Easy Tutorial
For Competitive Exams

Aptitude-தமிழ் பரப்பளவு & சுற்றளவு சூத்திரங்கள் (Formulas)

பரப்பளவு

ஒரு பொருள் சமதளப் பகுதியின் அடைக்கும் இடத்தின் அளவு அதன் பரப்பளவு எனப்படும்.

சுற்றளவு

  • ஒரு மூடிய வடிவத்தின் எல்லையின் மொத்த நீளம் அதன் சுறறளவு எனப்படும்
  • செவ்வகத்தின் சுற்றளவு = 2 ( நீளம் + அகலம் )அலகுகள்
  • சதுரத்தின் சுற்றளவு = 4 x பக்கம் அலகுகள்
  • முக்கோணத்தின் சுற்றளவு = மூன்று பக்கங்களின் கூடுதல் அலகுகள்
  • செங்கோண முக்கோணத்தின் சுற்றளவு = அடிப்பக்கம் +உயரம் +காணம்
  • சாய்சதுரத்தின் சுற்றளவு = நான்கு பக்க அளவுகளின் கூடுதல்
  • நாற்கரத்தின் சுற்றளவு = நான்கு பக்க அளவுகளின் கூடுதல்
  • சரிவகத்தின் சுற்றளவு = நான்கு பக்க அளவுகளின் கூடுதல்
  • இரு சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு $2a + 2 \sqrt (a^2 - h^2)$
  • வட்டத்தின் சுற்றளவு P = $2 \pi$ r அலகுகள்
  • அரை வட்டத்தின் சுற்றளவு P = ( $\pi$+2) r அலகுகள்
  • கால் வட்டத்தின் சுற்றளவு P = ( $\dfrac{\pi}{2}$+2) r அலகுகள்
  • ஒரு வட்டகோணப்பகுதியின் சுற்றளவு p= l+2r
  • குறிப்புகள்

    • இரண்டு அசம பக்க முக்கோணங்கள் இணைந்தால் கிடைப்பது நாற்கரம்
    • இரு செங்கோண முக்கோணங்கள் மற்றும் செவ்வகம் இணைந்தால் கிடைப்பது சரிவகம்
    • ஆறு சமபக்க முக்கோணங்கள் இணைந்தால் கிடைப்பது அறுங்கோணம்
    • வட்ட மையக்கோணம் 360°
    • அரை வட்டத்தின் மையக்கோணம் 180°
    • கால் வட்ட மையக்கோணம் 90 °
    • செவ்வகத்தின் பரப்பு இரு செங்கோண முக்கோணத்தின் பரப்புக்கு சமம்

    கன அளவு

    • கன செவ்வகத்தின் கன அளவு =l b h
    • கனசதுரத்தின் கன அளவு V= $a^3$
    • குழாய் வழியே பாயும் தண்ணின் கன அளவு = குறுக்கு வெட்டுப் பரப்பு X வேகம் X நேரம்
    • முக்கோணப்பட்டகததின் கன அளவு =Ah
    • உருக்கி தயாரிக்கப்படும் புதிய கன உருவங்களின் எண்ணிக்கை =உருக்கப்பட்ட கன உருவத்தின் கன அளவு /உருவாக்கப்பட்ட கன உருவத்தின் கன அளவு

    மொத்தபரப்பு & புறப்பரப்பு

    • கன செவ்வகத்தின் மொத்தபரப்பு= 2 (Ib + bh + Ih)
    • கன சதுரத்தின் மொத்த பரப்பு= 6$a^2$
    • முக்கோணப்பட்டகத்தின் மொததப்பரப்பு ph + 2A
    • வில்லின் நீளம் I அலகுகள் ஆரம் r அலகுகள் உள்ள வட்டகோணப்பகுதியின் பரப்பு$A=\dfrac{1}{2}lr $
    • முக்கோணப்பட்டகத்தின் புறப்பரப்பு=ph
    • கன செவ்வகத்தின் பக்கபரப்பு 2h(l+ b)
    • கன சதுரத்தின் பக்கபரப்பு = 4 $a^2$
    • கூம்பின் வளைபரப்பு= வட்ட கோணப்பகுதியின் பரப்பு $pi r l=\dfrac{D}{360} \pi r^2 $
    Share with Friends