. எந்த நாட்டின் வினோத ஒலி தாக்குதல்கள் மக்களின் மூளையை மாற்றுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன ?
கியூபாவின் ஹவானாவில் 2016-ம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கி பணியாற்றிய அமெரிக்க அரசாங்க ஊழியர்கள் அனுபவித்த "வினோத ஒலி தாக்குதல்"களுக்கு பின்னால் என்ன இருந்தது என்பது ஒரு மர்மமாகவே உள்ளது.ஹவானாவில் பாதிக்ப்பட பலர் ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்து "தீவிரமாக பலத்த ஒலி"களைக் கேட்டதாகக் கூறினர். அவை "சலசலப்பு" "உலோக அரைத்தல்" "துளையிடும் சத்தம்" போன்று இருந்ததாக கூறினர். இதற்கிடையில், இதுபோன்ற அறிகுறிகளை உணர்ந்ததாகவும் லட்சகணக்கான மக்கள் தங்கள் அரசாங்கம் மீது வழக்கு தொடுத்து உள்ளதாகவும் கியூபாவில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட கனடிய தூதர்கள் குறிப்பிட்டு உள்ளனர். சீனாவில் இதே போன்ற வழக்குகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.