சுதந்திர போராட்டத்தில் தமிழ் நாட்டின் பங்கு
-
பாளையக்காரர்களின் கிளர்ச்சி
- பாளையக்காரர்களில் இரண்டு பிரிவினர் இருந்தனர்.
- மேற்குப் பிரிவில் மறவர் பாளையக்காரர்களும், தெற்குப்பிரிவில் தெலுங்கு பாளையக்காரர்களும் இருந்தனர்.
- நெல்கட்டும் செவல் பாளையத்தின் பூலித்தேவர் மறவர் பிரிவுக்கும் பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்த கட்டபொம்மன் தெலுங்கு பிரிவுக்கும் தலைவர்களாகக் கருதலாம்.
- இவ்விருவருமே நவாப்பிற்கு செலுத்த வேண்டிய இஸ்த் அல்லது கப்பம் கட்ட மறுத்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
பூலித்தேவர்
- இவர் தமிழ்நாட்டில் ஆங்கில ஆட்சிக்கு எதிராக முதலில் போரிட்டவர்.
- 1755ல் மாபஸ்கான் பிரிட்டிஷ் படைத்தளபதி கர்னல் ஹெரான் தலைமையிலான படைகளின் உதவியோடு பாளையக்காரர்கள்மீது படையெடுத்தார்.
- மேற்கிலிருந்த மறவர்களை ஒன்று சேர்த்து தனது நிலையை பூலித்தேவர் மேலும் வலிமைப்படுத்திக் கொண்டார்.
- பிரிட்டிஷாருக்கு எதிராக மைசூரின் ஹைதர் அலி மற்றும் பிரஞ்சுக்காரர்களின் உதவியையும் நாடினார்.
- பிரிட்டிஷார் ராமநாதபுரம், புதுக்கோட்டை அரசுகளிடமும் டச்சுக்காரர்களிடமும் ஆதரவு கோரினார்.
- ஹைதர் அலி ஏற்கனவே மராட்டியருடன் மோதலில் ஈடுபட்டிருந்தமையால் பூலித்தேவருக்கு உதவ முடியவில்லை.
- பூலித்தேவரையும் அவரது கூட்டாளிகளையும் அடக்கும் பொறுப்பை பிரிட்டிஷார் யூசுப் கானிடம் (கான்சாகிப்) ஒப்படைத்தனர்.
- பூலித்தேவர் மதுரையைத் தாக்கி மாபஸ்கானிடமிருந்து அதனைக் கைப்பற்றினார்.
- ஆனால் மறுபடியும் மாபஸ்கான் மதுரையை மீட்டார்.
- கிழக்கத்திய பாளையக்காரர்கள் மற்றும் திருவாங்கூர் அரசரின் உதவியோடு யூசுப்கான் பல வெற்றிகளைப் பெற்றார்.
- 1759ல் நெல்கட்டும் செவல் மீது தாக்குதல் தொடர்ந்தது.
- 1767ல் அது கர்னல் காம்ப்பெல் என்பவரால் கைப்பற்றப்பட்டது.
57507.தமிழ்நாட்டில் ஆங்கில ஆட்சிக்கு எதிராக முதலில் போரிட்டவர்
கட்டபொம்மன்
புலித்தேவர்
சின்ன மருது
வேலு நாச்சியார்
வீரபாண்டிய கட்டபொம்மன்
- தனது தந்தை ஜெகவீர பாண்டியனின் மறைவுக்குப்பிறகு, முப்பதாவது வயதில் வீரபாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராக பொறுப்பேற்றார்.
- பல்வேறு சம்பவங்களால் கட்டபொம்மனுக்கும் கிழக்கிந்திய வணிகக்குழுவிற்கும் சச்சரவுகள் தோன்றின.
- கப்பம் கட்டுவது சச்சரவுக்கு முக்கிய காரணமாயிற்று.
- 1792 ஆம் ஆண்டு கர்நாடக உடன்படிக்கைப்படி ஆற்காடு நவாப் இந்த உரிமையை ஆங்கிலேயருக்கு கொடுத்திருந்தார்.
- 1798ல் கட்டபொம்மன் கட்டவேண்டிய கப்பம் நிலுவையிலிருந்தது.
