Easy Tutorial
For Competitive Exams

GS - Indian National Movement (இந்திய தேசிய இயக்கம்) INM - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Notes

மைசூர் போர்கள் (கி.பி. 1767-1799)

  • மைசூர் போர்கள் ஆங்கிலேயர்களுக்கும், ஹைதர் அலி மற்றும் திப்புசுல்தான் ஆகியோருக்கும் இடையே ஏற்பட்ட போர்களாகும்.
  • ஹைதர் அலி மைசூர் இராணுவத்தின் சாதாரண அலுவலராக பணியைத் தொடங்கினார். கி.பி. 1761ல் நஞ்சராஜாவை பதவி நீக்கம் செய்து தனது அதிகாரத்தை மைசூர் அரசில் நிலைநாட்டினார்.
  • பின்னர் படிப்படியாக முன்னேறி மைசூர் பகுதியின் அரசனாக முடிசூடிக் கொண்டார்.
  • ஹைதர் அலியின் வேகமான வளர்ச்சி ஹைதரபாத் நிஜாம், மராத்தியர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் ஆகியோரின் பொறாமையைத் தூண்டியது.
  • எனவே கி.பி. 1766 ல் ஹைதர் அலிக்கு எதிராக ஆங்கிலேயர்கள், மராத்தியர்கள், ஹைதராபாத் நிஜாம்கள் ஆகியோர் இணைந்து ஒரு உடன்படிக்கையைச் செய்துக் கொண்டனர்.

திப்பு சுல்தான்

  • திப்பு சுல்தான் ஐதர் அலியின் மகன்
  • 1753-ல் மைசூரில் பிறந்தார்
  • சிறந்த நிர்வாகத்தினால் மைசூர் புலி என அழைக்கப்பட்டார்
  • இவரின் அரியணையிலும், வீரர்களின் சீருடையிலும் புலி சின்னம் பொறிக்கப்பட்டது
  • இவர் இறந்த பின் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் அடக்கம் செய்யப்பட்டார்

முதலாம் மைசூர் போர் (1767-69)

  • கி.பி. 1767 ல் ஸ்மித் என்ற ஆங்கிலேயப் படைத்தளபதி சென்னைக்கு அருகே செங்கம் எனுமிடத்தில் ஹைதர் அலியைத் தோற்கடித்தார்.
  • ஆகாஷ் அதேசமயம் ஹைதர் அலியின் மகன் திப்புசுல்தான் தன் படைகளுடன் சென்னையை முற்றுகையிட்டார் எனவே முதல் மைசூர் போர் கி.பி. 1769 ல் சென்னை உடன்படிக்கையின்படி முடிவுக்கு வந்தது.
  • இந்த உடன்படிக்கையின் படி கைப்பற்றப்பட்ட இடங்கள் பரஸ்பரம் மாற்றிக் கொள்ளப்பட்டது.
  • மேலும் தேவையான நேரத்தில் இருவரும் படை உதவி அளிப்பதாக ஒப்பந்தம் கையெழுத்தானது.

2-ம்மைசூர் போர் (1780 - 84)

  • கி.பி. 1771-ல் மராத்தியர்கள் மைசூர் மீது போர் தொடுத்த போது ஆங்கிலேயர் உடன்படிக்கையின் படி உதவவில்லை .
  • கி.பி. 1780 ல் ஹைதர் அலியின் பகுதியில் இருந்த பிரெஞ்சுக்கு சொந்தமான மாஹியை ஆங்கிலேயர்கள் தாக்கியப்போது ஹைதர் அலி இரண்டாம் மைசூர் போரை அறிவித்தார்.
  • 1781-ல் ஆங்கில தளபதி சர் அயர் கூட்' என்பவர் ஹைதர் அலியை போர்டோ நோவா எனுமிடத்தில் தோற்கடித்தார்.
  • பின் ஹைதர் அலி புற்று நோயால் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அவரது மகன் திப்பு சுல்தான் பொறுப்பேற்றார்.
  • 1784-ல் திப்பு சுல்தான் ஆங்கிலேயருடன் உடன்படிக்கை செய்து 2-ம் மைசூர் போரை முடித்தார்.
  • கி.பி. 1784-ல் மங்களூர் உடன்படிக்கையின் மூலம் முடிவுக்கு வந்தது.
  • மங்களூர் உடன்படிக்கை திப்புவிற்கும், மெட்ராஸ் கவர்னர் மெக்கட் டெனிக்கும் இடையே கையெப்பம் ஆனது.
  • இந்த உடன்படிக்கையின் படி திப்பு சுல்தான் எதிர்காலத்தில் கர்நாடகப் பகுதிகளை உரிமைக் கோரக் கூடாது.

மூன்றாம் மைசூர் போர் (1790 - 92)

  • கி.பி. 1787 ல் திப்புசுல்தான் பிரான்ஸ் மற்றும் துருக்கி நாட்டிடம் உதவி கேட்டு தூதுவர்களை அனுப்பினார்.
  • 2-ம் மைசூர் போர் மங்களூர் உடன்படிக்கையின் படி 1784-ல் முடிவுக்கு வந்தபின் தக்காணத்தில் ஆட்சியை இ பலப்படுத்த திப்பு சுல்தானும் ஆங்கிலேயரும் போட்டியிட்டனர்.
  • கி.பி. 1789 ல் திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களின் நட்பு நாடான திருவிதாங்கூரை கைப்பற்ற முயன்றார்.
  • இதனால் கி.பி. 1790-ல் ஆங்கிலேயத் தளபதி காரன் வாலிஸ் மூன்றாம் மைசூர் போரை அறிவித்தார்.
  • கி.பி. 1792-ல் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டார். கி.பி. 1792-ல் ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை மூலம் போர் முடிந்தது இந்த உடன்படிக்கையின் படி 3 கோடி ரூபாய் இழப்பீடு தொகையாக வழங்கவேண்டும்.
  • அதுவரை திப்புவின் இரு புதல்வர்களையும் பிணைக் கைதிகளாக ஆங்கிலேயரிடம் ஒப்படைக்க வேண்டும்.

