Easy Tutorial
For Competitive Exams

ஒரு மாணவன் பதிலளித்த 48 வினாக்களில் ஒவ்வொரு சரியான விடையளித்ததை அடுத்து இரண்டு தவறான வினாக்களுக்கு விடையளிக்கிறான் எனில் அவர் எத்தனை சரியான வினாக்களுக்கு விடையளித்து இருப்பார்?

16
08
32
24
Explanation:
மாணவன் பதிலளித்த சரியான வினாவை X எனவும், தவறாக பதிலளித்த வினாவை 2x எனவும் கொள்க.
x + 2x = 48
3x= 48
X = 48/3
x= 16 மாணவன் சரியாக பதிலளித்த வினாக்களின் எண்ணிக்கை 16 ஆகும்.
Additional Questions

ஒரு குழுவில் உள்ளவர்களை 24, 45, 60 என சமமாகப் பிரித்தால் குழுவில் உள்ள குறைந்தபட்ச நபர்கள் எவ்வளவு?

Answer

ஒரு மைதானத்தில் குதிரைகளின் எண்ணிக்கையும், அவற்றில் அமர்ந்து இருப்பவர்களின் எண்ணிக்கையும் சமமாக இருந்தனர். அவர்கள் பயணத்தினைத் தொடங்கியவுடன் மொத்த குதிரைகள் மற்றும் அவற்றில் அமர்ந்து இருப்பவர்களின் எண்ணிக்கையில் பாதியும் நடந்து செல்கின்றனர். நடந்து செல்பவர்களின் கால்களின் எண்ணிக்கை 70 எனில், அதில் உள்ள குதிரைகளின் எண்ணிக்கையைக் காண்க.

Answer

இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 72. பெரிய எண் சிறிய எண்ணைப் போல 5 மடங்கு எனில், அந்த எண்கள் யாவை?

Answer

ஒரு எண்ணின் 3 மடங்கிலிருந்து 6 ஐக் கழித்தால் 18 கிடைக்கும் அந்த எண் யாது?

Answer

ஒரு பேருந்து X என்ற நகரத்திலிருந்து புறப்படும்போது அதில் உள்ள மொத்த பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையில் பாதியாகும். பிறகு நகரம் Y ல் 10 ஆண்கள் இறங்கினார்கள் மற்றும் 5 பெண்கள் உள்ளே நுழைந்தார்கள், இப்போது மொத்த ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை சமமாக உள்ளது. எனவே, முதலில் எத்தனை பயணிகள் பேருந்தில் இருந்திருக்க கூடும்?

Answer

ஒரு கூட்டத்தில் உள்ள பசுக்கள் மற்றும் கோழிகளின் கால்களின் எண்ணிக்கையானது அவற்றின் தலைகளின் எண்ணிக்கையைவிட 14 அதிகமாகும். ஆகவே மொத்த பசுக்களின் எண்ணிக்கையைக் காண்க.

Answer

ஒரு எண்ணின் பாதியுடன் அந்த எண்ணின் ஐந்தில் ஒருபங்கைக் கூட்டினால் 21 கிடைக்கிறது. அந்த எண் யாது?

Answer

அடுத்தடுத்து மூன்று ஒற்றை எண்களின் கூடுதல் 51. அந்த எண்களைக் காண்க.

Answer

ஒரு சீருடைக்குத் தேவையான துணியின் நீளம் 2.25மீ எனில், 47.25 மீட்டர் துணியில் எத்தனை சீருடைகள் தைக்கலாம்?

Answer

ஒரு மாணவன் பதிலளித்த 48 வினாக்களில் ஒவ்வொரு சரியான விடையளித்ததை அடுத்து இரண்டு தவறான வினாக்களுக்கு விடையளிக்கிறான் எனில் அவர் எத்தனை சரியான வினாக்களுக்கு விடையளித்து இருப்பார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us