Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 18th March 20 Content

தினமும் இரும்பு மழை - புதிய கோள்

  • வாஸ்ப் - 76பி (WASP 76b)- இந்த கோள் பூமியில் இருந்து 640 ஒளியாண்டு துரத்தில் உள்ளது.
  • பகல் பகுதி வெப்பநிலை 2,400 டிகிரி செல்ஷியஸ், இந்த வெப்பநிலை உலோகங்களை ஆவியாக்கும் ன்மை கொண்டது.
  • மற்றும் இதன் இரவு நேர வெப்பநிலை 1400 டிகிரி செல்ஷியஸ் இந்த வெப்பநிலையில், பகல் நேரத்தில் ஆவியான உலோகங்கள் இறுகி மழையாகப் பெய்கின்றன.
  • இந்த கோள் பூமியில் இருந்து 640 ஒளியாண்டு துரத்தில் உள்ளது.
  • வாஸ்ப் 76பி தனது நட்சத்திரத்திற்கு மிக அருகில் உள்ளது.
  • வாஸ்ப் 76பி தன்னை தானே சுற்றிக்கொள்ள 43 மணி நேரமாகிறது.
  • இந்த கோளில் நிலவும் அதி வெப்பத் தன்மையால் மேகங்கள் காணப்படுவதில்லை. வளிமண்டலத்தில் உள்ள அனைத்து மூலக்கூறுகளும் தனித்தனி அணுக்களாக சிதறுகின்றன.

கீழடி நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது

  • சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 6 ஆம் கட்ட அகழாய்வில் செவ்வாய்க்கிழமை சுமாா் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய பெரிய மண்பானை கண்டெடுக்கப்பட்டது.

7 பில்லியன் ஆண்டுகள் வயதான விண்கற்கள்

  • ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தின் முர்சிசான் பகுதியில் 1969-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி விண்ணில் ஒரு விண்கல் வெடித்துச் சிதறியுள்ளது.
  • மணல் போன்ற இந்தக் கற்கள் சூரியனைவிட பழமையானவையாக இருக்கலாம்; மற்றும் இவை விண்மீன்களுக்கு இடையே சுற்றி வந்த நட்சத்திரத்தின் கற்கள் எனவும் கூறுகின்றனர்.
  • இவை பூமியில் விழுந்த மிக மிகப் பழைய கெட்டியான பொருள் எனக் கூறியுள்ளனர்.
  • இவை குறைந்தது 5-7 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை.

COVID-19 க்காக 24×7 உதவி எண்

  • COVID-19 க்காக 24×7 உதவி எண்ணை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
  • இதில் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா எண்
  • மற்ற எண்கள் 91- 11- 23012113, 91- 11- 23014104 மற்றும் 91- 11- 23017905.
  • FAX எண் 91- 011- 23018158.
  • [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிழும் பொது மக்கள் மின்னஞ்சல் அனுப்பலாம்.

சோலார் சக்ரா மிஷன்

  • சோலார் சக்ரா மிஷன் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகத்தால் (எம்.எஸ்.எம்.இ) தொடங்கப்பட்டது. காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் இந்த திட்டத்தை செயல்படுத்தியது.
  • வேலைவாய்ப்பு உருவாக்கம், குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்வதையும், கிராமப்புறங்களில் சூரிய சர்கா கிளஸ்டர்கள் மூலம் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதுவரை, மிஷன் சோலார் சர்காவின் கீழ் பத்து திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

யூரோ -2020 கால்பந்து போட்டி

  • ‘யூரோ’ கோப்பை கால்பந்து தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
  • கடைசியாக 2016ல் பிரான்சில் நடந்தது.
  • இதில் போர்ச்சுகல் அணி கோப்பை வென்றது.
  • இதன் 16வது தொடர் வரும் ஜுன் 11 முதல் ஜூலை 11 வரை நடப்பதாக இருந்தது.
  • கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, ‘யூரோ’ கோப்பை கால்பந்து தொடர் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி

  • ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
  • கோவாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் இறுதிப்போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா அணி கைப்பற்றி உள்ளது.

அபிமன்யுப்பூர்

  • மாநில அரசின் வேண்டுகோளின்படி ஹரியானாவின் குருக்ஷேத்ரா மாவட்டத்தில் அமீன் கிராமத்தை அபிமன்யுப்பூர் என்று பெயர் மாற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
  • ஒரு சில மத்திய அமைப்புகளிடமிருந்து அனுமதி பெற்ற பின்னர் மத்திய உள்துறை அமைச்சகத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Share with Friends