Easy Tutorial
For Competitive Exams

Science QA இராணி மங்கம்மாள்

இராணி மங்கம்மாள்

  • பெயர்: இராணி மங்கம்மாள்
  • கணவர் : சொக்கநாத நாயக்கர்
  • மகன் - மருமகள் அரங்க கிருஷ்ணமுத்து வீரப்பன் - சின்ன முத்தம்மாள்
  • பெயரன் விசயரங்கச் சொக்கநாதன்
  • மங்கம்மாள் தனது கணவர் மறைவுக்குப்பின், தன் மகன் இளம் வயதினனாக இருந்ததால் உடன்கட்டை ஏறாமால் அவனை வளர்த்து வந்தார்.
  • மகனுக்கு திருமணம் செய்வித்த பின்னர் முடி சூட்டினார்.
  • 7 ஆண்டுகள் ஆட்சி நடத்திய அரங்க கிருஷ்ணமுத்து வீரப்பன் அம்மை நோய் கண்டு காலமானார்.
  • சிலநாட்களில் மங்கம்மாளின் மருமகள் ஆண் மகவை ஈன்றார். பின் அவரும் காலமானார்.
  • மங்கம்மாளின் பெயரன் விசயரங்கச் சொக்கநாதன் அரியணை ஏற்றப்பட்ட ஆண்டு - கி.பி.1688
  • பெயரளவில் பெயரன் அரியணையில் இருக்க, பாட்டி மங்கம்மாள் நாட்டை திறம்பட ஆட்சி செய்தார்.
  • முகலாயர்களிடம் பணிதல்:
    • ஒளரங்கசீப் தளபதி சல்பீர்க்கான் செஞ்சிக்கோட்டையை 7 ஆண்டுகள் முற்றுகையிட்ட போது, மங்கம்மாள் அவருக்கு விலையுயர்ந்த பொருள்களைக் கொடுத்து நட்பை வளர்த்துக் கொண்டார். முகலாயரின் உதவியுடன் மராத்தியர்களிடம் இழந்த சில பகுதிகளையும், உடையார்பாளையம் சிற்றரசர் கைப்பற்றியிருந்த சில பகுதிகளையும் மீட்டார்.
  • திருவிதாங்கூர் போர்:
    • திருவிதாங்கூர் மன்னன் இரவிவர்மா, மதுரை நாயக்க அரசுக்கு செலுத்த வேண்டிய திறைபொருளை செலுத்தாமல், கல்குளம் பகுதியில் இருந்த நாயக்கர் படையைத் தாக்கி அழிக்க, தளபதி நரசப்பையன் தலைமையில் மங்கம்மாள் அனுப்பிய படை திருவிதாங்கூர் படையைத் தோற்கடித்தது.
  • தஞ்சைப் போர்:
    • தஞ்சை ஷாஜி கைப்பற்றிய நாயக்கர் பகுதிகளை, தளபதி நரசப்பையன் தலைமையில் படை அனுப்பி மீட்டார். தஞ்சை அமைச்சர் பாலாஜி பண்டிதர் படையெடுப்பின்போது பெரும்பொருள் கொடுத்தனுப்பினார்.
  • மைசூர்ப் போர்:
    • மைசூர் மன்னன் சிக்கதேவராயன் காவிரியின் குறுக்கே ஆணை கட்டியபோது, அதனை எதிர்த்து தஞ்சையுடனான பகை மறந்து தஞ்சை - மதுரை கூட்டுப்படையை உருவாக்கினார் மங்கம்மாள்.
    • கர்நாடகாவில் அவ்வமயம் பெய்த கடும்மழையால் சிக்கதேவராயன் கட்டிய அணைகள் உடைய, சிக்கல் தற்காலிகமாக முடிவடைந்தது.
  • மங்கம்மாள் சமயத் தொடர்பாக சிறையிலிருந்து விடுதலை செய்த பாதிரியார் - மெல்லோ
  • மங்கம்மாள் வரவேற்று விருந்தோம்பிய வேற்றுமதக் குரு - போசேத்
  • மங்கம்மாள் இசுலாமியர்களுக்கும் மானியம் அளித்து, நல்வாழ்விற்காகவும் பள்ளிவாசல்களுக்காகவும் நிலங்களை மானியமாக வழங்கினார்.
  • மதுரையில் அன்னச்சத்திரம் நிறுவினார்.
  • புதிய சாலைகளை அமைத்தார். காநியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலை "மங்கம்மாள் சாலை” என அழைக்கப்படுகிறது.
  • மீனாட்சி ஆலயத்தில் ஆணித் திங்களில் ஊஞ்சல் திருவிழா நடைபெற ஏற்பாடு செய்தார்.
  • கொள்ளிடம் வெள்ளம் ஏற்பட்டு துன்புற்ற மக்களுக்கு உணவு, உடை, உறைவிடம் வழங்க ஆணையிட்டார். மத்திய சந்தை, மதுரைக் கல்லூரி உயர்நிலைப்பள்ளிக் கட்டிடம், இராமநாதபுர மாவட்ட ஆட்சித்தலைவரின் பழைய அலுவலகம் ஆகியன மங்கம்மாள் கட்டியதாகக் கூறுவர்.

Share with Friends