Easy Tutorial
For Competitive Exams
TNPSC G2 Previous Year Question Papers General Studies Tamil - 2022 Page: 4
59297.இந்தியாவின் இருப்பிடம் மற்றும் பரப்பளவு குறித்துப் பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
(i) கடக ரேகையினால் இந்தியா ஓரளவிற்கு இரண்டு சமப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
(ii) பரப்பளவில் உலகின் இரண்டாவது பெரிய நாடு இந்தியா.
(iii) அட்ச மற்றும் தீர்க்க ரேகைகளுக்கு இடையே உள்ள இடைவெளி கிட்டதட்ட முப்பது டிகிரி ஆகும்.
(iv) இந்திய திட்ட தீர்க்கரேகை போபால் வழியாக கடந்து செல்லும்
(ii) மற்றும் (iii) மட்டும்
(i), (ii) மற்றும் (iv) மட்டும்
(i) மற்றும் (iii) மட்டும்
(i), (iii) மற்றும் (iv) மட்டும்
விடை தெரியவில்லை
59298.கூற்று [A] : உயர் அடர்த்தி கொழுப்புப் புரதங்கள் புறத் திசுக்களில் இருந்து கல்லீரலுக்குக் கொலஸ்ட்ராலைக் கொண்டு செல்கின்றன.
காரணம் [R] : பிளாஸ்மாவில் உள்ள லிப்பிட்களின் மதிப்பீடு தமனி சுவர்களில் கொலஸ்ட்ரால் படிவதற்கு வழிவகுக்கிறது. இது பெருந்தமனி தடிப்புத்தோல் அழற்சிக்கு வழிவகுக்கிறது.
[A] தவறு, ஆனால் [R] சரி
[A] மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A]விற்கு சரியான விளக்கமாகும்
[A] சரி, ஆனால் [R] தவறு
[A] மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]விற்கு சரியான விளக்கமல்ல
விடை தெரியவில்லை
59299.கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஜோடியிலும் வலிமை மிகு அமிலத்தைத் தேர்வு செய்யவும்.
(i) $H_{3}O^{+}$ அல்லது $H_{2}O$
(ii) $NH_{4}^{+}$ அல்லது $NH_{3}$
(iii) $H_{2}S$ அல்லது $HS^{-}$
(iv) $H_{2}O$ அல்லது $OH^{-}$
$H_{3}O^{+}, NH_{4}^{+}, H_{2}S, H_{2}O$
$H_{2}O, NH_{3}, HS^{-}, OH^{-}$
$H_{3}O^{+}, NH_{3}, HS^{-}, H_{2}O$
$H_{2}O, NH_{4}, H_{2}S, OH^{-}$
விடை தெரியவில்லை
59300.S-வடிவ வளர்ச்சி வளைவைக் காட்டும் மக்கள் தொகையில் காணப்படுவது போல் சுற்றுச்சூழல் வளங்களுடனான உயிரியல் ஆற்றலின் தொடர்பு : $\dfrac{dN}{dt} = \dfrac{rN(N-K)}{K}$ இங்கு N என்பது மக்கள் தொகையில் உள்ள தனிநபர்களின் எண்ணிக்கை, t என்பது நேரம், P என்பது சம்பந்தப்பட்ட உயிரினத்தின் உயிரியல் திறன், மற்றும் K என்பது
தாங்கும் திறன்
அதிகபட்ச மக்கள் தொகை அளவு
குறிப்பிட்ட வாழ்விடம்
உயிர்ப்பொருள்
விடை தெரியவில்லை
59301.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று [A] : சிமோர்க் (பீனிக்ஸ்) இரண்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது
காரணம் (R] : இது செயற்கைக் கோள்களை எடுத்துச் செல்லும் ஏவுகலம் ஆகும்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
இரண்டும் சரியானது
இரண்டும் தவறானது
[A] தவறானது மற்றும் [R] சரியானது
[A] சரியானது மற்றும் [R] தவறானது
விடை தெரியவில்லை
59302.மெய்நிகர் G20 எண்ணியல் பொருளாதார மந்திரிகள் கூட்டம் 2020 இல் எந்த நாட்டால் அமைக்கப்பட்டது?
சவுதி அரேபியா
ஈரான்
ஈராக்
குவைத்
விடை தெரியவில்லை
59303.இந்தியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
ராஜஸ்தான்
கர்நாடகா
ஆந்திரப்பிரதேசம்
குஜராத்
விடை தெரியவில்லை
59304.2021ல் நீதியரசர் D. முருகேசன் குழு _____________ காரியத்தை ஆராய அமைக்கப்பட்டது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழ்நாடு காவல் துறையில் இட ஒதுக்கீடு
பொதுத்துறை நிறுவனங்களில் இட ஒதுக்கீடு
தொழிற்கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம்
நீட் தேர்வு
விடை தெரியவில்லை
59305.கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்தியைப் படித்து வினாவிற்கு விடையளிக்கவும். உங்களது விடையானது கட்டாயமாகப் பத்தியின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு என்பது இணைய வழியாகக் கொண்டுவரப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் தரவு தகவல்கள் அவ்வப்போது சேகரிக்கப்படுகின்றன. இத்தகவல்களைப் பயன்படுத்தி அதிக செயல்பாடுகளானது தான்- இயக்கப்படுகின்றன, எளிதாக்கப்படுகின்றன மேலும் நாள்தோறும் அறிக்கை சமர்பிக்கப்படுகின்றன.
கீழ்க்கண்டவற்றுள் எது சிறப்பான கூற்றாக அமையும்?