- 1798 மே 31ம் நாள் கணக்குப்படி கட்டபொம்மன் கட்டவேண்டிய கப்பத்தொகை நிலுவை 3310 பகோடாக்களாகும். (பகோடா என்பது ரூபாய்).
- ஜாக்சன் தனது படையை கட்டபொம்மனுக்கு எதிராக அனுப்ப விரும்பினார். ஆனால் சென்னை அரசாங்கம் அனுமதிக்கவில்லை.
- 1798 ஆகஸ்ட் 18ம் நாள் தம்மை ராமநாதபுரத்தில் வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு ஆணையனுப்பினார்.
- ஜாக்சனை சந்திக்க கட்டபொம்மன் திருக்குற்றாலத்திலும், ஸ்ரீவில்லிபுத்தூரிலும் இருமுறை முயற்சித்தார். ஆனால், அவமதிப்பே மிஞ்சியது.
- லெப்டினென்ட் கிளார்க் உள்ளிட்ட சிலர் கொல்லப்பட்டனர். சுப்ரமணிய பிள்ளை கைது செய்யப்பட்டார். கட்டபொம்மன் தப்பிச் சென்றார்.
- பாஞ்சாலங்குறிச்சி திரும்பிய கட்டபொம்மன் நடந்த உண்மைகளை விளக்கி சென்னை அரசாங்கத்துக்கு மேல் முறையீடு செய்தார்.
- 1799 மே திங்களில் சென்னையிலிருந்த வெல்லெஸ்லி பிரபு திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை போன்ற இடங்களிலிருந்த பிரிட்டிஷ் படைகளை திருநெல்வேலிக்கு செல்லுமாறு உத்தரவிட்டார்.
- கட்டபொம்மன் குற்றமற்றவர் என்று வில்லியம் பிரவுன், வில்லியம் ஆரம், ஜான் காஸாமேயர் ஆகியோர் அடங்கிய குழு தீர்மானித்தது. ஜாக்சனுக்குப் பதில் எஸ்.ஆர். லூஷிங்டன் என்பவர் கலெக்டராக நியமிக்கப்பட்டார். பின்னர், ஜாக்சன் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுப்பு
- 1799 மே திங்களில் சென்னையிலிருந்த வெல்லெஸ்லி பிரபு திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை போன்ற இடங்களிலிருந்த பிரிட்டிஷ் படைகளை திருநெல்வேலிக்கு செல்லுமாறு உத்தரவிட்டார்.
- 1799 செப்டம்பர் முதல் நாள் கட்டபொம்மனை சரணடையுமாறு அவர் இறுதி எச்சரிக்கை விடுத்தார்.
- 4ம் தேதி பாளையங்கோட்டையில் வந்து சந்திக்குமாறும் கூறினார்.
- செப்டம்பர் 5 ஆம் நாள் கட்டபொம்மனின் கோட்டை தாக்கப்பட்டது.
- 16 ஆம் நாள் பாளையங்கோட்டைக்கு மேலும் தளவாடங்கள் வந்து சேர்ந்தன.
- கோலார்பட்டியில் நடந்த மோதலில் பாளையக்காரர் படை பலத்த சேதமடைந்தது.
- சிவசுப்ரமணியபிள்ளை மீண்டும் சிறைப்பிடிக்கப்பட்டார்.
- கட்டபொம்மன் புதுக்கோட்டைக்கு தப்பியோடினார்.
கட்டபொம்மனின் வீழ்ச்சி
- செப்டம்பர் 13 ஆம் நாள் சிவசுப்ரமணிய பிள்ளை நாகலாபுரத்தில் தூக்கிலிடப்பட்டார்.
- அக்டோபர் 16 ஆம் நாள் கயத்தாற்றில் கூடியிருந்த பாளையக்காரர்கள் முன்னிலையில் கட்டபொம்மன் மீது விசாரணை நடத்தப்பட்டது.
- அக்டோபர் 1 ஆம் நாள் கட்டபொம்மன் கயத்தாறு கோட்டைக்கு அருகில் தூக்கிலிடப்பட்டார்.
- வீரபாண்டிய கட்டபொம்மன் தனது வாழ்வின் இறுதி நேரத்தை ஒரு வீரனுக்குரிய பெருமிதத்துடன் எதிர்கொண்டார்.
