பூஜ்ஜிய பாகுபாடு தினம்
- ஐ.நா. அவையின் அனைத்து உறுப்பு நாடுகளிலும் அனைவரிடத்தும் சட்டத்தின் முன்னாள் சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மார்ச் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச பூஜ்ஜிய பாகுபாடு தினம் கொண்டாடப்படுகின்றது.
- பாகுபாடுகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய அழைப்பு விடுக்கும் இத்தினமானது, கண்ணியத்தோடு ஓர் முழுமையான ஆக்கப்பூர்வ வாழ்வை வாழ்வதற்கு அனைவருக்கும் உள்ள உரிமையை கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
உலக பாதுகாப்பு தினம்
- சிவில் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து உலக மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும், பேரழிவுகளுக்கு எதிராகப் போராடுவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 ஆம் தேதி உலக சிவில் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
- சர்வதேச சிவில் பாதுகாப்பு அமைப்பு (ஐசிடிஓ) இந்த நாளை 1990 இல் கொண்டாடி வருகிறது.
கெலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு ப் போட்டி
- 200 மீட்டர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் டூட்டீ சந்த் தனது இரண்டாவது தங்கத்தை வென்றார்.கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி நிறுவனம் சார்பில் இவர் போட்டியிட்டார்.
- மும்பை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கீர்த்தி விஜய் போய்ட் வெள்ளி பதக்கமும், உத்கல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தீபாலி மகாபத்ரா வெண்கலம் பாதகமும் வென்றுள்ளனர்
345 கோடி ரூபாய் செலவில் அரசுமருத்துவக் கல்லூரிகள்
- ராமநாதபுரத்தில், 345 கோடி ரூபாய் செலவில், புதிதாக, இரு அரசுமருத்துவக் கல்லூரிகள், பிரமாண்டமாக்கப்பட உள்ளன. இக்கல்லூரிகளுக்கு, மார்ச் 1 அன்று முதல்வர் எடப்பாடி பனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.
- மத்திய அரசு, 2019 அக்டோபர் 23ல், ஒரே நேரத்தில், ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகள் துவங்கவும், அதே மாதம், 27ம்தேதி, மேலும் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் துவங்கவும், தமிழகத்திற்கு அனுமதி அளித்தது.
- இக்கல்லூரிகளை துவங்க, மத்திய அரசு, 2,145 கோடி ரூபாய் மாநில அரசு, 1,430 கோடி ரூபாய் வழங்க உள்ளன.
இளம் சாதனையாளர் - ருவந்திகா மாரி
- மருத்துவ விஞ்ஞானத்தில் 50 பிரிவுகளைக் கண்டறிந்து பதில் கூறிய 4ம் வகுப்பு மாணவி ருவந்திகா மாரிக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
- ஆசியா சாதனையாளர் புத்தகம் நிறுவனம் சார்பில் சென்னை பெருங்குடியில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளியில் இளம் சாதனையாளருக்கான போட்டி நடத்தப்பட்டது. நடுவர் விவேக்நாயர் முன்னிலையில் நடைபெற்ற இந்தப்போட்டியில் ருவந்திகாமாரி என்ற 4ம் வகுப்பு மாணவி கலந்து கொண்டு ஒரு நிமிடத்தில் கம்ப்யூட்டரில் காட்சிப்படுத்தப்பட்ட மருத்துவ விஞ்ஞான 50 பிரிவுகளைச் சரியாக கண்டறிந்து பதில் அளித்துள்ளார்.
- இந்தியா, வியட்நாம், லாவோஸ், நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ள இளம் சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சாதனையாளர்களை ஒப்பிட்டுப் பார்க்கவும் போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெறும் இளம் சாதனையாளர்களுக்கு ஆசியா சாதனையாளர்கள் புத்தகம் சார்பில் இளம் சாதனையாளர்கள் விருது வழங்கிக் கௌரவிக்கப்படுகிறது.
அமெரிக்காவும் தலிபான் அமைப்பும்
- ஆப்கானிஸ்தானில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கு வகைசெய்யும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் தலிபான் அமைப்பும் பிப்ரவரி 29 அன்று கையெழுத்திட்டன.
- கத்தார் தலைநகர் தோஹாவில் கையெழுத்தான அந்த ஒப்பந்தத்தில், ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படையினரை இன்னும் 14 மாதங்களில் முழுமையாக விலக்கிக் கொள்ள அமெரிக்காவும், அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்பைத் துண்டித்துக்கொள்ள தலிபான் அமைப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.
- ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை, கத்தார் தலைநகர் தோஹாவில் பல கட்டங்களாக நடைபெற்று வந்தது.
- இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க தூதர் ஜல்மே கலீல்ஜாத்தும், தலீபான்