நான்காம் மைசூர் போர் (1799)

  • மதிப்பு சுல்தான் தான் இழந்த பகுதிகளை திரும்பப்பெற முயற்சித்ததால் நான்காம் மைசூர் போர் ஏற்பட்டது.
  • கி.பி. 1799 ல் வெல்லஸ்லி பிரவுவின் துணைப்படைத் திட்டத்தை திப்புசுல்தான் ஏற்க மறுத்ததால், வெல்லஸ்லி பிரவு திப்புவின் மீது படையெடுத்தார்.
  • இப்போரில் திப்புசுல்தான் தோற்கடிக்கப்பட்டு , ஸ்ரீரங்கப்பட்டினத்தை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர்.
  • கி.பி. 1799 ல் மே மாதம் 4ம் தேதி வெல்லஸ்லி பிரபுவால் திப்புசுல்தான் கொல்லப்பட்டார்.
  • பின்னர் மைசூரின் மத்தியப் பகுதியில் வாடியார் மரபைச் சேர்ந்த கிருஷ்ணராஜாவுக்கு அளிக்கப்பட்டது.
  • திப்புவின் குடும்பம் வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டது.

பாளையக்காரர்களின் கிளர்ச்சி

  • பாளையக்காரர்களில் இரண்டு பிரிவினர் இருந்தனர்.
  • மேற்குப் பிரிவில் மறவர் பாளையக்காரர்களும், தெற்குப்பிரிவில் தெலுங்கு பாளையக்காரர்களும் இருந்தனர்.
  • நெல்கட்டும் செவல் பாளையத்தின் பூலித்தேவர் மறவர் பிரிவுக்கும் பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்த கட்டபொம்மன் தெலுங்கு பிரிவுக்கும் தலைவர்களாகக் கருதலாம்.
  • இவ்விருவருமே நவாப்பிற்கு செலுத்த வேண்டிய இஸ்த் அல்லது கப்பம் கட்ட மறுத்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

பூலித்தேவர்

  • 1755ல் மாபஸ்கான் பிரிட்டிஷ் படைத்தளபதி கர்னல் ஹெரான் தலைமையிலான படைகளின் உதவியோடு பாளையக்காரர்கள்மீது படையெடுத்தார்.
  • மேற்கிலிருந்த மறவர்களை ஒன்று சேர்த்து தனது நிலையை பூலித்தேவர் மேலும் வலிமைப்படுத்திக் கொண்டார்.
  • பிரிட்டிஷாருக்கு எதிராக மைசூரின் ஹைதர் அலி மற்றும் பிரஞ்சுக்காரர்களின் உதவியையும் நாடினார்.
  • பிரிட்டிஷார் ராமநாதபுரம், புதுக்கோட்டை அரசுகளிடமும் டச்சுக்காரர்களிடமும் ஆதரவு கோரினார்.
  • ஹைதர் அலி ஏற்கனவே மராட்டியருடன் மோதலில் ஈடுபட்டிருந்தமையால் பூலித்தேவருக்கு உதவ முடியவில்லை.
  • பூலித்தேவரையும் அவரது கூட்டாளிகளையும் அடக்கும் பொறுப்பை பிரிட்டிஷார் யூசுப் கானிடம் (கான்சாகிப்) ஒப்படைத்தனர்.
  • பூலித்தேவர் மதுரையைத் தாக்கி மாபஸ்கானிடமிருந்து அதனைக் கைப்பற்றினார்.
  • ஆனால் மறுபடியும் மாபஸ்கான் மதுரையை மீட்டார்.
  • கிழக்கத்திய பாளையக்காரர்கள் மற்றும் திருவாங்கூர் அரசரின் உதவியோடு யூசுப்கான் பல வெற்றிகளைப் பெற்றார்.
  • 1759ல் நெல்கட்டும் செவல் மீது தாக்குதல் தொடர்ந்தது.
  • 1767ல் அது கர்னல் காம்ப்பெல் என்பவரால் கைப்பற்றப்பட்டது.

வீரபாண்டிய கட்டபொம்மன்

  • தனது தந்தை ஜெகவீர பாண்டியனின் மறைவுக்குப்பிறகு, முப்பதாவது வயதில் வீரபாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராக பொறுப்பேற்றார்.
  • பல்வேறு சம்பவங்களால் கட்டபொம்மனுக்கும் கிழக்கிந்திய வணிகக்குழுவிற்கும் சச்சரவுகள் தோன்றின.
  • கப்பம் கட்டுவது சச்சரவுக்கு முக்கிய காரணமாயிற்று.
  • 1792 ஆம் ஆண்டு கர்நாடக உடன்படிக்கைப்படி ஆற்காடு நவாப் இந்த உரிமையை ஆங்கிலேயருக்கு கொடுத்திருந்தார்.
  • 1798ல் கட்டபொம்மன் கட்டவேண்டிய கப்பம் நிலுவையிலிருந்தது.
  • 1798 மே 31ம் நாள் கணக்குப்படி கட்டபொம்மன் கட்டவேண்டிய கப்பத்தொகை நிலுவை 3310 பகோடாக்களாகும். (பகோடா என்பது ரூபாய்).
  • ஜாக்சன் தனது படையை கட்டபொம்மனுக்கு எதிராக அனுப்ப விரும்பினார். ஆனால் சென்னை அரசாங்கம் அனுமதிக்கவில்லை.
  • 1798 ஆகஸ்ட் 18ம் நாள் தம்மை ராமநாதபுரத்தில் வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு ஆணையனுப்பினார்.
  • ஜாக்சனை சந்திக்க கட்டபொம்மன் திருக்குற்றாலத்திலும், ஸ்ரீவில்லிபுத்தூரிலும் இருமுறை முயற்சித்தார். ஆனால், அவமதிப்பே மிஞ்சியது.
  • லெப்டினென்ட் கிளார்க் உள்ளிட்ட சிலர் கொல்லப்பட்டனர். சுப்ரமணிய பிள்ளை கைது செய்யப்பட்டார். கட்டபொம்மன் தப்பிச் சென்றார்.
  • பாஞ்சாலங்குறிச்சி திரும்பிய கட்டபொம்மன் நடந்த உண்மைகளை விளக்கி சென்னை அரசாங்கத்துக்கு மேல் முறையீடு செய்தார்.
  • 1799 மே திங்களில் சென்னையிலிருந்த வெல்லெஸ்லி பிரபு திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை போன்ற இடங்களிலிருந்த பிரிட்டிஷ் படைகளை திருநெல்வேலிக்கு செல்லுமாறு உத்தரவிட்டார்.
  • கட்டபொம்மன் குற்றமற்றவர் என்று வில்லியம் பிரவுன், வில்லியம் ஆரம், ஜான் காஸாமேயர் ஆகியோர் அடங்கிய குழு தீர்மானித்தது. ஜாக்சனுக்குப் பதில் எஸ்.ஆர். லூஷிங்டன் என்பவர் கலெக்டராக நியமிக்கப்பட்டார். பின்னர், ஜாக்சன் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுப்பு

