'ஆண்டின் சிறந்த நபர் - 2019
- பருவநிலை மாற்றம் குறித்து தொடர்ந்து போராட்டத்தை முன்னிறுத்தி வரும் சிறுமி க்ரேட்டா தன்பெர்க்கிற்கு இந்த ஆண்டின் சிறந்த நபர் என்ற கவுரவத்தை வழங்கியுள்ளது 'டைம்' இதழ்.
- ஸ்வீடன் நாட்டு பள்ளி சிறுமியான க்ரேட்டா தன்பெர்க் பருவநிலை மாற்றத்தால் மக்கள் அழிய போகும் ஆபத்தை உலகுக்கு உணர்த்த தனது போராட்டத்தை ஸ்வீடன் நாடாளுமன்றம் முன்னாள் தொடங்கினார். தற்போது ஐ.நா வரை தனது குரலை ஒலிக்க செய்து உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார் சிறுமி க்ரேட்டா.
"திஷா சட்டம்"
- பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் திஷா சட்டத்திற்கு ஆந்திர மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டி பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறினார்.
- அதன்படி , ஆந்திர பிரதேச திஷா சட்டம் என்ற பெயரிட்டுள்ள புதிய சட்டத்தின்படி, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்ட 21 நாட்களில் விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முதல் 7 நாட்களில் விசாரணைகள் அனைத்தும் முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பழமையான ஓவியம்
- உலகின் பழமையான ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இந்தோனேசியாவில் இரு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டறியப்பட்ட குகை ஓவியம் 43,900 ஆண்டுகளுக்கு முந்தையது என ஆய்வில் தெரிய வந்;துள்ளது.
- இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் இதுபோன்று 242 குகை ஓவியங்கள் கண்டறியப்பட்டள்ளன.
“மைண்ட் மாஸ்டர்”
- இந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் சுயசரிதை “மைண்ட் மாஸ்டர்” என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
- தனது செஸ் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை படிப்பினைகள் ஆகியவற்றை தொகுத்து 2 ஆண்டுகள் இந்நூல் எழுதப்பட்டது.
- ஃபிடே தரவரிசையில் தற்போது ஆனந்த் 15-ஆவது இடத்தில் உள்ளார்.
- 5 முறை உலக சாம்பியன் பட்டத்தினை ஆனந்த் வென்றுள்ளார்.
- ஃபிடே உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் ஆனந்த் ஆவர்.
- இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனந்த் ஆவர்.
FICCI- சிறந்த விளையாட்டு வீரர்
- (இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு) இந்திய விளையாட்டு விருதுகளின் 2019 ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்' என்ற விருதானது புது தில்லியில் உள்ள FICCI கூட்டமைப்பு வளாகத்தில் பின்வரும் நபர்களுக்கு வழங்கி கௌரவிக்கப் பட்டது.
- இந்திய மகளிர் ஹாக்கி அணித் தலைவரான ராணி ராம்பால் (25).
- ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீரரான சவுரப் சவுத்ரி (17).
ISRO
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) தமிழ்நாட்டின் துத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரப்பட்டினத்தின் சிறிய கடலோர குக்கிராமத்தில் 3 வது ராக்கெட் ஏவுதளத்தை அமைப்பதற்கான ஆயத்த பணிகளைத் தொடங்கியுள்ளது.
- தற்போது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இரண்டு ஏவுதளங்களை கொண்டுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவில் இருந்து செயற்கைக்கோள் ஏவுதல்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் விளைவாக கூடுதல் ஏவுதளங்களுக்கான கோரிக்கை எழுந்துள்ளது.
தேசிய பழங்குடி நடன விழா
- சத்தீஸ்கரின் தலைநகர் ராய்ப்பூரில் டிசம்பர் 27 முதல் 29 வரை ஒரு தேசிய பழங்குடி நடன விழா நடைபெறும். இந்த நிகழ்வில், 23 மாநிலங்கள் மற்றும் ஆறு நாடுகளைச் சேர்ந்த சர்வதேச நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்று அந்தந்த பழங்குடி நாட்டுப்புற கலாச்சாரத்தை சித்தரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மூன்று நாள் நிகழ்ச்சியில் 23 மாநிலங்களைச் சேர்ந்த 151 கலைக்குழுக்களைச் சேர்ந்த 1,400 கலைஞர்களும், இலங்கை, பெலாரஸ், உகாண்டா, பங்களாதேஷ் உள்ளிட்ட ஆறு நாடுகளைச் சேர்ந்த விருந்தினர் கலைஞர்களும் பங்கேற்க உள்ளனர்.