Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 15th August 19 Content

தமிழ்நாடு - 1956

  • 1956-ம் ஆண்டு நவம்பர் முதல் நாள், தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்டது.
  • அதை பெருமைப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் முதல் நாள் “தமிழ்நாடு நாள்” என்ற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது.
  • தமிழ்நாட்டில் ஏற்கனவே 33 மாவட்டங்கள் இருந்தன. மேலும் 2 புதிய மாவட்டங்கள் இந்த நிலையில், நெல்லை மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு தென்காசியை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டமும், காஞ்சீ புரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டமும் உருவாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 18-ந் தேதி சட்டசபையில் அறிவித்தார்.

செ.சைலேந்திரபாபு

  • பொதுமக்களின் சேவை, புலன் விசாரணையில் சிறப்பாக செயல்பட்ட 16 பேர் இந்த ஆண்டு முதல்-அமைச்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் செயல்பட்டு சிறந்த பொதுச் சேவைக்கான முதல்-அமைச்சர் விருதுக்கு செ.சைலேந்திரபாபு (ரெயில்வே டி.ஜி.பி.), ப.கந்தசாமி (கூடுதல் டி.ஜி.பி., நிர்வாகம்), ஆர்.தினகரன் (கூடுதல் போலீஸ் கமிஷனர், சட்டம்-ஒழுங்கு பிரிவு, சென்னை வடக்கு), ஜா.நாகராஜன் (இன்ஸ்பெக்டர், கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையம், சேலம் மாநகரம்), சி.செந்தில்குமார் (இன்ஸ்பெக்டர், ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு, தஞ்சாவூர் மாவட்டம்), சா.டெய்சி (ஏட்டு, மனநிலை காப்பக போலீஸ் நிலையம், சென்னை கிழக்கு மண்டலம்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி விருது

  • குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின விழாவையொட்டி ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றும் போலீசாருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டு வருகிறது.
  • இந்த ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி தமிழக காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 23 போலீசாருக்கு ஜனாதிபதி விருதை மத்திய அரசு நேற்று அறிவித்தது.

  • கிருஷ்ணராஜன் - கிருஷ்ணகிரி லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி. யாகூப் - சென்னை கியூ பிரிவு டி.எஸ்.பி., தாமஸ் ஜேசுதாசன் - சென்னை சென்டிரல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர்

உலக ஜூனியர் மல்யுத்தம்

  • எஸ்தோனியாவில் நடந்த உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் (86 கிலோ உடல் எடைப்பிரிவு) இந்திய வீரர் தீபக் பூனியா, ரஷியாவின் அலிக் ஷிப்ஜூகோவை எதிர்கொண்டார்.
  • இருவரும் தலா 2 புள்ளிகளுடன் சமநிலை வகித்த நிலையில் கடைசி புள்ளியை எடுத்ததன் அடிப்படையில் தீபக் பூனியா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
  • உலக ஜூனியர் மல்யுத்தத்தில் இந்தியர் ஒருவர் பட்டம் வெல்வது கடந்த 18 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்

  • டெல்லி மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் அக்டோபர் 29 முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர்

  • இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் - ஆனந்தபாய் ஜோஷி (அமெரிக்காவில் பட்டம் பெற்றார்).
  • இந்தியாவின் முதல் பெண் பொறியாளர் - லலிதா (சிவில் 1950).
  • இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி - அன்னா ஜார்ஜ் மல்கோத்ரா
Share with Friends