விதை - விநாயகர்
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காய்கறிகளான கத்தரி, தக்காளி, மிளகாய் போன்ற பச்சைக் காய்கறிகளின் விதைகளைக் கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டிருந்தன.
- இந்த சிலைகளை வீடுகளிலோ அல்லது விலை நிலங்களிலோ கரைத்து தாவரச் செடிகளாக மாற்ற முடியும்.
தொல்பொருள் அகழாய்வுகள்
- பண்டையத் தமிழர்களின் கடந்த கால வாணிபத் தொடர்பு முறையை வெளிக் கொண்டு வரும் முயற்சியில், மாநில தொல்பொருள் துறையானது நீருக்கடியிலான அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ளத் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது.
- இது சங்க காலம் மற்றும் இடைக் காலங்களில் பரவியிருந்த துறைமுக நகரங்கள் மற்றும் அவை சார்ந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும்.
- இதன் நோக்கம் - கிரேக்கம், ரோமானியர் மற்றும் அராபிய வியாபாரிகளுடன் மேற்கொண்டிருந்த வத்தக உறவுகளை ஆய்வு செய்வதாகும்.
- மாமல்லபுரம், பூம்புகார், கொற்கை மற்றும் அரிக்கமேடு ஆகிய நகரங்களின் அருகேயுள்ள கடற்கரைப் பகுதிகளில் பொதுவாக கவனம் செலுத்தப்படும்.
- கடைசியாக 1990களில் மாநில தொல்லியல் துறை மேற்கொண்ட நீருக்கடியிலான அகழாய்வுகள் பூம்புகாருக்கு அருகே மேற்கொள்ளப்பட்டதாகும்.
ஷாகுன் இணைய வாயில்
- மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பள்ளிக் கல்விக்கான உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்நேர இணைப்புகளில் ஒன்றாக கருதப்படும் ஷாகுன் என்ற இணைய வாயிலை ஆரம்பித்து வைத்திருக்கின்றார்.
- இது பள்ளிக் கல்வி அமைப்பை மேம்படுத்தும் ஒரு முயற்சியாகும்.
- இந்த இணைய வாயில் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து நிகழ்நேர இணைய வாயில்களையும் இணைய தளங்களையும் இணைக்கும் ஒரு இணைப்பாகும்.
- இந்த இணைய வாயில் ஏறக்குறை 92 லட்சம் ஆசிரியர்களையும் 26 கோடி மாணவர்களையும் இணைத்திட எண்ணுகின்றது.
நகரும் இரும்புக் கூண்டு
- இது உலகின் மிகப்பெரிய நகரும் இரும்புக் கூண்டு ஆகும்.
- சோவியத் ரஷ்யாவில் செர்னோபில் அணு உலைக் கூடம் 1986ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி உலகின் மிக மோசமான ராணுவம் அல்லாத அணு உலை விபத்தைச் சந்தித்தது.
- இது உலகின் மிகப்பெரிய நகரும் இரும்புக் கூண்டு ஆகும்.
- சோவியத் ரஷ்யாவில் செர்னோபில் அணு உலைக் கூடம் 1986ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி உலகின் மிக மோசமான ராணுவம் அல்லாத அணு உலை விபத்தைச் சந்தித்தது.
- அதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். மேலும் 3,50,000 மக்கள் காப்பாற்றப்பட்டு மீட்கப்பட்டனர்.
- அதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். மேலும் 3,50,000 மக்கள் காப்பாற்றப்பட்டு மீட்கப்பட்டனர்.
FCC விருதுகள்
- இந்தியாவில் பத்திரிக்கைத் துறையில் நிபுணத்துவத்திற்கான கலிங்கா FCC விருதுகள் இம்மாதிரி வகையிலான ஒரு முதலாவது விருதாகும்.
- இது இந்தியா மற்றும் 7 சார்க் நாடுகளை உலகளாவிய ஊடக அளவில் பெரிதாக்கப்பட்ட மற்றும் நம்பகமான செய்திப் பரப்பை அதிகரிக்க எண்ணுகின்றது.
- இந்த விருதானது புவனேஸ்வரியில் உள்ள கலிங்கா தொழிற் துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தாலும், புது டெல்லியை மையமாகக் கொண்ட வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர் மன்றத்தாலும் இணைந்து இவ்வருடம் ஏற்படுத்தப் பட்டதாகும்.
- ரியூட்டர் செய்தி நிறுவனத்தின் பத்திரிக்கையாளர் அமைப்பு முதல் இரண்டு விருதுகளை வென்றுள்ளது.
- ஐக்கியப் பேரரசின் பிபிசி, ஜெர்மனியை மையமாகக் கொண்ட ஐரோப்பிய பத்திரிக்கைப் புகைப்பட நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் PBS செய்தி நேரம் ஆகியன மற்ற மூன்று விருதுகளைப் பகிர்ந்து கொண்டன.
பாம்புப் படகுப் போட்டி
- ஆலப்புழாவில் புன்னமடா ஏரியில் நடைபெற்ற பெருமைமிகு நேரு டிராபியின் 67வது பதிப்பை பல்லதுருத்தி படகு மன்றத்தின் பாம்புப் படகான நடுபாகம் சுந்தன் வென்றது.
- சம்பக்குளம் சுந்தன் மற்றும் கரிச்சல் சுந்தன் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.
- 1952ம் ஆண்டில் இந்தியாவின் முதல் பிரதமர் ஆலப்புழைக்கு வருகை தந்து நடுபாகம் சுந்தன் (பாம்புப் படகு) படகில் பயணித்தார்.
- இந்தப் பந்தயம் கேரளாவில் மிகப்பெரிய அளவில் இங்கொன்றும் அங்கொன்றுமாக பரவி இருக்கும் பாம்புப் படகுப் பந்தயங்களை தொழில்நுட்பப் படுத்துவதிலும், அவர்களின் பாரம்பரிய தன்மையை அழிக்காமல் அவற்றை வர்த்தகப் படுத்துவதிலும் கவனத்தைச் செலுத்துகின்றது.
- கேரளா சுற்றுலாத் துறையால் நடத்தப்படும் இப்பந்தயம் ஐபிஎல் பந்தயத்தின் மாதிரியில் நாட்டில் நடத்தப்படும் முதலாவது படகுப் பந்தயமாகும். இப்போட்டியில் மொத்தம் 12 பந்தயங்கள் இருக்கும்.
- இது நேரு டிராபியுடன் துவங்கி நவம்பர் 23 தேதியன்று கொல்லத்தில் குடியரசுத் தலைவர் படகுப் பந்தயக் கோப்பையுடன் முடிவடைகின்றது.