‘பெட் டிடெக்டிவ்’
- வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் செல்லப் பிராணிகள் தொலைந்துவிட்டால் அவற்றைக் கண்டுபிடித்து உரியவரிடம் அளிக்கும் பணியை ‘பெட் டிடெக்டிவ்’ என அழைக்கின்றனர்.
- சீனாவைச் சேர்ந்த சன் ஜின்ராங் என்பவர் இந்த பெட் டிடெக்டிவ் பணியைச் செய்து வருகிறார். சீனாவின் முதல் பெட் டிடெக்டிவ் என கவுரவிக்கப்பட்டுள்ள சன் ஜின்ராங் இதுவரையில் சுமார் 1000 வளர்ப்புப் பிராணிகள் உரியவர்களிடம் கண்டறிந்து வழங்கியுள்ளார்.
3000 ஆண்டுகள் பழமையான நகரம்
- 3000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தான் - ‘கீழடி’யில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- வடமேற்கு பாகிஸ்தான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இப்பழமையான நகரின் பெயர் பாஜீரா.
- பல இந்து ஆலயங்களின் தொன்மங்கள், நாணயங்கள், பானைகள், ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் சில 5,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தனவாக உள்ளன.
- ஸ்வாட் மாவாட்டத்தில் உள்ள இந்த பாஜீரா நகரத்துக்கு மாமன்னர் அலெக்ஸாண்டர் 326 கி.பி-யின் போது வந்துள்ளார்.
- ஒடிகிராம் என்னும் போரில் பங்குபெற்று வென்ற அலெக்ஸாண்டர் பாஜீரா கோட்டையைக் கட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.
பனி உருகுவதால் பரவும் வைரஸ்
- ஆர்டிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள பகுதிகளில் PDV என்னும் வைரஸ் தாக்குதல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கடல்வாழ் உயிரினங்களைப் பாதித்து வருகிறது.
- ஆர்டிக் பெருங்கடல் மட்டுமல்லாது சமீபத்திய காலங்களில் வடக்கு பசிபிக் பெருங்கடல் பகுதிகளிலும் இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு வருகிறது.
- இதற்கான காரணத்தை ஆராய்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் காலநிலை மாற்றத்தாலே PDV வைரஸ் அதிகப்படியாகப் பரவி வருவதாகத் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஆர்டிக் பனி 12.8 சதவிகிதம் உருகுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- கடந்த 2003-ம் ஆண்டு PDV தாக்குதல் உயரத் தொடங்கினாலும் 2009-ம் ஆண்டு இதனது பாதிப்பு கடுமையான உச்சத்தை அடைந்து பல கடல்வாழ் உயிரினங்களுக்கு சேதாரத்தை ஏற்படுத்தியது. இந்த கடல்வாழ் உயிரினங்கள் மூலம் PDV வைரஸ் பரவி வருவதாகவும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளனர் ஆய்வாளர்கள்.
புதிய தடுப்பூசி - டைபாய்டு காய்ச்சல்
- உலகிலேயே டைபாய்டு காய்ச்சலுக்கு முதன் முறையாக தடுப்பூசியைப் பாகிஸ்தான் அறிமுகம் செய்துள்ளது.
- அந்த நாட்டில் உள்ள சிந்து மாநிலத்தில் டைபாய்டு காய்ச்சலில் ஏராளமானோர் ஆண்டுதோறும் உயிரிழப்பதால், அங்கு முதன்முதலில் இந்த தடுப்பூசியைப் பாகிஸ்தான் அறிமுகம்செய்துள்ளது.
- சிந்து மாநிலத்தில்"சூப்பர்பக் டைபாய்டு காய்ச்சல்" பரவியது. இந்த சூப்பர் பக் டைபாய்டு காய்ச்சலால் 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பும் 20 சதவீதம் அதிகரித்தது.
- இந்த சூப்பர்பக் டைபாய்டு காய்ச்சலுக்காக "தி டைபாய்ட் கான்ஜுகேட் வாக்ஸின்"(டிசிவி) தடுப்பூசியை பாகிஸ்தான் அறிமுகம் செய்துள்ளது. இந்த தடுப்பூசி அறிமுக நிகழ்ச்சி கராச்சி நகரில் நடந்தது.
- இந்த தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனமும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியா - ஒரே நாடு, ஒரே ஊதிய நாள் திட்டம்
- நாடு முழுவதும் அனைத்து துறை ஊழியர்களுக்கும் ஒரே நாளில் சம்பளம் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
- அனைத்து துறை ஊழியர்களுக்கும் ஒரே நாளில் சம்பளம் போட வகை செய்யும் சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் கூறியுள்ளார்.
அக்னி 2 ஏவுகணை (nov 18)
- முதல்முறையாக இரவில் ஏவப்பட்ட அக்னி 2 ஏவுகணை சோதனை வெற்றி
- அக்னி 2 ஏவுகணை - 20 மீட்டர் நீளமும் 17 டன் எடையும் கொண்டது.
- இந்த ஏவுகணை 1000 கிலோ எடைகொண்ட வெடிபொருளை சுமந்துகொண்டு 2,000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது.
- அணு ஆயுதத்தைத் தாங்கியபடி கண்டம் விட்டு கண்டம் சென்று 2,000 கி.மீ. தூரம் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக் கூடிய அக்னி 2 ஏவுகணை ஏற்கெனவே ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
- ஒடிசா மாநிலம் பலாசூரில் கடலோரப் பகுதியில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் தீவில் இருந்து அக்னி ஏவுகணை 2 கடந்த சனிக்கிழமை இரவு ஏவப்பட்டது. வங்கக் கடல் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை குறிப்பிட்ட நேரத்தில் துல்லியமாக தாக்கி அழித்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்கா - இந்தியா
- அமெரிக்காவில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை; முதலிடத்தில் சீனா- இரண்டாம் இடத்தில் இந்தியா
- அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2018 - 2019 ஆம் ஆண்டுகளில் 3% அதிகரித்துள்ளது.
- அமெரிக்காவில் அதிக அளவு மாணவர்கள் பயிலும் நாடுகளின் விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில் முதல், இரண்டு இடங்களில் சீனா, இந்தியா உள்ளது.
- அடுத்தடுத்த இடங்களில் தென்கொரியா, சவுதி அரேபியா, கனடா, வியட்நாம், தைவான், ஜப்பான், பிரேசில், மெக்ஸிகோ ஆகிய நாடுகள் உள்ளன.