Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 2nd March 20 Content


பிப்ரவரியில் ரூ.1.05 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

  • பிப்ரவரி மாதம் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) முறை மூலம் ரூ.1.05 லட்சம் கோடி வசூலாகியிருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வசூலான ஜிஎஸ்டி தொகையைக் காட்டிலும் இது 8 சதவீதம் அதிகமாகும். அதே நேரம் கடந்த மாத ஜிஎஸ்டி வசூலை (ரூ.1.10 லட்சம் கோடி) காட்டிலும் இது குறைவாகும்.
  • கடந்த மாதம் ஜிஎஸ்டியாக மொத்தம் ரூ.1,05,367 கோடி வசூலிக்கப்பட்டது. இதில், மத்திய அரசின் ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி) ரூ.20,569 கோடி, மாநில அரசின் ஜிஎஸ்டி (எஸ்ஜிஎஸ்டி) ரூ.27,348 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) ரூ.48,503 கோடி, செஸ் வரி ரூ.8,947 கோடி ஆகியவை அடங்கும்.
  • சிஜிஎஸ்டி-க்கு ரூ.22,586 கோடியும், எஸ்ஜிஎஸ்டி-க்கு ரூ.16,553 கோடியும் செலுத்தப்பட்டுவிட்டது.
  • உள்நாட்டு பரிவா்த்தனை மூலம் வசூலிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வசூலிக்கப்பட்டதைக் காட்டிலும் கடந்த பிப்ரவரி மாதம் 12 சதவீதம் அதிகமாக வசூலித்துள்ளது.
  • சரக்குகளை இறக்குமதி செய்ததன் மூலம் கடந்த மாதம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வசூல், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 8 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஜி.எஸ்.எல்.வி.-எப்10 ராக்கெட்

  • ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து மாா்ச் 5-ஆம் தேதி மாலை 5.43 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.
  • இஸ்ரோ சாா்பில் இதுவரை ஏவப்பட்டுள்ள 13 ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளில், ஜி.எஸ்.எல்.வி.-எப்10 ராக்கெட்தான் மிக அதிக உயரம் கொண்டதாகும்.
  • இதற்கு முன்பாக, கடந்த 2018 டிசம்பா் 19-இல் ஜிசாட்-7ஏ செயற்கைக்கோளைத் தாங்கிச் சென்ற ஜி.எஸ்.எல்.வி.-எப்11 ராக்கெட்தான், இதுவரை அனுப்பப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளில் மிக அதிக உயரம் கொண்டதாக இருந்தது. அதன் உயரம் 167 அடி (50.926 மீ) ஆகும்.
  • இந்த நிலையில், வியாழக்கிழமை (மாா்ச் 5) விண்ணில் ஏவப்படும் ஜிஐசாட்-1 செயற்கைக்கோளை தாங்கிச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி.-எப்10 ராக்கெட் 170 அடி உயரம் கொண்டதாகும்.

இந்துஸ்இந்து வங்கி லிமிடெட்

  • இந்திய ரிசர்வ் வங்கி சுமந்த் கத்பாலியாவை இந்துஸ்இந்து வங்கி லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமித்தது. இந்த நியமனம் 2020 மார்ச் 24 முதல் அமலுக்கு வருகிறது. அவர் மூன்று ஆண்டுகள் பதவியில் இருப்பார். ரோமேஷ் சோப்டிக்கு பதிலாக கத்பாலியா நியமிக்கப்பட்டுள்ளார்.

செபியின் தலைவர் அஜய் தியாகி

  • செபி(SEBI) தலைவர் அஜய் தியாகி இந்திய அரசிடமிருந்து 6 மாத கால நீட்டிப்பைப் பெறுகிறார், அவருடைய பதவிக்காலம் 3 ஆண்டுகள் (2017 முதல்) பிப்ரவரி 29, 2020 அன்று முடிவடையும்.

ஆா்மீனியாவுக்கு ரூ.288 கோடியில் ரேடாா்: ஒப்பந்தத்தைப் பெற்றது இந்தியா

  • ஆா்மீனியாவுக்கு ரூ.288.70 கோடி (சுமாா் ரூ.40 மில்லியன் டாலா்) மதிப்பிலான ஆயுதங்களைக் கண்டறியும் ரேடாா்களை வழங்கும் ஒப்பந்தத்தை இந்தியா பெற்றுள்ளது. ரஷியா, போலந்து ஆகிய நாடுகளும் இந்த ஒப்பந்தத்துக்கான போட்டியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
  • இந்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆா்டிஓ) மூலம் உருவாக்கப்பட்டு 'பெல்' நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் 'ஸ்வாதி' என்ற பெயரிலான, ஆயுதங்களைக் கண்டறியும் ரேடாா்களை ஆா்மீனிய நாட்டுக்கு விற்பனை செய்யும் ஒப்பந்தத்தை இந்தியா பெற்றுள்ளது.
  • 4 ரேடாா்களை வழங்கும் இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.288.70 கோடியாகும். ரஷியா, போலந்து நாடுகளைச் சோந்த நிறுவனங்களும் இந்த ஒப்பந்தத்தைப் பெறும் போட்டியில் இருந்தன. அவற்றை சமாளித்து இந்தியா இந்த ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.
  • இந்திய பாதுகாப்புத் துறையில் செயல்படுத்தப்படும் 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்தியா, ரஷியா, போலந்து ஆகியவை வழங்கிய ரேடாா்களை பரிசோதித்த ஆா்மீனிய அதிகாரிகள், நமது நாட்டு ரேடா்களை வாங்க முடிவு செய்தனா்.

தமிழக சட்டப்பேரவை - மானியக் கோரிக்கைகள்

  • பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக தமிழக சட்டப்பேரவை ஏப்ரல் 9-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 2020-2021 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 17ஆம் தேதி மீண்டும் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் 20ஆம் தேதி, குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
  • இதையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு மார்ச் 9ஆம் தேதி தொடங்க உள்ளதாக சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் அறிவித்தார்.

மலேசியாவின் புதிய பிரதமர்

  • முன்னாள் உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசின் மலேசியாவின் புதிய பிரதமராக பதவியேற்றார். 2018 பொதுத் தேர்தல்களுக்குப் பின்னர் பதவியில் இருந்த 94 வயதான மகாதீர் முகமது திடீரென ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அவர் இந்த பதவியில் நியமிக்கப்பட்டார்.

Share with Friends