மருது சகோதரர்கள்
- 1799ல் பாளையக்காரர்கள் கடுமையான வகையில் ஒடுக்கப்பட்ட போதிலும், 1800ல் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது.
- 1800 - 1801 ஆண்டு கிளர்ச்சி இரண்டாவது பாளையக்காரர் போர்
- சிவகங்கையைச் சேர்ந்த மருதுபாண்டியர், திண்டுக்கல் கோபால நாயக்கர், மலபாரின் கேரளவர்மா, மைசூரின் கிருஷ்ணப்ப நாயக்கர் மற்றும் துண்டாஜி ஆகியோர் அடங்கிய ஒரு பெரும் கூட்டிணைவு இக்கிளர்ச்சியை முன்னின்று நடத்தியது.
- 1800 ஜூன் மாதம் கோயம்புத்தூரில் வெடித்த கலகம் விரைவில் ராமநாதபுரம், மதுரைப் பகுதிகளுக்கும் பரவியது.
- 1801 மே மாதத்தில் வடக்கு பகுதிகளிலும் கலகங்கள் தோன்றின. மருது பாண்டியர், மேலப்பர் ஆகியோர் இதற்கு தலைமை வகித்தனர்.
- 1801 பிப்ரவரியில் ஊமைத்துரையும் அவருடன் சென்ற 200 பேரும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை சாமர்த்தியமாக கைப்பற்றினர்.
- கோட்டை மீண்டும் புனரமைக்கப்பட்டு எழுச்சியின் மையமாக மீண்டும் உருவெடுத்தது.
- மருதுபாண்டியரால் அனுப்பிவைக்கப்பட்ட மதுரை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த 3000 பேர் பாஞ்சாலங்குறிச்சி படைகளுடன் இணைந்து கொண்டனர்.
- பிரிட்டிஷ் படைகள் சுதாரித்துக்கொண்டு, பாஞ்சாலங்குறிச்சிப் படைகளை வீழ்த்தின. அரசாங்கத்தின் உத்திரவின் பேரில் கோட்டை தரைமட்டமாக்கப்பட்டு, உழவு செய்யப்பட்டு, மீண்டும் குடிபுகாத வண்ணம் உப்பும் ஆமணக்கு எண்ணெய்யும் தூவப்பட்டது.
- எஞ்சியிருந்த கலகக்காரர்களையும் பிரிட்டிஷ் படைகள் முறியடித்தன.
- 1801 நவம்பர் 16 ஆம் நாள் பாஞ்சாலங்குறிச்சியில் ஊமைத்துரை, செவத்தையா ஆகியோரின் தலைகள் துண்டிக்கப்பட்டன.
- 1799 மற்றும் 1800 - 1801 ஆண்டுகளில் நடைபெற்ற பாளையக்காரர் கிளர்ச்சிகளை ஒடுக்கியதன் மூலம் குறுநிலத்தலைவர்கள் அறவே ஒழிக்கப்பட்டனர்.
- 1801 ஜூலை 31ல் கையெழுத்திடப்பட்ட கர்நாடக உடன்படிக்கைப்படி, தமிழ்நாடு முழுவதையும் பிரிட்டிஷார் தம் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.
- பாளையக்காரர் முறை முடிவை சந்தித்தது. வணிகக்குழு அந்த இடங்களில் ஐமீன்தாரி முறையை அறிமுகப்படுத்தியது.
வேலூர் கலகம் - (Vellore Mutiny 1806)
- தமிழ்நாட்டின் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தின் தலைநகரம் வேலூர். தற்போது வேலூர் மாவட்டம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.
- 1806 ல் வேலூரிலிருந்த இந்திய சிப்பாய்கள் கலகத்தில் ஈடுபட்டனர். காரணங்கள் (causes) தராஸின் ஆளுநராக இருந்த வில்லியம் பெண்டிங் பிரபுவின் அனுமதியோடு படைத்தளபதி சர் ஜான் கிரடாக் என்பவர் தலைப்பாகையுடன் கூடிய புதிய சீருடையை அறிமுகப்படுத்தினார்.
- இந்த தலைப்பாகை ஐரோப்பிய தொப்பியைப் போலவே இருந்தது. காதணிகளை அணிவதும், சமய சின்னங்களை இட்டுக் கொள்வதும் தடை செய்யப்பட்டன.