  • 1799 மே திங்களில் சென்னையிலிருந்த வெல்லெஸ்லி பிரபு திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை போன்ற இடங்களிலிருந்த பிரிட்டிஷ் படைகளை திருநெல்வேலிக்கு செல்லுமாறு உத்தரவிட்டார்.
  • 1799 செப்டம்பர் முதல் நாள் கட்டபொம்மனை சரணடையுமாறு அவர் இறுதி எச்சரிக்கை விடுத்தார்.
  • 4ம் தேதி பாளையங்கோட்டையில் வந்து சந்திக்குமாறும் கூறினார்.
  • செப்டம்பர் 5 ஆம் நாள் கட்டபொம்மனின் கோட்டை தாக்கப்பட்டது.
  • 16 ஆம் நாள் பாளையங்கோட்டைக்கு மேலும் தளவாடங்கள் வந்து சேர்ந்தன.
  • கோலார்பட்டியில் நடந்த மோதலில் பாளையக்காரர் படை பலத்த சேதமடைந்தது.
  • சிவசுப்ரமணியபிள்ளை மீண்டும் சிறைப்பிடிக்கப்பட்டார்.
  • கட்டபொம்மன் புதுக்கோட்டைக்கு தப்பியோடினார்.

கட்டபொம்மனின் வீழ்ச்சி

  • செப்டம்பர் 13 ஆம் நாள் சிவசுப்ரமணிய பிள்ளை நாகலாபுரத்தில் தூக்கிலிடப்பட்டார்.
  • அக்டோபர் 16 ஆம் நாள் கயத்தாற்றில் கூடியிருந்த பாளையக்காரர்கள் முன்னிலையில் கட்டபொம்மன் மீது விசாரணை நடத்தப்பட்டது.
  • அக்டோபர் 1 ஆம் நாள் கட்டபொம்மன் கயத்தாறு கோட்டைக்கு அருகில் தூக்கிலிடப்பட்டார்.
  • வீரபாண்டிய கட்டபொம்மன் தனது வாழ்வின் இறுதி நேரத்தை ஒரு வீரனுக்குரிய பெருமிதத்துடன் எதிர்கொண்டார்.

மருது சகோதரர்கள்

  • 1799ல் பாளையக்காரர்கள் கடுமையான வகையில் ஒடுக்கப்பட்ட போதிலும், 1800ல் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது.
  • 1800 - 1801 ஆண்டு கிளர்ச்சி இரண்டாவது பாளையக்காரர் போர்
  • சிவகங்கையைச் சேர்ந்த மருதுபாண்டியர், திண்டுக்கல் கோபால நாயக்கர், மலபாரின் கேரளவர்மா, மைசூரின் கிருஷ்ணப்ப நாயக்கர் மற்றும் துண்டாஜி ஆகியோர் அடங்கிய ஒரு பெரும் கூட்டிணைவு இக்கிளர்ச்சியை முன்னின்று நடத்தியது.
  • 1800 ஜூன் மாதம் கோயம்புத்தூரில் வெடித்த கலகம் விரைவில் ராமநாதபுரம், மதுரைப் பகுதிகளுக்கும் பரவியது.
  • 1801 மே மாதத்தில் வடக்கு பகுதிகளிலும் கலகங்கள் தோன்றின. மருது பாண்டியர், மேலப்பர் ஆகியோர் இதற்கு தலைமை வகித்தனர்.
  • 1801 பிப்ரவரியில் ஊமைத்துரையும் அவருடன் சென்ற 200 பேரும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை சாமர்த்தியமாக கைப்பற்றினர்.
  • கோட்டை மீண்டும் புனரமைக்கப்பட்டு எழுச்சியின் மையமாக மீண்டும் உருவெடுத்தது.
  • மருதுபாண்டியரால் அனுப்பிவைக்கப்பட்ட மதுரை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த 3000 பேர் பாஞ்சாலங்குறிச்சி படைகளுடன் இணைந்து கொண்டனர்.
  • பிரிட்டிஷ் படைகள் சுதாரித்துக்கொண்டு, பாஞ்சாலங்குறிச்சிப் படைகளை வீழ்த்தின. அரசாங்கத்தின் உத்திரவின் பேரில் கோட்டை தரைமட்டமாக்கப்பட்டு, உழவு செய்யப்பட்டு, மீண்டும் குடிபுகாத வண்ணம் உப்பும் ஆமணக்கு எண்ணெய்யும் தூவப்பட்டது.
  • எஞ்சியிருந்த கலகக்காரர்களையும் பிரிட்டிஷ் படைகள் முறியடித்தன.
  • 1801 நவம்பர் 16 ஆம் நாள் பாஞ்சாலங்குறிச்சியில் ஊமைத்துரை, செவத்தையா ஆகியோரின் தலைகள் துண்டிக்கப்பட்டன.
  • 1799 மற்றும் 1800 - 1801 ஆண்டுகளில் நடைபெற்ற பாளையக்காரர் கிளர்ச்சிகளை ஒடுக்கியதன் மூலம் குறுநிலத்தலைவர்கள் அறவே ஒழிக்கப்பட்டனர்.
  • 1801 ஜூலை 31ல் கையெழுத்திடப்பட்ட கர்நாடக உடன்படிக்கைப்படி, தமிழ்நாடு முழுவதையும் பிரிட்டிஷார் தம் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.
  • பாளையக்காரர் முறை முடிவை சந்தித்தது. வணிகக்குழு அந்த இடங்களில் ஐமீன்தாரி முறையை அறிமுகப்படுத்தியது.

