Easy Tutorial
For Competitive Exams

Science QA வரலாற்றுக்கு முந்தைய காலம் (South Indian History) Notes

வரலாறு

நமக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் பற்றிய தகவல்களை ஆதாரங்களுடன் தொகுத்துக் கால வரிசைப்படி கூறுவது வரலாறு ஆகும்.

முக்கியத் தோற்றங்களின் ஆண்டுகள்

  • பூமியின் தோற்றம் - 460 கோடி ஆண்டுகளுக்கு முன்
  • மனிதனின் தோற்றம் - 40,000 ஆண்டுகளுக்கு முன் (ஹோமோ ப்பியன்ஸ்)
  • வேளாண்மை தோன்றிய காலம் - சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்
  • நகரங்களின் தோற்றம் - 4,700 ஆண்டுகளுக்கு முன்

வரலாற்றுக்கு முந்தைய கால இந்தியா

  • பழைய கற்காலம் - Palaeolithic age (கிமு 10,000 ஆண்டுகளுக்கு முன் ).
  • புதிய கற்காலம் - Neolithic age (கிமு 10,000 -4000)
  • செம்புக் கற்காலம் - Chalcolithic age(கிமு 3000 - 1500)
  • இரும்புக் காலம் - Iron age (கிமு 1500 -600)
57985.கீழ்க்கண்டவைகளை காலமுறைப்படி வரிசைப்படுத்தி எழுதுக :

I. புதிய கற்காலம்

II. இடைக் கற்காலம்

III. செப்புக் காலம்

IV. பழைய கற்காலம்.

இவற்றுள் :
II, III, 1 மற்றும் IV
IV, II, 1 மற்றும் III
I, III, II மற்றும் IV
III, 1, IV மற்றும் II.

பழைய கற்காலம் - Palaeolithic age

மடியில் குழந்தையைக் கட்டிக் கொண்டு ஒரு பெண் அம்பு விடுவது போன்ற ஓவியம் மத்தியப் பிரதேசத்திலுள்ள பிம்பேட்கா குகையில் உள்ளது.

இந்தியாவில் பழைய கற்காலக் கருவிகள் கிடைக்கப்பெற்றுள்ள இடங்கள்

  • மத்திய பிரதேசம் - சோன் ஆற்றுப்படுகை, பிம்பேட்கா, மஹேஸ்வா.
  • ராஜஸ்தான்- லூனி ஆற்றுச் சமவெளி.
  • கர்நாடகம் - பாகல்கோட்.
  • ஆந்திரப்பிரதேசம் - கர்னூல் குகைகள், ரேணிகுண்டா.
  • தமிழ்நாடு - வடமதுரை, அத்திரம்பாக்கம் , பல்லாவரம், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர்.

புதிய கற்காலம் (Neolithic Age)

மனித நாகரிக வளர்ச்சியின் அடுத்த படிநிலையைப் புதிய கற்காலம்

வாழ்க்கை முறை

  • மண் குடிசைகளை அமைத்தான்.
  • மனிதன் குடியிருப்புகளை உருவாக்கிக் கூட்டமாக வாழ்ந்தான்.
  • குடிசைகள், வட்டம் அல்லது நீள் வட்டவடிவமானவை. இவை தரை மட்டத்திற்குக்கீழ், பள்ளமாக்கப்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டன.
  • கூரைகளும் வேயப்பட்டன.
  • பயிர்த்தொழில் செய்தனர்.
  • விலங்குகளைப் பழக்கி வளர்த்தான்; மேய்ச்சல் தொழில் செய்தான். கோடரி, எலும்புக் கைப்பிடிகள், தூண்டில் முள், ஊசிகள், வெட்டுக் கருவிகள் போன்றவை பயன்படுத்தப்பட்டன.
  • புதிய கற்காலத்தில், இறந்தோரைப் புதைக்கும் பழக்கம் இருந்தது. அவ்வாறு புதைக்கும்போது, அவர்களுடன் பழகிய விலங்குகளையும் சேர்த்து, வீட்டின் முற்றத்திலேயே புதைத்தனர்.

புதிய கற்காலக் கருவிகள் கிடைக்கப்பெற்றுள்ள இடங்கள்

  • திருநெல்வேலி
  • தான்றிக்குடி
  • புதுக்கோட்டை
  • திருச்சிராப்பள்ளி, சேலம்

திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கி.பி.2004 ம் ஆண்டு அகழ்வாராய்ச்சிப் பணியைத் தொடர்ந்த போது ஒரே இடத்தில் 160க்கும் அதிகமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

செம்புக் கற்காலம் (Chalcolithic Age) - (உலோகக்காலம் )

புதிய கற்கால முடிவில் செம்பு என்னும் உலோகத்தின் பயனை அறிந்து , அதில் கருவிகள் செய்து பயன்படுத்தத் தொடங்கினர் .எனவே, அக்காலம் செம்புக் கற்கருவிகள் காலம் என்று குறிப்பிடப்படுகிறது.

* ஹரப்பா நகர நாகரிகம் இக்காலத்தைச் சேர்ந்தது


செம்புக் கற்காலக் கருவிகள்


இரும்புக் காலம் (Iron Age)

  • இரும்பினால் கருவிகள் செய்த காலம் இரும்புக்காலம் எனப்படும்.
  • உலோகத்தை உறுக்கிக் கருவிகள் செய்த காலம் .
  • இக்காலத்தில் வீட்டுச்சாமான்களும், பயிர்த்தொழில் கருவிகளும் இரும்பினால் செய்யப்பட்டன.
  • வேதகால நாகரிகம் இரும்புக் காலத்தைச் சார்ந்தது.

உலோகக் கலவைகள்

    இரும்பு + குரோமியம் = சில்வர் செம்பு + வெள்ளீயம் = வெண்கலம் செம்பு + துத்தநாகம் = பித்தளை இரும்பு + மாங்கனீசு = எஃகு
Share with Friends