அக்டோபர் 1-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் மாற்றங்கள்
- அக்டோபர் 1-ம் தேதி முதல் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் ஆர்சி புக், ஓட்டுநர் உரிமம், காப்பீடு போன்றவற்றை காகிதங்களாக (ஹார்ட் காப்பிஸ்) வைத்திருக்கத் தேவையில்லை. அதற்கு மாறாக மத்திய அரசின் டிஜிலாக்கர் அல்லது எம்பரிவாஹன் மூலம் டிஜிட்டல் முறையில் வைத்துக்கொள்ளலாம்.
- கிரெடிட், டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் இனிமேல் உள்நாட்டில் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். வெளிநாட்டுக்குச் செல்லும்போது அங்கு பொருட்கள் வாங்குதற்கு கணக்கு வைத்துள்ள வங்கியிடம் கோரிக்கை வைத்தால் மட்டுமே கார்டுகள் மூலம் வெளிநாடுகளில் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்படும்.
- பேக்கிங் செய்யப்படாத, சில்லறையில் விற்பனை செய்யப்படும் பலகாரம், இனிப்புகள் போன்றவற்றில் எத்தனை நாட்களுக்குள் பயன்படுத்தலாம் என்று தேதி குறிப்பிட வேண்டும்.
- வெளிநாடுகளி்ல் இருந்து இறக்குமதி செய்யப்படும் எல்இடி, எல்சிடி டிவி பேனல்களுக்கு 5 சதவீதம் சுங்க வரியை மத்திய அரசு விதித்துள்ளது. ஆதலால், இனிவரும் காலங்களில் எல்இடி, எல்சிடி தொலைக்காட்சிகளின் விலை அதிகரிக்கும்.
- வெளிநாடுகளில் இருந்து ரூ.7 லட்சத்துக்கு மேல் பணப்பரிமாற்றம் செய்தால், 5 சதவீதம் கூடுதல் வரி விதிக்கும் நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
- கடுகு எண்ணெயில் மற்ற எந்த சமையல் எண்ணெய் கலந்து விற்பனை செய்ய அக்டோபர் 1-ம் தேதி முதல் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு தடை விதித்துள்ளது. இந்தத் தடை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
- பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவசமாக எல்பிஜி இணைப்பு வழங்கும் மத்திய அரசின் சலுகை செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிந்துவிட்டது.
- இனிமேல் உஜ்வாலா திட்டத்தின் கீழ் எல்பிஜி இணைப்பு இலவசம் இல்லை. அஜய் குமார் பல்லா குழு (Ajay Kumar Bhalla Committee) : அனைத்து சீன அந்நிய முதலீட்டு திட்டங்களையும் ஆராய இந்திய அரசு ஒரு ஆய்வுக் குழுவை உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா தலைமையில் 1-10-2020 அன்று அமைத்துள்ளது.
இந்தியா-ஓமன்
- இந்தியா-ஓமன் இடையே சிறப்பு விமானங்களை இயக்குவதற்கான இருதரப்பு விமான சேவை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.
- ஏற்கெனவே ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கனடா, பிரான்ஸ், ஜொ்மனி, இராக், ஜப்பான், மாலத்தீவு, நைஜீரியா, கத்தாா், ஐக்கிய அரபு அமீரகம், கென்யா, பூடான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 15 நாடுகளுடனும் சிறப்பு விமான சேவை ஒப்பந்தத்தை இந்தியா செய்திருந்த நிலையில், தற்போது வளைகுடா நாடான ஓமனுடன் அதுபோன்ற ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
UNGA 75
- இந்தியா 100 படுக்கைகள் கொண்ட புற்றுநோய் மருத்துவமனை மற்றும் 22, 000 இருக்கைகள் கொண்ட கிரிக்கெட் மைதானத்தை மாலத்தீவு நாட்டின் ஹுல்ஹுமலே (Hulhumale) எனுமிடத்தில் 800 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் கட்டவுள்ளது.
மும்பை மெட்ரோ ரயில் திட்டம்
- மும்பை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக 241 மில்லியன் அமெரிக்க டாலர்களை (ஏறத்தாழ 1760 கோடி ரூபாய்) வழங்க பிரிக்ஸ்(BRICS) அமைப்பின், புதிய மேம்பாட்டு வங்கி (New Development Bank ) ஒப்புதல் அளித்துள்ளது.
- மேலும், டெல்லி-காசியாபாத்-மீரட் பிராந்திய விரைவான போக்குவரத்து அமைப்பு திட்டத்திற்கு (Delhi-Ghaziabad-Meerut Regional Rapid Transit System (RRTS) Project) 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 3670 கோடி ரூபாய்) வழங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.