வேலூர் கலகம் - (Vellore Mutiny 1806)

  • தமிழ்நாட்டின் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தின் தலைநகரம் வேலூர். தற்போது வேலூர் மாவட்டம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.
  • 1806 ல் வேலூரிலிருந்த இந்திய சிப்பாய்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.
  • காரணங்கள் (causes) தராஸின் ஆளுநராக இருந்த வில்லியம் பெண்டிங் பிரபுவின் அனுமதியோடு படைத்தளபதி சர் ஜான் கிரடாக் என்பவர் தலைப்பாகையுடன் கூடிய புதிய சீருடையை அறிமுகப்படுத்தினார்.
  • இந்த தலைப்பாகை ஐரோப்பிய தொப்பியைப் போலவே இருந்தது. காதணிகளை அணிவதும், சமய சின்னங்களை இட்டுக் கொள்வதும் தடை செய்யப்பட்டன.
  • மேலும் சிப்பாய்கள் தங்கள் முகத்தை நன்றாக மழித்து, மீசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும் என்று விதிக்கப்பட்டனர்.
  • ஆனால் இந்த நடவடிக்கைகளை தங்களது சமய மற்றும் சமூகப்பழக்கவழக்கங்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாக சிப்பாய்கள் கருதினார்கள்.
  • மேலும் அனைவரையும் கிறித்துவ சமயத்திற்கு மாற்றும் முயற்சிக்கு இது முன்னோடி என்ற கருத்து பரவியது.
  • ஜூன் 17-ம் தேதி 1806 ஆம் ஆண்டு முதலாம் படைப்பிரிவைச் சேர்ந்த சிப்பாய் முஸ்தபா பெக் தன் உயர் அதிகாரி கர்னல் போர்ப்ஸிடம், ஐரோப்பிய இராணுவ அதிகாரிகளையும் துருப்புகளையும் பூண்டோடு அழிப்பதற்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்பதை தெரிவித்தார்.
  • ஆனால் அவரது செய்திக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை . * வேலூர் கலகம் உருவாவதற்கு முன்பு முன்பு திப்பு சுல்தானின் மூத்த மகன் பதே ஹைதர் மற்றும் மொய்சுதீன் ஆகிய இருவரும் இணைந்து திட்டம் தீட்டினர்.
  • மீண்டும் முஸ்லீம் ஆட்சியை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக வேலூர்கலகம் நடைபெற்றது.
  • புலித்தேவர், கான்சாகிப் கட்டபொம்மன் மருது சகோதரர்கள், திப்பு சுல்தான் போன்றோருக்கு ஏற்பட்ட நிலையால் கசப்புணர்வு கொண்ட சிப்பாய்கள் வேலூர் கலகத்தின் ஈடுபட்டனர்.

கலகத்தின் போக்கு (Course)

  • ஜூலை 10 ம் நாள் விடியற்காலை 1 மற்றும் 23ம் படைப்பிரிவை சேர்ந்த இந்திய சிப்பாய்கள் கலகத்தை தோற்றுவித்தனர்.
  • இப்படைப் பிரிவுகளின் இராணுவ அதிகாரி கர்னல் பான் கோர்ட் முதலில் பலியானார்.
  • 23ம் படைப் பிரிவின் இராணுவ அதிகாரியான கர்னல் மி கேரஸ், அணி வகுப்பு மைதானத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டார்.
  • அடுத்து கொல்லப்பட்ட இராணுவ அதிகாரி மேஜர் ஆம்ஸ் ட்ராங் ஆவார்.
  • ஏறத்தாழ 12க்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
  • வேலூர் கோட்டைக்கு வெளியே இருந்த மேஜர் கூட்ஸ் 14 மைல்களுக்கு அப்பாலுள்ள இராணிப்பேட்டைக்கு விரைந்து சென்று அங்கிருந்த இராணுவத்தளபதி கர்னல் ஜில்லஸ்பியிடம் காலை 7 மணியளவில் வேலூர் புரட்சியைப் பற்றி தகவல் தெரிவித்தார்.
  • சுமார் காலை 9 மணியளவில் ஜில்லஸ்பி இராணுவப்படையுடன் வேலூர் கோட்டையை அடைந்தார்.
  • அதற்குள் கிளர்ச்சியாளர்கள் திப்பு சுல்தானின் மூத்த மகன் பதே ஹைதரை புதிய சுல்தானாக அறிவித்து திப்பு சுல்தானின் புலிக்கொடியையும் பறக்க விட்டனர்.
  • ஆனால் இக்கிளர்ச்சி கர்னல் ஜில்லெஸ்பியினால் உடனடியாக அடக்கப்பட்டது. கோட்டைக்குள் மட்டும் 800 இந்திய சிப்பாய்கள் கொல்லப்பட்டனர்.
  • திருச்சியிலும் வேலூரிலும் 600 சிப்பாய்கள் சிறைப்படுத்தப்பட்டனர். சிலர் தூக்கிலிடப்பட்டனர்.
  • இறுதியாக திப்புவின் மகன் கல்கத்தாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
  • படைத்தளபதியும், சென்னை ஆளுநரும் திருப்பியழைக்கப் பட்டனர்.
  • முறையாக திட்டமிடப்படாததால் வேலூர் கலகம் தோல்வியில் முடிந்தது.

மதிப்பீடு

  • 1857 ஆம் ஆண்டு முதல் இந்திய சுதந்திரப் போருக்கு வேலூர் கலகம் முன்னோடி என்று சவார்க்கர் கருதுகின்றார்.
  • ஆனால் வேலூர்க்கலகம் 1857 ம் ஆண்டு சிப்பாய் கலகத்திற்கு வழி வகுத்தது என்ற கூற்றை கே.கே. பிள்ளை என்ற வரலாற்று ஆசிரியர் மறுக்கிறார்.
  • இந்திய விடுதலைக்கு தமிழர்களே முன்னோடிகளாக திகழ்ந்தனர் படு என்று சஞ்சீவி கூறியுள்ளார்.
  • காலனியாதிக்கத்தை எதிர்த்து மருது சகோதரர்கள் நடத்திய போராட்டத்தின் தொடர்ச்சியே வேலூர் கலகம் என்று கே. ராசய்யன் என்ற வரலாற்று அறிஞர் கருதுகிறார்.