- மேலும் சிப்பாய்கள் தங்கள் முகத்தை நன்றாக மழித்து, மீசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும் என்று விதிக்கப்பட்டனர்.
- ஆனால் இந்த நடவடிக்கைகளை தங்களது சமய மற்றும் சமூகப்பழக்கவழக்கங்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாக சிப்பாய்கள் கருதினார்கள்.
- மேலும் அனைவரையும் கிறித்துவ சமயத்திற்கு மாற்றும் முயற்சிக்கு இது முன்னோடி என்ற கருத்து பரவியது.
- ஜூன் 17-ம் தேதி 1806 ஆம் ஆண்டு முதலாம் படைப்பிரிவைச் சேர்ந்த சிப்பாய் முஸ்தபா பெக் தன் உயர் அதிகாரி கர்னல் போர்ப்ஸிடம், ஐரோப்பிய இராணுவ அதிகாரிகளையும் துருப்புகளையும் பூண்டோடு அழிப்பதற்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்பதை தெரிவித்தார்.
- ஆனால் அவரது செய்திக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை . * வேலூர் கலகம் உருவாவதற்கு முன்பு முன்பு திப்பு சுல்தானின் மூத்த மகன் பதே ஹைதர் மற்றும் மொய்சுதீன் ஆகிய இருவரும் இணைந்து திட்டம் தீட்டினர்.
- மீண்டும் முஸ்லீம் ஆட்சியை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக வேலூர்கலகம் நடைபெற்றது.
- புலித்தேவர், கான்சாகிப் கட்டபொம்மன் மருது சகோதரர்கள், திப்பு சுல்தான் போன்றோருக்கு ஏற்பட்ட நிலையால் கசப்புணர்வு கொண்ட சிப்பாய்கள் வேலூர் கலகத்தின் ஈடுபட்டனர்.
57997.கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை ?
புதிய இராணுவ விதிமுறைகள் -வேலூர் கலகம்
சர் ஜான் கிரடாக் - படைத் தளபதி
வில்லியம் பெண்டிங் பிரபு -சென்னை ஆளுநர்
4 ம் படைப்பிரிவு கிளர்ச்சியில் ஈடுபட்டது - கலோனல் போர்ப்ஸ்.
கலகத்தின் போக்கு (Course)
- ஜூலை 10 ம் நாள் விடியற்காலை 1 மற்றும் 23ம் படைப்பிரிவை சேர்ந்த இந்திய சிப்பாய்கள் கலகத்தை தோற்றுவித்தனர்.
- இப்படைப் பிரிவுகளின் இராணுவ அதிகாரி கர்னல் பான் கோர்ட் முதலில் பலியானார்.
- 23ம் படைப் பிரிவின் இராணுவ அதிகாரியான கர்னல் மி கேரஸ், அணி வகுப்பு மைதானத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டார்.
- அடுத்து கொல்லப்பட்ட இராணுவ அதிகாரி மேஜர் ஆம்ஸ் ட்ராங் ஆவார்.
- ஏறத்தாழ 12க்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
- வேலூர் கோட்டைக்கு வெளியே இருந்த மேஜர் கூட்ஸ் 14 மைல்களுக்கு அப்பாலுள்ள இராணிப்பேட்டைக்கு விரைந்து சென்று அங்கிருந்த இராணுவத்தளபதி கர்னல் ஜில்லஸ்பியிடம் காலை 7 மணியளவில் வேலூர் புரட்சியைப் பற்றி தகவல் தெரிவித்தார்.
- சுமார் காலை 9 மணியளவில் ஜில்லஸ்பி இராணுவப்படையுடன் வேலூர் கோட்டையை அடைந்தார்.
- அதற்குள் கிளர்ச்சியாளர்கள் திப்பு சுல்தானின் மூத்த மகன் பதே ஹைதரை புதிய சுல்தானாக அறிவித்து திப்பு சுல்தானின் புலிக்கொடியையும் பறக்க விட்டனர்.
- ஆனால் இக்கிளர்ச்சி கர்னல் ஜில்லெஸ்பியினால் உடனடியாக அடக்கப்பட்டது. கோட்டைக்குள் மட்டும் 800 இந்திய சிப்பாய்கள் கொல்லப்பட்டனர்.