அரசிற்குப் பள்ளிகள் மீதான கட்டுப்பாடு
சிறப்பான தகவல் மூலமான கொள்கை முடிவெடுக்க அரசிற்கு இது உதவும்
இவ்வமைப்பால் பல்வேறு தரப்பட்ட பங்குதாரர்கள் பங்கெடுத்துள்ளனர்
பள்ளி நிர்வாகத்திற்கும் மற்றும் மாணவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்
விடை தெரியவில்லை
59306.சரியான விடையைத் தேர்ந்தெடு
கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட சூழ்நிலையில், மாநிலங்களின் நிகர கடன் உச்சவரம்பு 2021இல். GSDP-யின் ___________ க்கு மேம்படுத்தப்பட்டது.
4 சதவீதம்
3.5 சதவீதம்
5 சதவீதம்
6 சதவீதம்
விடை தெரியவில்லை
59307.மக்கள் நலனை மேம்படுத்துவதற்காக ஒரு சமூக ஒழுங்கை அரசு பாதுகாக்க வேண்டும் என்று எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு கூறுகிறது?
சட்டப்பிரிவு 38
சட்டப்பிரிவு 39
சட்டப்பிரிவு 37
சட்டப்பிரிவு 36
விடை தெரியவில்லை
59308.கீழ்க்காண்பவைகளில் எது/ எவை சரி?
(i) சீர்திருத்தம் என்பது மதிப்பு அமைப்பில் ஏற்படும் பகுதி மாற்றங்கள் மற்றும் உறவின் தரத்தில் ஏற்படும் விளைவு ரீதியான மாற்றங்களால் அடையாளம் காணப்படலாம்
(ii) உருமாற்ற மாற்றங்கள் மொத்த அமைப்பில் தீவிர மாற்றங்களுடன் வகைப்படுத்தப்படுகின்றன
(i) மட்டும்
(ii) மட்டும்
(i) மற்றும் (ii)
எதுவும் அல்ல
விடை தெரியவில்லை
59309.2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நிதி ஆயோக்கின் சுகாதாரக் குறியீட்டின்படி ___________, __________, மற்றும் ___________ ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
உத்திரப் பிரேதசம், அஸ்ஸாம் மற்றும் பஞ்சாப்
கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா
ஆந்திர பிரேதசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்
பஞ்சாப், கர்நாடகா மற்றும் ஹரியானா
விடை தெரியவில்லை
59310.அலாவுதின் கில்ஜியின் பின்வரும் பிராந்திய வெற்றிகளை முறையான கால வரிசைப்படி எழுதுக. I. ரன்தம்போர்
II. மால்வா
III. சித்தூர்
IV. குஜராத்
IV, I, III, II
I, III, IV, II
I, II, III, IV
IV, III, II, I
விடை தெரியவில்லை
59311.மெட்ராஸ் மாகாணத்தில் உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்ற முதல் பெண்மணி யார்?
ருக்மிணி லட்சுமிபதி
துர்காபாய்
சத்யாவதி
ஸ்வரூப் ராணி
விடை தெரியவில்லை
59312."ஞாலம் கருதினும் கைகூடும்”-
மேற்கூறிய திருக்குறளின்படி ஒருவர் உலகம் முழுவதையும் கைப்பற்றக் கருதினால் அவர் எந்த இரண்டை அறிந்து செயல்பட வேண்டும்?
(i) செல்வமும் வீரமும்
(ii) காலமும் இடமும்
(i) மட்டும்
(ii) மட்டும்
(i) மற்றும் (ii)
மேற்காணும் எவையும் அல்ல
விடை தெரியவில்லை
59313.உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் போதும், மீண்டும் அதனைப் புதுபித்துவிடலாம் - என்று கூறியவர்
கால்டுவெல்
ஜி.யு. போப்
வீரமாமுனிவர்
எல்லீஸ்
விடை தெரியவில்லை
59314.பிற்காலச் சோழர் காலத்தில் 'இறையிலி' என்பது ______________ தொடர்புடையது.
வரி இல்லாத நிலம்
வரி வசூலிக்கப்பட்ட நிலம்
கோயில் நிலத்திற்கு விதிக்கப்பட்ட வரி
குத்தகைக்கு விடப்பட்ட நிலத்திற்கான வரி
விடை தெரியவில்லை
59315.பின்வரும் கூற்றுக்களைக் காண்க.
(i)1905-இல் மேற்கொள்ளப்பட்ட வங்கப் பிரிவினை ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு மிகச் சிறந்த உதாரணமாகும்
(ii) 1905-இல் நடைபெற்ற கொல்கத்தா மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜி பிரிட்டிஷ் பொருட்களையும் நிறுவனங்களையும் புறக்கணிக்க அழைப்புவிடுத்தார்.
(iii) 1905 ஆகஸ்ட் 7-இல் கொல்கத்தா நகர அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் சுதேசி இயக்கம் குறித்த முறையான அறிவிப்பு வழங்கப்பட்டது. மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?
(i) மட்டும்
(i) மற்றும் (iii) மட்டும்
(i) மற்றும் (ii) மட்டும்
(i), (ii) மற்றும் (iii) சரியானது
விடை தெரியவில்லை
59316.கி.பி.1931 ஆம் ஆண்டின் இரண்டாவது வட்ட மேஜை மாநாடு :
1. வெலிங்டன் பிரபு இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த போது நடைபெற்றது.
2. இந்திய தேசிய காங்கிரசின் பிரதிநிதியாக காந்தி இம்மாநாட்டில் கலந்து கொண்டார்.
மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?
1 மட்டும்
2 மட்டும்
1 மற்றும் 2
1ம் அல்ல, 2ம் அல்ல
விடை தெரியவில்லை
Share with Friends