பழங்குடியினர் கிளர்ச்சிகள் - (கோல் கிளர்ச்சி)

  • பழங்குடியினர் கிளர்ச்சிகள் ஆங்கிலேயர்கள் 1865ஆம் ஆண்டு முதலாவது வனச்சட்டத்தை நிறைவேற்றினார்கள்.
  • வனங்களை வர்த்தகமயமாக்கும் நடவடிக்கைகளுக்கு ஆங்கிலேய ஆட்சியில் ஊக்கம் கிடைத்தது.
  • அதனால் பழங்குடியினர் பகுதிகளில் பழங்குடியினர் அல்லாதோரான வட்டிக்கு பணம் கொடுப்போர், வர்த்தகர்கள், நில ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஊடுருவுவதற்கு அது ஊக்கம் தந்தது.
  • சுள்ளி எடுப்பது, கால்நடைத் தீவனம் மற்றும் தேன், விதைகள், மருத்துவ மூலிகைகள், கொட்டைகள் ஆகிய சிறிய அளவிலான வன உற்பத்திப் பொருட்களையும் வனப்பகுதிகளில் இருந்து சேகரிக்க இந்தச் சட்டம் வனத்தில் வாழ்வோருக்கு தடைவிதித்தது.
  • கொடுமையான குற்றப் பழங்குடியினர் சட்டம், 1871-இல் இயற்றப்பட்டது.
  • 1878ஆம் ஆண்டின் இந்திய வனங்கள் சட்டத்தின் படி வனங்களின் உரிமை அரசிடம் இருந்தது.
  • நன்செய்மற்றும் தரிசு நிலங்களும் வனங்களாக கருதப்பட்டன.
  • பழங்குடியினர் பயன்படுத்திய சுழற்சி முறை விவசாயம் தடைசெய்யப்பட்டது. உள்ளூர் மக்களின் கட்டுப்பாட்டில் இருந்து வனப்பகுதிகளை தள்ளி வைப்பதற்கு பாதிக்கப்பட்ட ஆதிவாசிகளும் தேசியவாதிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
  • பழங்குடியினர் நடத்திய தொடர் ஆர்ப்பாட்டங்களுக்கு மிக முக்கிய ஆதாரமாக ராம்பாவில் அல்லூரி சீதாராம் ராஜு தலைமையிலான ஆர்ப்பாட்டத்தைக் குறிப்பிடலாம்.
  • கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்த (விசாகப்பட்டினம் மற்றும் கோதாவரி மாவட்டங்களைச் சேர்ந்த ஆதிவாசி பகுதிகளை தனது இல்லீமாக கருதிய அவர்அங்கிருந்து ஆதிவாசிகளுக்காக உழைத்தார்.
  • அல்லூரி சீதாராம ராஜு அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதிவாசிகள்கடுமையான வறுமையில் வாடினார்கள்.
  • மான்யம் (என்றழைக்கப்பட்ட வனப்பகுதியில்) காவல்துறை, வனத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகளால் அவர்கள் துன்புறுத்தப்பட்டனர்.
  • ராம்பாபகுதி ஆதிவாசிகளின் நலன் காப்பதற்காக ஊழல் அதிகாரிகளுடன் அல்லூரி சீதாராம ராஜு போராடியதால் அவரது உயிரைக்குறிவைத்து ஆங்கிலேய அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.
  • ராம்பாஆதிவாசிகளின் கிளர்ச்சியை அடக்குவதற்காக (1922-24) மலபார் காவல்துறையின் சிறப்புக்குழு அனுப்பிவைக்கப்பட்டது.
  • வனவாசிகளின் நலனுக்காகப் போராடிய அல்லூரி சீதாராம ராஜு தியாகி ஆனார்.

பழங்குடியினர் , யார் அவர்கள்?

  • இந்தியாவில் பழங்குடியினர் என்ற வார்த்தையின் நவீன பயன்பாடு சாதிய அடிப்படையில் எஞ்சிய இந்திய சமூகத்தை விடுத்து அவர்களின் அடையாளத்தை விவரிப்பதைக் கட்டுப்படுத்துகிற்து.
  • அவ்வப்போது தனிப்பட்ட குழுக்களை குறிப்பதற்காக இந்த வார்த்தைப் பெரிதும் தவறாக பயன்படுத்தப்படுகிறது.
  • இந்தியாவில் உள்ள பழங்குடியினர் இந்திய சமூகத்தின் ஒரு பகுதியாக இருந்தனர்.
  • இந்திய வேளாண்மைச் சூழலுக்கு ஏற்றவாறு அவர்கள் இடம்பெயர் வேளாண்மை முறையை பின்பற்றினர்.

கோல்களின் கிளர்ச்சி (1831 - 32)

  • கோல் என்ற பழங்குடி இனத்தினர் பீகாரிலும் ஒரிசாவிலும் சோட்டா நாக்பூர், சிங்பும் ஆகிய பகுதிகளில் வாழ்ந்தனர்.
  • சோட்டா நாக்பூர் ராஜா பல கிராமங்களை பழங்குடி அல்லாதவருக்கு குத்தகைக்கு விட்டது கோல் கிளர்ச்சிக்கு உடனடி கார்ணம்.
  • சோன்பூர், தமர் ஆகிய பகுதிகளில் வசித்த கோல்கள் திக்காடர்களுக்கு (வரி வசூலிப்போர்) எதிரான கிளர்ச்சியை நடத்துவதற்கு முதல் முயற்சியை எடுத்தனர்.
  • கோல்கள் இனத்தவர்கள் உயிர்சேதம் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.
  • இருந்தும் பணம் கொடுப்பவர் மற்றும் வர்த்தகர்கள் கொல்லப்பட்டனர். கொள்ளையடிப்பதும் சொத்துக்களுக்கு தீ வைப்பதும் அவர்களது கிளர்ச்சியில் முக்கிய வழி முறைகளாக இருந்தன.
  • பமங்குடி இன தலைவர்கள் தங்கள் கிளர்ச்சி பற்றிய செய்தியை மேளங்களை முழங்கியும், அம்புகளை எய்தும், வெளியாட்களை வெளியேற செய்யும் எச்சரிக்கைகளை செய்தும் பரப்பினர்.
  • 1831 டிசம்பர் 20, சோட்டா நாக்பூரில் உள்ள சோனிப்பூர் பர்கானா 700 கிளர்ச்சியாளர்கள் அடங்கிய குழுவால் தாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டது.
  • 1832 ஜனவரி 26க்குள் கோல்கள் சோட்டா நாக்பூர் முழுவதையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள்.
  • மிகத் தீவிரமாக ஒரு குறுகிய பரப்புக்குள் நடந்த சண்டையில் கோல் கிளர்ச்சியின் தலைவரான புத்த பகத் கொல்லப்பட்டார்.
  • துண்டிக்கப்பட்ட அவரது தலையை ஆட்சியாளர்களிடம் ஒப்படைப்பதற்காக அதிகாரிகள் ராணுவ வீரர்கள் ஆகியோர் இடையே ஓராயிரம் ரூபாய் விநியோகிக்கப்பட்டது கோல் கிளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்த பிந்த்ராய் மன்கி 1832 மார்ச் 19-ஆம் நாள் சரண் அடைந்ததும் கோல்களின் போராட்டம் ஒரு துயரமான முடிவுக்கு வந்தது.

