எங்கு நடந்த உலக திறன் போட்டியில் இந்தியா 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது ?
2017-ஆம் ஆண்டு நடைபெற்ற 44-வது உலக திறன் போட்டியில் பங்கேற்ற இந்திய அணி , இந்திய அணி ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் மற்றும் ஒன்பது
பதக்கங்களை வென்றது. இதையடுத்து, இந்த ஆண்டு டாடர்ஸ்தானின் தலைநகரில் நடைபெற்ற 45- உலக திறன் போட்டியில் பங்கேற்ற இந்திய
அணியின் வெற்றியாளர்கள் இசை, நடனம் மற்றும் வான வேடிக்கைகள் இடம்பெற்ற ஒரு பிரகாசமான நிறைவு விழாவில் அறிவிக்கப்பட்டனர். ரஷ்ய
அதிபர் விளாடிமிர் புடின் கலந்துகொண்ட இந்த விழாவில், 25 வயதான எஸ்.அஸ்வதா நாராயணா நீர் தொழில்நுட்பத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.
17 வயதான பிரணவ் நூட்டலபதி வலை தொழில்நுட்பங்களில் வெள்ளி பதக்கம் வென்றதாக விழா அமைப்பாளர்கள் தெரிவித்தனர். மேலும், மேற்கு
வங்காளத்தை சேர்ந்த சஞ்சோய் பிரமானிக் (வயது 21), மகாராஷ்டிராவை சேர்ந்த ஸ்வேதா ரத்தன்புரா (வயது 22) ஆகிய இருவரும், நகை மற்றும்
கிராபிக் வடிவமைப்பு தொழில்நுட்பத்தில் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர்.