அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கை
- இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த போது 8 அட்டவணைகள் இருந்தன. தற்போது 12 அட்டவணைகள் உள்ளன.
- அட்டவணை 1: இந்தியாவில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் குறித்து
- அட்டவணை 2: குடியரசு தலைவர், உச்ச, உயர் நீதி மன்ற நீதிபதிகள், கவர்னர் போன்றோரின் சம்பளங்கள் குறித்து
- அட்டவணை 3: பதவி ஏற்பு உறுதிமொழிகள்
- அட்டவணை 4: ராஜ்யச்பாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் பற்றியது
- அட்டவணை 5: SC & ST மக்கள் வசிக்கும் பகுதிகளின் நிர்வாகம் பற்றியது
- அட்டவணை 6: அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் உள்ள ST பகுதிகள் நிர்வாகம் பற்றியது
- அட்டவணை 7: மத்திய, மாநில அரசுகளிடையே அதிகார பகிர்வு தொடர்பாக ( மத்திய பட்டியல் – 99, மாநில பட்டியல் – 61, பொது பட்டியல் – 52)
- அட்டவணை 8: அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் பற்றியது
- அட்டவணை 9: 1951 ம் வருடத்திய முதல் சட்டதிருத்தம் மூலம் இது சேர்க்கப்பட்டது. இந்த அட்டவணையில் ஏதேனும் ஒரு சட்டத்தை இணைப்பதன் மூலம் அரசு அதனை நீதித்துறை ஆய்விலிருந்து பாதுகாக்கலாம்.
- அட்டவணை 10: கட்சித்தாவல் தடை சட்டம் பற்றியது
- அட்டவணை 11: பஞ்சாயத்துகள் பற்றியது
- அட்டவணை 12: நகராட்சிகள் பற்றியது