விடுபட்ட எண்ணைக் காண்?
20 13 07
30 08 22
40 ? 28
10 செ.மீ. விட்டமுள்ள வட்டத்தின் வெளியே “P” என்ற புள்ளி உள்ளது. புள்ளி"P"யிலிருந்து வட்டத்திற்கு இரண்டு தொடுகோடுகள் வரையப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொடுகோட்டின் நீளமும் 12 செ.மீ. எனில் வட்டத்தின் மையத்திற்கும் புள்ளி"P"க்கும் இடைப்பட்ட தொலைவு என்ன? |
Answer |
ராஜூ என்பவர் தெற்கு நோக்கி நடக்கத் தொடங்குகிறார். 20 மீ தூரம் நடந்த அவர் வடக்கு நோக்கி திரும்பி 8 மீ தூரம் நடக்கிறார். மறுபடியும் கிழக்கு நோக்கி திரும்பி 5 மீ தூரம் நடக்கிறார் எனில், ஆரம்ப இடத்திலிருந்து எவ்வளவு தூரம் எந்தத் திசையில் அவர் இருப்பார்? |
Answer |
11 செ.மீ, 12 செ.மீ, 13 செ.மீ. 24 செ.மீ ஆகியனவற்றை முறையே பக்க அளவுகளாகக் கொண்ட 14 சதுரங்களின் மொத்தப் பரப்பு காண்க. |
Answer |
சீரான வேகத்தில் ஒரு குறிப்பிட்ட தூரத்தை ஒரு தொடர் வண்டி குறிப்பிட்ட நேரத்தில் கடந்தது. தொடர் வண்டியின் வேகம் மணிக்கு 7 கி.மீ. என அதிகரிக்கப்பட்டிருந்தால் அத்தூரத்தை கடக்க குறிப்பிடப்பட்டிருந்த நேரத்தை விட 14 மணி நேரம் குறைவாக அத்தொடர் வண்டி எடுத்துக் கொண்டிருக்கும். தொடர் வண்டியின் வேகம் மணிக்கு 3 கி.மீ. என குறைக்கப்பட்டிருந்தால், அதே தூரத்தைக் கடக்க குறிப்பிடப்பட்டிருந்த நேரத்தை விட 10 மணி நேரம் அதிகரித்திருக்கும் எனில் பயண தூரத்தை கண்டுபிடி |
Answer |
முதல் n இயல் எண்களின் சராசரி காண்க |
Answer |
நற்பணி செய்த ஒரு சிறுமிக்கு பரிசளிக்க விரும்பி தோட்டக்காரர் சில ஆப்பிள்களை பரிசாக அளிக்க முன்வந்தார். முதல் நாள் 2 ஆப்பிள்கள், இரண்டாம் நாள் 4 ஆப்பிள்கள், மூன்றாம் நாள் 8 ஆப்பிள்கள், நான்காம் நாள் 16 ஆப்பிள்கள் . எனுமாறு 10 நாட்கள் அளித்தார். 10 நாள் முடிவில் அச்சிறுமி பெற்றுக் கொண்ட மொத்த ஆப்பிள்கள் எவ்வளவு? |
Answer |
மலர் களிமண்ணை பயன்படுத்தி ஒரு கூம்பு, ஒரு அரைக்கோளம் மற்றும் ஒரு உருளை ஆகியன சம அடிப்பரப்பு மற்றும் கூம்பின் உயரம், உருளையின் உயரத்திற்கு சமமாகவும் செய்தாள். மேலும் இவ்வுயரம் அவற்றின் ஆரத்திற்கு சமமாகவும் இருந்தால் இம்மூன்றின் கன அளவுகளுக்கிடையே உள்ள விகிதம் காண்க |
Answer |
6 செ.மீ ஆரமுள்ள கோளவடிவ உலோகக் குண்டு உருக்கப்பட்டு 6 மி.மீ விட்டமுள்ள சிறிய கோளவடிவ குண்டுகளாக வார்க்கப்பட்டால் எத்தனை சிறிய கோளவடிவ குண்டுகள் கிடைக்கும்? |
Answer |
ஒரு இடைக்கண்ட வடிவிலான வாளியின் மேற்புற மற்றும் அடிப்புற ஆரங்கள் முறையே 15 செ.மீ மற்றும் 8 செ.மீ. மேலும் ஆழம் 63 செ.மீ எனில், அதன் கொள்ளளவை லிட்டரில் காண்க ($\pi=\dfrac{22}{7}$) |
Answer |
A, B என்பவர்களின் தற்போதைய வயது விகிதம் 4: 5. 5 வருடங்களுக்கு பிறகு அவர்களின் வயது 5. 6 எனில், இருவரின் தற்போதைய வயதின் கூடுதல் |
Answer |