சந்தால் கிளர்ச்சி (1855 - 56)

  • இந்தியாவில் கிழக்குப் பகுதிகளில் பரவலாக வாழ்ந்து வந்தவர்கள் சந்தாலர்கள்.
  • பழங்குடி மக்களான சந்தால்கள் வங்காளம், பீகார், ஒரிசா, ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு காட்டுப் பகுதிகளில் ஆங்காங்கே பரவியிருந்தபடி வாழ்ந்தார்கள்.
  • பீகாரில் உள்ள ராஜ்மஹால் குன்றுகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் வேளாண்மை செய்து வந்த மக்கள் - சந்தாலர்கள்.
  • இவர்கள் மஞ்சி என்று அறியப்பட்டார்கள். ராஜ்மஹால் குன்றுகளை சுற்றியுள்ள பகுதிகளைத் திருத்தி, அதை டாமின் - இ - கேர் (சந்தால்களின் நிலம்) என்று அழைத்தார்கள்.
  • நிரந்தர குடியிருப்புகளின் கீழ் ஜமீன்களை உருவாக்குவதற்காக தங்கள் பூர்விக இடத்தை விட்டு இடம்பெயர் வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
  • ராஜ்மஹால் மலையைச் சுற்றிலும் இருந்த வனப்பகுதியை விட்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டனர். ரயில்வே கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த ஐரோப்பிய அதிகாரிகள் மற்றும் உள்ளூர் காவலர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டனர்.
  • வெளியாட்களால் வெளியேற்றப்பட்ட அவர்கள் வாழ்வாதாரத்திற்காக வட்டிக்குப் பணம் கொடுப்பவர் சார்ந்து வாழ நிர்பந்திக்கப்பட்டனர். இதன் வெளிப்பாடாக 1854-ஆம் ஆண்டு வாக்கில் பல இடங்களில் சமூகக் கொள்ளை நடவடிக்கைகள் பீர் சிங் என்பவரின் தலைமையில் நடந்தன.
  • மகாஜன்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எதிராக குறிவைத்து இவை நடந்தன.
  • ஜமீன்தாரி நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்ட பீர்சிங் அங்கு அடித்து துன்புறுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்.
  • 1855இல் சித்தூர் மற்றும் காணு ஆகிய இரண்டு சகோதரர்கள் கிளர்ச்சியை தலைமையேற்று நடத்தி வேண்டி தங்களுக்கு கடவுளிடமிருந்து தேவ செய்தி கிடைத்ததாக அறிவித்தனர்.
  • இவர்கள் மகாஜன்கள் மற்றும் தரோகாக்களை (காவல்துறை அதிகாரிகளை) முற்றிலுமாக கொன்று குவிக்கவும், நாட்டில் வசதி படைத்த பெங்காலிகளையும் ஜமீன்தாரர்கள் மற்றும் வர்த்தகர்களை அழித்து ஒழிக்கவும், அவர்க்ளை அழிக்க முயன்ற அனைவரையும் அழிக்கவும், " அவர்களின் எதிரிகளின் குண்டுகள் நீராக மாறிவிடும்" ' என்று கடவுள் உத்தரவிட்டதாக 1855 ஜூன் 30இல் அவர்கள் தெரிவித்தனர்.
  • தமது கிளர்ச்சியானது மகாஜன்கள் (வட்டிக் கடைக்காரர்கள்), ஜமீன்தாரர்கள், ஆங்கிலேய அதிகாரிகள் (அரசாங்கம்) ஆகிய மூன்று தரப்பினரின் புனிதமற்ற கூட்டுக்கு எதிரானது என்று அவர்கள் குறிப்பிட்டார்கள்.
  • 1855ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்த கிளர்ச்சி வெளிப்படையான கிளர்ச்சியாக உருவெடுத்தது.
  • வில் மற்றும் விஷம் தடவிய அம்புகளை ஏந்தியவாறும், கோடாரிகள் கத்திகள் ஆகியவற்றுடனும் ராஜ்மஹால் மற்றும் பாகல்பூர் நோக்கி கம்பெனி ஆட்சிக்கு முடிவுகட்ட போவதாக முழக்கமிட்டபடி பேரணியாகச் சென்றனர்.
  • மகேஷ்பூர் போரில் மஞ்சிகளில் பெரும்பாலானவர்கள் சிவப்பு நிற உடையை அணிந்திருந்தார்கள்.
  • பின்னாட்களில் இது அதிகாரத்திற்கு உரிமை கோரும் அடையாளத்திற்கான ஆடையானது.
  • கிளர்ச்சி முதல் வாரத்தில் 10 பேர் அடங்கிய ஒரு குழு மோங்கபர்ரா எனும் கிராமத்தைத் தாக்கி தீக்கிரையாக்கியது.
  • தொடக்கத்தில் சித்தேர் சந்தால்களின் தலைவராக இருந்தார்.
  • அவர் கைது செய்யப்பட்ட பின்னர் காணு கிளர்ச்சியை நடத்தினார்.
  • ஆயிரக்கணக்கான விவசாயிகள் சார்லஸ் மசேக் அவுரி தொழிற்சாலையை தாக்கி கொள்ளை அடித்தார்கள்.
  • கிளர்ச்சியை ஒடுக்க ஆங்கிலேய தரப்பில் இருந்து ராணுவம் குவிக்கப்பட்டு கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
  • கிளர்ச்சி ஆனது பிப்ரவரி 1856 வரை தொடர்ந்தது.
  • கிளர்ச்சி முழுமையாக ஒடுக்கப்படும் முன் கிட்டத்தட்ட 15 முதல் 25 ஆயிரம் கிளர்ச்சியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1855-56 ல் விவசாயிகளின் எழுச்சியாக கருதப்பட்ட முதலாவது கலகம் - சந்தால் கலகம்.
  • 1855ம் சந்தாலர்கள் வசம் இருந்த பகுதிகளை ஒழுங்கு முறைப்படுத்துவது பற்றிய சட்டம் நிறைவேற்றப்பட்டது.
  • சாந்தல் பர்கானா மண்டலம் என்ற தனி மண்டலத்தை உருவாக்கும் வகையில் இந்த சட்டம் நிறைவேறியது.

