Persons Studied in Tamil Medium – PSTM
- தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கான சட்டதிருத்த மசோதாவின் படி, தொடக்கப்பள்ளி முதல் தமிழ் வழியில் படித்த விண்ணப்ப தாரர்களுக்கு மட்டுமே ‘தமிழ் வழியில் படித்த மாணவர்கள்’(Persons Studied in Tamil Medium – PSTM) என்ற ஒதுக்கீட்டின் கீழ் நேரடி ஆட்சேர்ப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட இருக்கின்றது.
- 2010ஆம் ஆண்டில், தமிழக அரசானது PSTM விண்ணப்பதாரர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டை அறிவித்தது.
- இந்த மசோதாவானது PSTM மாநிலச் சட்டம், 2010ன் கீழ், பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் தமிழ்நாட்டில் நியமனம் என்பதைத் திருத்தம்
செய்ய முயலுகின்றது.
சர்வதேச மகிழ்ச்சி நாள்
- ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 ஆம் தேதி உலக அளவில் சர்வதேச மகிழ்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது. உலகளாவிய மகிழ்ச்சி இயக்கத்தை ஊக்குவிக்கவும் முன்னேற்றவும் இந்த நாள் நோக்கமாக உள்ளது.
- 2020 ஆம் ஆண்டின் சர்வதேச மகிழ்ச்சியின் கருப்பொருள் அனைவருக்கும் ஒன்றான மகிழ்ச்சி என்பதாகும்.
ஊரடங்கு உத்தரவு
- பிரதமரின் மக்கள் ஊரடங்கு அறி விப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் நாளை (22-ம் தேதி) அரசுப் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயக்கப்படாது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
- ஆட்டோ, டாக்ஸிகள் ஓடாது என்றும் கடைகள், ஓட்டல்கள் மூடப் படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
- கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களின் எல்லைகள் இன்று முதல் மூடப்படும் என்றும் தமிழக
அரசு அறிவித்துள்ளது.
கொரோனா - 9 அம்ச நடவடிக்கைகள்
- பிரதமர் மோடி, 9 அம்ச நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார் அத்தியாவசிய பணிகளை தவிர மற்ற பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே வேண்டாம்.
- 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது.
- வரும் 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் தானாக முன்வந்து ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும்.
- கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு வரும் 22ம் தேதி 5 மணிக்கு மணியோசை மூலமும், கைத்தட்டியும் நன்றி தெரிவிக்க வேண்டும்.
- சாதாரண மருத்துவ சிகிச்சைக்கு செல்வதை தவிர்க்கவும். அறுவை சிகிச்சை செய்ய தேதி நிர்ணயக்கப்பட்டால் தள்ளிப் போடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மத்திய நிதி அமைச்சர் தலைமையில் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
- வீட்டில் பணி புரியும் ஊழியர்களுக்கு சம்பளத்தை நிறுத்த கூடாது.
- பதற்றத்துடன் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்
- வதந்திகளை நம்ப வேண்டாம்.
NAVIC செயற்கைக்கோள்
- NAVIC என்பது ஒரு இந்தியச் செயற்கைக்கோள் தொகுப்பாகும்.
- இந்தியத் துணைக் கண்டத்தில் தொடர் கண்காணிப்பை வழங்குவதே இந்த NAVIC ன் முக்கிய நோக்கமாகும்.
- நாவிக் செய்தியிடல் அமைப்பு மற்றும் செய்தி பெறும் அமைப்பு ஆகியவற்றை இஸ்ரோ வடிவமைத்துள்ளதாக விண்வெளித் துறை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
- இந்த அமைப்பானது தற்போது இந்திய தேசியக் கடல்சார் தகவல் மையத்தினால் (Indian National Centre for Ocean Information System – INCOIS) பயன்படுத்தப்படுகின்றது.
- சுனாமி, சூறாவளி, ஆழிப் பேரலைகள் போன்ற சூழ்நிலைகளில் அவசரகால எச்சரிக்கைத் தகவல்களை ஒளிபரப்ப இந்த அமைப்பானது
பயன்படுத்தப்படுகின்றது.
என்.சி.சி சான்றிதழ் - போனஸ் மதிப்பெண்கள்
- மத்திய ஆயுத காவல் படைகளில் (சிஏபிஎஃப்) துணை ஆய்வாளர்கள் மற்றும் கான்ஸ்டபிள்களுக்கான நேரடி ஆட்சேர்ப்பு தேர்வுகளில் என்சிசி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- C சான்றிதழ்: என்.சி.சி ‘சி’ சான்றிதழ் வைத்திருப்பவர்கள் அதிகபட்ச மதிப்பெண்களில் 5 சதவீதத்தை போனஸ் மதிப்பெண்களாகப் பெறுவார்கள்.
- B சான்றிதழ்: என்.சி.சி ‘பி’ சான்றிதழ் வைத்திருப்பவர்கள் அதிகபட்ச மதிப்பெண்களில் 3 சதவீதத்தை போனஸ் மதிப்பெண்களாகப் பெறுவார்கள்.
- A சான்றிதழ்: என்.சி.சி ‘ஏ’ சான்றிதழ் வைத்திருப்பவர்கள் அதிகபட்ச மதிப்பெண்களில் 2 சதவீதத்தை போனஸ் மதிப்பெண்களாகப்
பெறுவார்கள்.
என்.சி.சி சான்றிதழ் பிரிவுகள்:
டொனால்ட் டிரம்ப் - 100 பில்லியன் டாலர் நிவாரணப் நிதி
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பல பில்லியன் டாலர் அவசரகால கொரோனா வைரஸ் பொருளாதார நிவாரண மசோதாவில்
கையெழுத்திட்டு சட்டமாகியுள்ளார்.
வாட்ஸ்அப் கொரோனா வைரஸ் தகவல் மையம்
- WHO (உலக சுகாதார அமைப்பு), யுனிசெஃப் (ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம்) மற்றும் யுஎன்டிபி (ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம்) ஆகியவற்றுடன் இணைந்து பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் “வாட்ஸ்அப் கொரோனா வைரஸ் தகவல் மையத்தை” உலகளவில் அறிமுகப்படுத்தியது.
- இந்த நோய் குறித்த போலி தகவல்களைத் தவிர்ப்பதற்காக சர்வதேச உண்மை சரிபார்ப்பு நெட்வொர்க்கிற்கு 1 மில்லியன் டாலர்களை
நன்கொடையாக வழங்கியது.
இஸ்ரோ (2020 –21) - 36 செயற்கோள்கள்
- மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளி அமைச்சர், டாக்டர் ஜிதேந்திர சிங், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) உட்பட 36 செயற்கோள்களை 2020 – 21 ஆம் ஆண்டில் ஏவ திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
- இதில் 10 பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்களும் அடங்கும்.
நிர்பயா வழக்கு
- நிர்பயா வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
- இறுதித் தண்டனைத் தீர்ப்பிற்கு எதிரான மனு, தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர் ஒரு சீராய்வு மனுவானது தாக்கல் செய்யப்படுகின்றது.
- சீராய்வு மனுக்கள் இந்திய அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்படுகின்றன.
- மறு ஆய்வு மனு இந்திய உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர் இந்த சீராய்வு மனுவானது தாக்கல் செய்யப்படும்.
- சீராய்வு மனுவின் கருத்தாக்கமானது இந்திய அரசியலமைப்பின் 137வது சரத்தினால் ஆதரிக்கப்படுகின்றது.
- இந்த சரத்தானது 145வது சரத்தின் கீழ் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை உச்சநீதிமன்றமே மறு ஆய்வு செய்ய அனுமதிக்கின்றது.