- திருச்சியிலும் வேலூரிலும் 600 சிப்பாய்கள் சிறைப்படுத்தப்பட்டனர். சிலர் தூக்கிலிடப்பட்டனர்.
- இறுதியாக திப்புவின் மகன் கல்கத்தாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
- படைத்தளபதியும், சென்னை ஆளுநரும் திருப்பியழைக்கப் பட்டனர்.
- முறையாக திட்டமிடப்படாததால் வேலூர் கலகம் தோல்வியில் முடிந்தது.
மதிப்பீடு
- 1857 ஆம் ஆண்டு முதல் இந்திய சுதந்திரப் போருக்கு வேலூர் கலகம் முன்னோடி என்று சவார்க்கர் கருதுகின்றார்.
- ஆனால் வேலூர்க்கலகம் 1857 ம் ஆண்டு சிப்பாய் கலகத்திற்கு வழி வகுத்தது என்ற கூற்றை கே.கே. பிள்ளை என்ற வரலாற்று ஆசிரியர் மறுக்கிறார்.
- இந்திய விடுதலைக்கு தமிழர்களே முன்னோடிகளாக திகழ்ந்தனர் படு என்று சஞ்சீவி கூறியுள்ளார்.
- காலனியாதிக்கத்தை எதிர்த்து மருது சகோதரர்கள் நடத்திய போராட்டத்தின் தொடர்ச்சியே வேலூர் கலகம் என்று கே. ராசய்யன் என்ற வரலாற்று அறிஞர் கருதுகிறார்.
மாபெரும் புரட்சி கி.பி. 1857
- கி.பி. 1857 புரட்சி ஆங்கிலேயர்களால் சிப்பாய்க் கலகம் என அழைக்கப்பட்டது.
- இந்தியர்களால் முதல் இந்திய சுதந்திரப் போர் என அழைக்கப்பட்டது.
காரணங்கள்
- வெல்லெஸ்லி பிரபுவின் துணைப்படைத் திட்டம்
- டல்ஹௌசி பிரபுவின் நாடு இழப்புக் கொள்கை
- கிறிஸ்தவ மதப்பரப்புக் குழுக்களின் மதமாற்றத் திட்டம்
- இந்திய சமய நடவடிக்கையில் ஆங்கிலேயர் தலையீடு
- கி.பி. 1856 - பொதுப்பணி படைச்சட்டம் சீக்கியர்களின் தாடி மீசையை மழிக்கச் செய்தல்
- இந்துக்கள் சமயக்குறிகள் நெற்றியில் இடுவதற்குத் தடை
- தோலினால் ஆன தலைப்பாகை அணிய வற்புறுத்தல்
உடனடிக்காரணம்
- கி.பி. 1857-ல் ஆங்கில படையில் புதிதாக என்பீல்டு ரக துப்பாக்கி அறிமுகம் செய்யப்பட்டது.
- அதில் பயன்படுத்தும் தோட்டாக்களின் உறையை வாயால் கடித்து பின்பு துப்பாக்கியில் செருக வேண்டும்.
- தோட்டாக்களில் பன்றி மற்றும் பசுக்களின் கொழுப்பு தடவப்பட்டிருந்தது.
- இதனால் இந்துக்கள் மற்றும் இஸ்லாமிய படை வீரர்கள் துப்பாக்கி பயன்படுத்துவதை மறுத்தனர்.
- கி.பி. 1857 மார்ச் 29ல் கல்கத்தாவுக்கு அருகில் உள்ள பராக்பூர் என்னும் இடத்தில் வங்காளத்தின் 34-வது படைபிரிவைச் சேர்ந்த மங்கள் பாண்டே என்ற பிராமண படை வீரர் தோட்டாவை பயன்படுத்த மறுத்து தனது உயர் அதிகாரிகளை சுட்டுக் கொன்றார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
- இதனைத் தொடர்ந்து கி.பி. 1857ம் ஆண்டு மே 10ல் மீரட்டில் புரட்சி (முதல் புரட்சி) வெடித்தது. மீரட் வீரர்கள் கலகம் செய்து டெல்லியை மே 12ல் வந்து அடைந்தனர்.