முண்டா கிளர்ச்சி

  • ராஞ்சியில் 1899 - 1900 இக்காலகட்டத்தில் நடைபெற்ற உலுகுலன் கிளர்ச்சி (பெரிய கலகம்) பழங்குடியினர் கிளர்ச்சிகளில் மிக முக்கியமானதாக அறியப்படுகிறது. முண்டாக்கள் பீகார் பகுதிகளில் முக்கியத்துவம் வாய்ந்த பழங்குடிகள் ஆவர்.
  • கூட்டாக நிலத்தை வைத்துக் கொண்டு குண்ட்கட்டி என்ற முறையில் விவசாயம் செய்வதில் முண்டர் மக்கள் பெயர்பெற்றவர்கள்.
  • ஆங்கிலேயரின் ஆட்சியில் அவர்களின் பொது நில உரிமை முறை அழிக்கப்பட்டது. தோட்டங்களில் வேலை செய்ய முண்டா இன மக்கள் கொத்தடிமைகளாக வலுக்கட்டாயமாக பணியில் அமர்த்தப்பட்டனர்.
  • முண்டாக்களுக்கு சொந்தமான நிலங்களை ஜாகிர்தார்களும், திக்காடர்களும், வட்டிக்கடைக்காரர்களும் பறித்துக் கொண்டனர். பிர்சா முண்டா குத்தகைக்கு பயிரிடும் விவசாயிகளின் குடும்பத்தில் 1874 இல் பிறந்தார்.
  • பழங்குடி அல்லாதோர் பழங்குடியினரின் நிலங்களை ஆக்கிரமிப்பதை இவரது தலைமையில் முண்டாக்கள் எதிர்த்தார்கள்.
  • முண்டா இனத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஜமீன்தாரர்களுக்கு வாடகை செலுத்த வேண்டாம் என பிர்சா முண்டா வலியுறுத்தினார்.
  • பிர்சா முண்டா 'தம்மை கடவுளின் தூதர்' என்று அறிவித்தவுடன் இந்த இயக்கத்திற்கு ஊக்கம் கிடைத்தது.
  • தமக்கு இறைத் தொடர்பு இருப்பதாகக் கூறிய பிர்சா அண்டவெளியின் அதீத சக்திகளின் மூலமாக முண்டர் இன மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப் போவதாகவும், மக்களின் அரசை நிறுவப்போவதாகவும் பிர்சா உறுதியளித்தார்.
  • பிர்சா முண்டாவின் பிரபலத்தை பயன்படுத்தி மேலும் அதிக எண்ணிக்கையில் மக்களை இந்த நோக்கத்திற்காக ஒன்றிணைக்க முண்டா தலைவர்கள் முயன்ற னர். ) இரவுக் கூட்டங்கள் பல நடத்தப்பட்டு கிளர்ச்சி ஒன்றுக்கு திட்டமிடப்பட்டது.
  • 1899 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளில் அவர்கள் வன்முறையை கையில் எடுத்தனர்.கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
  • பிர்சா முண்டா சோட்டா நாக்பூர் பகுதியில் கிளர்ச்சியைத் துவங்கினார்.
  • 'சாயில் ரகப் என்னும் இடத்தில் முண்டா' சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கண்மூடித்தனமாக கொல்லப்பட்டார்கள்.
  • ஆங்கிலேய அதிகாரிகள் பிர்சாவைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்ததுடன், அவரைப் பிடித்து தருபவர்களுக்கு பரிசு அளிப்பதாகவும் அறிவித்தார்கள்.
  • 1900 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறையில் அடைக்கப்பட்ட பிர்சா 1900ம் ஆண்டு ஜூன் 9 ஆம் நாளில் தியாகியானார்.
  • பழங்குடியினரின் தலைவராக அறியப்பட்ட பிர்சா முண்டா இன்றளவும் பல நாட்டுப்புற பாடல்களில் போற்றப்படுகிறார்.
  • முண்டா கிளர்ச்சியை அடுத்து ஆங்கிலேயே அரசு பழங்குடியினர் நிலம் பற்றிய கொள்கையை வகுக்க முனைந்தது.
  • 1908ல் சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம் நிறைவேற்றப்பட்டு பழங்குடியினர் நிலத்தில் பழங்குடியினர் அல்லாதோர் நுழைவது தடுக்கப்பட்டது.

மாபெரும் புரட்சி கி.பி. 1857

  • கி.பி. 1857 புரட்சி ஆங்கிலேயர்களால் சிப்பாய்க் கலகம் என அழைக்கப்பட்டது.
  • இந்தியர்களால் முதல் இந்திய சுதந்திரப் போர் என அழைக்கப்பட்டது.

