Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 10th March 20 Content

ஒளவையார் விருது - ரா.கண்ணகி

  • திருவண்ணாமலையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரா. கண்ணகிக்கு முதல்வர் பழனிசாமி மார்ச் 10-ஆம் தேதி ஒளவையார் விருது வழங்கி கௌரவித்தார்.
  • தமிழக முதல்வர் பழனிசாமி மார்ச் 09-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரா.கண்ணகிக்கு, மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைக்க ஊக்கப்படுத்தியது, ஆதரவற்ற சடலங்களுக்கு இறுதி சடங்குகளை மேற்கொண்டது, குடிசை வீடுகளை ஓட்டு வீடுகளாக மாற்ற நடவடிக்கைகள் எடுத்தது போன்ற பல்வேறு சமூகநலப் பணிகளை அர்ப்பணிப்புடன் ஆற்றியதற்காக 2020-ஆம் ஆண்டிற்கான ஒளவையார் விருதினை வழங்கி சிறப்பித்தார்கள்.

  • ஒளவையார் விருது

    ஔவையார் விருது என்பது தமிழ்நாடு அரசின் விருதுகளில் ஒன்றாகும். 2012 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது.
  • சமூகச் சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்தத் துறைகளில் சிறப்புடன் பணியாற்றும் பெண்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உலக மகளிர் தினத்தன்று இந்த விருது அளிக்கப்படுகிறது.
  • இந்த விருதுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும், தகுதிச் சான்றும் அளித்துச் சிறப்பிக்கப்படும்.

“ஜலியன்வாலா பாக்” கண்காட்சி

  • இந்திய தேசிய ஆவணக்காப்பகத்தின் 130 வது அறக்கட்டளை தினத்தை முன்னிட்டு, மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் , ஸ்ரீ பிரஹலாத் சிங் படேல் “ஜல்லியன்வாலா பாக்” கண்காட்சியை 11 மார்ச் 2020 அன்று மாலை 5.00 மணிக்கு தேசிய காப்பக வளாகத்தில் திறந்து வைக்க உள்ளார்.
  • இந்திய தேசிய ஆவணக்காப்பகம் கலாச்சார அமைச்சின் கீழ் இயங்கும் அலுவலகமாகும். இது மார்ச் 11, 1891 அன்று கொல்கத்தாவில் நிறுவப்பட்டது.

நுபூர் குல்ஷ்ரேஸ்தா - முதல் பெண் டி.ஐ.ஜி

  • இந்திய கடலோர காவல்படையின் டி.ஐ.ஜி ஆக பதவி உயர்வு பெற்ற முதல் பெண்மணி நூபூர் குல்ஷ்ரேஸ்தா ஆவர். அவர் 1999 இல் இந்திய கடலோர காவல்படையில் சேர்ந்தார்.

இந்தியாவின் வளர்ச்சி 5.3% குறைவு

  • தர மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் இந்தியாவுக்கான அதன் வளர்ச்சி கணிப்புகளை 2020 ஆம் ஆண்டில் 5.4 சதவீதத்திலிருந்து 5.4 சதவீதமாக குறைத்துள்ளது, ஏனெனில் கொரோனா வைரஸ் பரவல் உலகளவில் வளர்ச்சியை பாதிக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அறிக்கை

  • ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் “சர்வதேச ஆயுதப் பரிமாற்றம் குறித்த அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, உலகின் இரண்டாவது பெரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா உள்ளது.
  • உலகின் முதல் 5 ஆயுத இறக்குமதியாளர்களில் சவுதி அரேபியா, இந்தியா, எகிப்து, ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகியவை அடங்கும் என்று அறிக்கை கூறுகிறது. இந்த 5 நாடுகளும் உலக ஆயுத இறக்குமதியில் 36% சதவீத ஆயுதங்களை இறக்குமதி செய்கின்றனர்.

'COVA பஞ்சாப்' மொபைல் ஆப்

  • பஞ்சாப் தலைமைச் செயலாளர் கரண் அவ்தார் சிங் (Karan Avtar Singh) திங்களன்று 'COVA Punjab' மொபைல் செயலியை அறிமுகப்படுத்தினார்.
  • COVA என்பது Corona Virus Alert-ஐ குறிக்கிறது மற்றும் பல்வேறு சீர்திருத்த மற்றும் தடுப்பு பராமரிப்பு ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் விழிப்புணர்வை பரப்புவதற்காக, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையுடன் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்டுள்ளது.
Share with Friends