Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் திரு.வி.கல்யாணசுந்தரனார்

திரு.வி.கல்யாணசுந்தரனார்

  • பெயர் : திரு.வி.கல்யாணசுந்தரனார். (திருவாரூர் விருத்தாசலனாரின் புதல்வர் கல்யாணசுந்தரனார் என்பதன் சுருக்கமே திரு, வி.க என்பதாகும்.)
  • பெற்றோர் பெயர்: தந்தையார் விருத்தாசலனார் - தாயார் சின்னம்மையார்.
  • பிறந்த இடம்: துள்ளம் (காஞ்சிபுரம் மாவட்டம்). தற்போது தண்டலம் என்று அழைக்கப்படும் இந்த ஊர் சென்னையை அடுத்துள்ள போரூருக்கு மேற்கு திசையில் உள்ளது.
  • காலம்: 26.08.1883 - 17.09.1983
  • சிறப்பு: இவர் தொழிலாளர் நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கு தொண்டாற்றியவர். மேடைப் பேச்சு தமிழில் தனி இலக்கணம் வகுத்தவர்.
  • அடைமொழி:

    • இவரின் தமிழ்நடையை போற்றித் “தமிழ்த்தென்றல்” என சிறப்பிக்கப்படுகிறார்.

    படைப்புகள்:

    • மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்த்தென்றல், உரிமை வேட்கை, முருகன் அல்லது அழகு போன்றவை.
    • “பண்ணினை இயற்கை வைத்த.” எனத் துவங்கும் வாழ்த்துப் பாடல் இவரின் "பொதுமை வேட்டல்” எனும் நூலில் போற்றி எனும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது,
    • பொதுமை வேட்டல் : நாடு, மதம், மொழி, இனம், நிறம் அனைத்தையும் கடந்து உலகை ஒரு குடும்பமாக கருதுவதே பொதுமை வேட்டல் எனப்படும்.
    • "தெய்வ நிச்சயம்” முதலாகப் “போற்றி” ஈறாக உள்ள 44 தலைப்புகளில் 430 பாக்களால் ஆனது இந்நூல்.
    • திரு.வி.க தமிழாசிரியராக பணிபுரிந்த பள்ளி: சென்னை இராயப்பேட்டை வெஸ்லி பள்ளி.

    Share with Friends