காரணங்கள்

  • வெல்லெஸ்லி பிரபுவின் துணைப்படைத் திட்டம்
  • டல்ஹௌசி பிரபுவின் நாடு இழப்புக் கொள்கை
  • கிறிஸ்தவ மதப்பரப்புக் குழுக்களின் மதமாற்றத் திட்டம்
  • இந்திய சமய நடவடிக்கையில் ஆங்கிலேயர் தலையீடு
  • கி.பி. 1856 - பொதுப்பணி படைச்சட்டம் சீக்கியர்களின் தாடி மீசையை மழிக்கச் செய்தல்
  • இந்துக்கள் சமயக்குறிகள் நெற்றியில் இடுவதற்குத் தடை
  • தோலினால் ஆன தலைப்பாகை அணிய வற்புறுத்தல்

உடனடிக்காரணம்

  • கி.பி. 1857-ல் ஆங்கில படையில் புதிதாக என்பீல்டு ரக துப்பாக்கி அறிமுகம் செய்யப்பட்டது.
  • அதில் பயன்படுத்தும் தோட்டாக்களின் உறையை வாயால் கடித்து பின்பு துப்பாக்கியில் செருக வேண்டும்.
  • தோட்டாக்களில் பன்றி மற்றும் பசுக்களின் கொழுப்பு தடவப்பட்டிருந்தது.
  • இதனால் இந்துக்கள் மற்றும் இஸ்லாமிய படை வீரர்கள் துப்பாக்கி பயன்படுத்துவதை மறுத்தனர்.
  • கி.பி. 1857 மார்ச் 29ல் கல்கத்தாவுக்கு அருகில் உள்ள பராக்பூர் என்னும் இடத்தில் வங்காளத்தின் 34-வது படைபிரிவைச் சேர்ந்த மங்கள் பாண்டே என்ற பிராமண படை வீரர் தோட்டாவை பயன்படுத்த மறுத்து தனது உயர் அதிகாரிகளை சுட்டுக் கொன்றார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
  • இதனைத் தொடர்ந்து கி.பி. 1857ம் ஆண்டு மே 10ல் மீரட்டில் புரட்சி (முதல் புரட்சி) வெடித்தது. மீரட் வீரர்கள் கலகம் செய்து டெல்லியை மே 12ல் வந்து அடைந்தனர்.
  • அங்கு ஆங்கில அதிகாரிகளைக் கொன்று டெல்லியைக் கைப்பற்றி முகலாய மன்னர் 2-ம் பகதூர் ஷா வை மன்னராக அறிவித்தனர்.
  • சர் ஜான் நிக்கல்சன் என்னும் ஆங்கில தளபதி பின் நாளில் டெல்லியைக் கைப்பற்றினார்.
  • இரண்டாம் பகதூர்ஷா ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார். கி.பி. 1862-ல் இரண்டாம் பகதூர்ஷாவின் மரணத்திற்கு பின்பு மாபெரும் முகலாய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.

கான்பூர்

  • கான்பூர் படைக்கு இரண்டாம் பாஜிராவின் மகன் நானா காசிப் தலைமையேற்றார்.
  • அவருக்கு படைத்தளபதி தாந்தியா தோப் உதவினார். கர்னல் ஹாவ்லாஜ் , கர்னல் நெயில் தலைமையில் கான்பூரை மீட்டனர்.
  • நானாசாகிப் நேபாளம் தப்பிச் சென்று அங்கு மரணமடைந்தார்.

லக்னோ

  • அயோத்தி நவாபின் மகள் ஹஷ்ரத் மஹால் பேகம் தலைமை தாங்கினார்.
  • தனது மகன் பிர்ஜிஸ் காதரை மன்னராக அறிவித்தார்.
  • புரட்சியாளர்கள் சர் ஹென்றி லாரன்ஸ் என்னும் தளபதியைக் கொன்றனர்.
  • தளபதி ஆப்ராம் மற்றும் ஹாவ்லாஜ் மீண்டும் பிரேசில் லக்னோவை மீட்டனர்.
  • மத்திய இந்தியா மத்திய இந்திய படைக்கு ஜான்சிராணியும், தாந்தியா தோப்பும் தலைமை தாங்கினர்.
  • சர் ஹக்ரோஸ் என்னும் தளபதி இவர்களை எதிர்த்து போரிட்டார்.
  • லட்சுமிபாயும், தாந்தியா தோப்பும் தப்பிச் சென்று கல்பி எனும் இடத்தில் தஞ்சம் அடைந்தனர்.
  • இருவரும் சேர்ந்து முற்றுகையிட்டு குவாலியரைக் கைப்பற்றினார். பின்னர் நடந்த போரில் ஜான்சி வீரமரணம் அடைந்தார்.
  • தப்பிச் சென்ற தாந்தியா தோப்பும் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

விளைவுகள்

  • இதன் முடிவில் ஆங்கில கம்பெனி ஆட்சி முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து அரசியின் நேரடி கட்டப்பாட்டில் இந்தியா வந்தது.
  • 1858-ல் நவம்பர் 1 அன்று விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை வெளியிடப்பட்டது.
  • இதனை இந்தியாவின் முதல் வைசிராயான கானிங் பிரபு (இந்திய அரசப் பிரதிநிதி) வாசித்தார்.

இதன் சிறப்பு அம்சங்கள்

  • நாடு இழக்கும் கொள்கை ரத்து. சமய குழு சுதந்திரம் அளிக்கப்பட்டது.
  • கட்டுப்பாட்டு நிர்வாகக் குழு கலைப்பு.
  • கவர்னல் ஜெனரல் பதவி நீக்கப்பட்டு வைசிராய் அல்லது இந்திய அரசப்பிரதநிதி என்று அழைக்கப்பட்டது.
  • உயர்பதவியில் இந்தியர்கள் அமர்த்தப்பட்டனர்.
  • இந்திய செயலாளர் பதவி அறிமுகம் செய்யப்பட்டது.
  • சிப்பாய் கலகத்தில் கொலைக் குற்றம் புரிந்தவர்கள் தவிர அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.
  • இவ்வறிக்கை அலகாபாத் நகரில் வாசிக்கப்பட்டது.

57670.பொருத்துக :
இடம்
கிளர்ச்சியில் ஈடுபட்ட தலைவர்கள்
(a) டெல்லி1. பேகம் ஹஸ்ரத் மெஹல்
(b) மத்திய இந்தியா2. தாந்தியா தோப்பே
(c) லக்னோ 3. இராணி இலட்சுமி பாய்
(d) கான்பூர்4. பகதூர்ஷா - II
2 1 3 4
4 3 1 2
1 3 4 2
4 2 1 3
Share with Friends