மண் வள அட்டை தினம்
- பிரதமர் நரேந்திர மோடி மண் வள அட்டை (Soil Health Card ) திட்டத்தை 2015 பிப்ரவரி 19 அன்று ராஜஸ்தானின் சூரத்கரில் தொடங்கினார்.
- மண்ணில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு வழிகளை வழங்குவதற்காக ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒரு முறை விவசாயிகளுக்கு மண் வள அட்டைகளை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இத்திட்டம் மகசூல் அதிகரிப்பதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை உறுதி செய்கிறது, மேலும் இது நிலையான விவசாயத்தையும் ஊக்குவிக்கிறது.
தெலுங்கானா - ஆளுநர்
- தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தமிழக பாஜக தலைவர் பதவி வகித்த தமிழிசை சவுந்திரராஜனை தெலுங்கானா மாநில ஆளுநராக மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.
‘பியார் கா பவுதா’
- பீகாரின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையானது "ஜல் ஜீவன் ஹரியாலி" என்ற பிரச்சாரத்தின் கீழ் மாநிலத்தில் மரங்களை நடும் நடைமுறையை ஊக்குவிக்கும் நோக்கில் பியார் கா பவுதா (அன்பினால் ஒரு தாவரம்) என்ற ஒரு இயக்கத்தைப் பாட்னாவில் தொடங்கியுள்ளது.
பறவைகள் ஆராய்ச்சி நிலையம் - பீகார்
- தமிழகம் (சென்னை), ராஜஸ்தான் (ஜெய்ப்பூர்) மற்றும் ஒரிசா (புவனேஷ்வர்) ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக பீகார் வட இந்தியாவின் முதல் பறவைகள் ஆராய்ச்சிக்கான நிலையம் ஒன்றை அமைத்துள்ளது.
- இந்த நிலையம் பீகாரில் உள்ள பாகல்பூரில் இயங்கும் , இது கங்கைக்கு அருகில் அமைந்துள்ளது மற்றும் புலம்பெயர்ந்த பறவைகளின் விருப்பமான இடமாக அறியப்படுகிறது.
சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானம்
- உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை குஜராத் மாநிலம் கிரிக்கெட் சங்கம் உருவாக்கியுள்ளது. அது, அகமதாபாத்தில் சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானம் என்ற பெயரில் உள்ளது.
- இந்த மைதானம் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் உருவாகி இருக்கிறது. தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மைதானமே உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாகும்.
- இங்கு ஒரு லட்சத்து 24 பேர் அமர்ந்து விளையாட்டை கண்டுரசிக்கலாம். ஆஸ்திரேலியாவின் மைதானத்தை பின்னுக்குத் தள்ளும் விதமாக அகமதாபாத் மைதானம் உருவாகி வருகிறது.
- இந்த மைதானத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் திறந்து வைக்கவுள்ளார்.
4 ஆண்டுகள் நாடா தடை - அமித் தஹியா
- சோனிபட்டில் உள்ள டைபெற்ற 2 வது தேசிய ஜாவெலின் த்ரோ ஓபன் சாம்பியன்ஷிப் 2019 இன் போது மாதிரி சேகரிப்பைத் தவிர்த்து, அதிகாரிகளை ஏமாற்ற முயன்றதற்காக, ஈட்டி எரியும் வீரர் அமித் தஹியாவுக்கு தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (நாடா) நான்கு ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
“உணர்ச்சிகளால் ஒன்றுபடு ”
- டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளின் ஏற்பாட்டுக் குழு, வரவிருக்கும் 2020 ஒலிம்பிக்கிற்கான “உணர்ச்சிகளால் ஒன்றுபடு ” என்ற அதிகாரப்பூர்வ குறிக்கோளை வெளியிட்டுள்ளது .
- பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைத்து அவர்களின் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட வகையில் கொண்டாடும் விதமாக விளையாட்டின் ஆற்றலை இந்த குறிக்கோள் வலியுறுத்துகிறது.
- டோக்கியோ 2020 ஒலிம்பிக் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெறும்.
பயோ ஏசியா உச்சி மாநாட்டை 2020
- பிப்ரவரி 17, 2020 முதல் பிப்ரவரி 19, 2020 வரை ஹைதராபாத்தில் பயோ ஆசியா உச்சி மாநாடு 2020 ஐ தெலுங்கானா அரசு நடத்துகிறது.
- வாழ்க்கை அறிவியல் நிறுவனங்களின் திறன்களையும் அவற்றின் முதலீடுகளையும் ஆராய்வதே உச்சிமாநாட்டின் முக்கிய நோக்கம்.
- உச்சிமாநாட்டின் கருப்பொருள்: இன்று நாளைக்கானது. The theme of the Summit is : Today for Tomorrow
‘காஷி ஏக் ரூப் அனெக்’
- உத்தரப்பிரதேச வாரணாசியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘காஷி ஏக் ரூப் அனெக்’ என்ற கலாச்சார கலை மற்றும் கைவினைக் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ‘காஷி ஏக் ரூப் அனெக்’ கண்காட்சியில் உத்தரபிரதேசம் முழுவதிலும் இருந்து 10,000 க்கும் மேற்பட்ட கைவினைஞர்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியது.
- இந்த நிகழ்வில், உத்தரபிரதேச அரசு ‘ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது, அதில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு கைவினை அடையாளம் காணப்பட்டது.