனை 'ஓம் நமோ நாராயணாய என உச்சரிப்பா இதனை அட்டாக்கரம்

* இந்த மந்திரத்தை ஜபித்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும் நாராயணரதுசௌலப்பிய குணங்கள் நம்மில் பிரகாசிக்கும்

* இது ஒரு மங்கல நுால் போன்றது மூன்று சரடாய் ஒரு மங்கல சூத்திரம் போல் எட்டு எழுத்துக்களால் மூன்று பதங்களாலாகியது

* எட்டு அட்சரங்கள் ஓம், ந,ம, நா,ரா,ய,ணா,ய என்பனவாகும் ஓம் (பிரணவத்தை முதலில் உச்சரித்தும் நம என்ற பதத்தை இரண்டாவதாகவும் நாராயணாய என்ற பதத்தை அதன் பின்னரும் உச்சரிக்கவண்டும்

காயத்திரி மந்திரம்:
* காலை மாலைகளில் சந்தியாவந்தனம் செய்து முடித்ததும்,காயத்திரிமந்திரம் ஜபிக்க வேண்டும்

* காலையில் சூர்யோதயத்துக்கு முன்னும், மாலையில் சூர்யஸ்தமன வேளையிலும் பிராணாயாம நியமத்தோடு காயத்திரிஜைபிக்க வேண்டும்

* காயத்திரி மந்திர ஜபத்தால் பாபங்கள் அழியும் சஞ்சிதம், பிராரப்தம் ஆகாமியம் எனும் வினைகள் ஒழியும் விதேககைவல்ய பதவி கிடைக்கும்

* இம்மந்திரத்தில் இருபத்துநான்கு எழுத்துக்கள் உண்டு அவை எல்லாத் தேவர்களையும் சுட்டி நிற்பதால் இம்மந்திரஜபம் எல்லாத் தேவதைகளுடைய அருளைப் பெறுவதற்கும் உரியதாயுள்ளது

” ஓம் பூர், புவஸ்ஸுவ தத்ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோந பிரசோதயாத்'

காயத்திரி மந்திர விளக்கம் :
* ஒம் என்ற பிரணவம் அ+உ+ம் எனப்பிரித்துஸ்திதி இலய, சிருட்டியைக் குறிக்கிறது இறைவனை சிருட்டி, ஸ்திதி இலயகாரணனாக இது காட்டுகிறது உலகின் ஆதி அந்த நாதனாகவும் இது விளக்கிக் காட்டுகிறது பூ - பூமி, புவ ;- ஆகாசம் ஸூவ - தத்பரமான இடம். இந்த மூன்றும் சேர்ந்து உலகங்களைக் குறிக்கிறது பூ ;- எனும் சொல் ஆத்மாவை குறிக்கிறது மூன்றும் சேர்ந்து பிராண ஆத்மாக்களை உணர்த்துகிறது

* தத்ஸவிது தேவஸ்ய அப்பிதாவான இறைவனது எல்லா விதப் பேறுகளையும் வரேண்யம் பார்க்க பெறத் தகுதி வாய்ந்த ஒளியை தீமஹி : நாங்கள் மனத்தில் தியானக்கிறோம் தியோயோந் பிரசோதயாத் அப்பேரொளி எங்களுடைய புத்தியை நல்வழியில் போகும்படி பிரேரிப்பதாகுக

Share with Friends