- அங்கு ஆங்கில அதிகாரிகளைக் கொன்று டெல்லியைக் கைப்பற்றி முகலாய மன்னர் 2-ம் பகதூர் ஷா வை மன்னராக அறிவித்தனர்.
- சர் ஜான் நிக்கல்சன் என்னும் ஆங்கில தளபதி பின் நாளில் டெல்லியைக் கைப்பற்றினார்.
- இரண்டாம் பகதூர்ஷா ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார். கி.பி. 1862-ல் இரண்டாம் பகதூர்ஷாவின் மரணத்திற்கு பின்பு மாபெரும் முகலாய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.
கான்பூர்
- கான்பூர் படைக்கு இரண்டாம் பாஜிராவின் மகன் நானா காசிப் தலைமையேற்றார்.
- அவருக்கு படைத்தளபதி தாந்தியா தோப் உதவினார். கர்னல் ஹாவ்லாஜ் , கர்னல் நெயில் தலைமையில் கான்பூரை மீட்டனர்.
- நானாசாகிப் நேபாளம் தப்பிச் சென்று அங்கு மரணமடைந்தார்.
லக்னோ
- அயோத்தி நவாபின் மகள் ஹஷ்ரத் மஹால் பேகம் தலைமை தாங்கினார்.
- தனது மகன் பிர்ஜிஸ் காதரை மன்னராக அறிவித்தார்.
- புரட்சியாளர்கள் சர் ஹென்றி லாரன்ஸ் என்னும் தளபதியைக் கொன்றனர்.
- தளபதி ஆப்ராம் மற்றும் ஹாவ்லாஜ் மீண்டும் பிரேசில் லக்னோவை மீட்டனர்.
- மத்திய இந்தியா மத்திய இந்திய படைக்கு ஜான்சிராணியும், தாந்தியா தோப்பும் தலைமை தாங்கினர்.
- சர் ஹக்ரோஸ் என்னும் தளபதி இவர்களை எதிர்த்து போரிட்டார்.
- லட்சுமிபாயும், தாந்தியா தோப்பும் தப்பிச் சென்று கல்பி எனும் இடத்தில் தஞ்சம் அடைந்தனர்.
- இருவரும் சேர்ந்து முற்றுகையிட்டு குவாலியரைக் கைப்பற்றினார். பின்னர் நடந்த போரில் ஜான்சி வீரமரணம் அடைந்தார்.
- தப்பிச் சென்ற தாந்தியா தோப்பும் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
விளைவுகள்
- இதன் முடிவில் ஆங்கில கம்பெனி ஆட்சி முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து அரசியின் நேரடி கட்டப்பாட்டில் இந்தியா வந்தது.
- 1858-ல் நவம்பர் 1 அன்று விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை வெளியிடப்பட்டது.
- இதனை இந்தியாவின் முதல் வைசிராயான கானிங் பிரபு (இந்திய அரசப் பிரதிநிதி) வாசித்தார்.
இதன் சிறப்பு அம்சங்கள்
- நாடு இழக்கும் கொள்கை ரத்து. சமய குழு சுதந்திரம் அளிக்கப்பட்டது.
- கட்டுப்பாட்டு நிர்வாகக் குழு கலைப்பு.
- கவர்னல் ஜெனரல் பதவி நீக்கப்பட்டு வைசிராய் அல்லது இந்திய அரசப்பிரதநிதி என்று அழைக்கப்பட்டது.
- உயர்பதவியில் இந்தியர்கள் அமர்த்தப்பட்டனர்.
- இந்திய செயலாளர் பதவி அறிமுகம் செய்யப்பட்டது.
- சிப்பாய் கலகத்தில் கொலைக் குற்றம் புரிந்தவர்கள் தவிர அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.
- இவ்வறிக்கை அலகாபாத் நகரில் வாசிக்கப்பட்டது.
57670.பொருத்துக :
கிளர்ச்சியில் ஈடுபட்ட தலைவர்கள் | |
---|---|
(a) டெல்லி | 1. பேகம் ஹஸ்ரத் மெஹல் |
(b) மத்திய இந்தியா | 2. தாந்தியா தோப்பே |
(c) லக்னோ | 3. இராணி இலட்சுமி பாய் |
(d) கான்பூர் | 4. பகதூர்ஷா - II |
2 1 3 4
4 3 1 2
1 3 4 2
4 2 1 3