உலகளாவிய குழந்தைகள் தினம்
- 1954 டிசம்பர் 14 ஆம் தேதி, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை, உலகளாவிய குழந்தைகள் தினத்தைக் கொண்டாட பரிந்துரைத்தது. நவம்பர் 20 தேதி, சட்டமன்றம் குழந்தைகளின் உரிமையை அறிவித்த நாளாகும் .
- நவம்பர் 20, 1959 அன்று அவர்கள் குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான மாநாட்டை நடத்தினர்.இதனால் நவம்பர் 20 ஐ உலகளாவிய குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்
- பொது விநியோக முறையின் கீழ் அதிக மானியத்துடன் கூடிய உணவு தானியங்களைப் பெறுவதற்காக கிராமப்புற மக்களில் 75% வரை மற்றும் நகர்ப்புற மக்கள்தொகையில் 50% வரை உள்ளடக்கிய ஒரு நோக்கம் கொண்ட தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், ஜூலை மாதம் 2013 ஆம் ஆண்டு அரசாங்கம் அமல்படுத்தியது.
- இச்சட்டத்தின் வழிகாட்டும் கொள்கைகளில் ஒன்று வாழ்க்கை சுழற்சி அணுகுமுறை ஆகும் . இதில் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 6 மாதங்கள் முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு துணை ஊட்டச்சத்துக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கிசான்மான்-தன்யோஜனா திட்டம்
- பிரதமர் கிசான் மான் தன் யோஜனாவின் கீழ் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்து உள்ளார்கள் என்று ஸ்ரீ நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
- சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (SMF) சமூக பாதுகாப்பு வலையை வழங்கவும் குறைந்த சேமிப்பு மற்றும் சேமிப்பு இல்லாத முதியவர்களுக்கு உதவவும் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு ஆதரவளிக்கவும் அரசாங்கம் பிரதான் மந்திரி கிசான்மான்-தன்யோஜனா(PM-KMY) என்ற புதிய மத்திய துறை திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
புத்திஸ்ட் சர்க்யூட்
- உலக சுற்றுலா சந்தையில் இந்தியாவின் பங்கை அதிகரிக்க சுற்றுலா அமைச்சகம் புத்தர் சுற்றுளாவுக்கு ஊக்குவித்து வருகிறது இந்தியாவில் புத்த பாரம்பரியத்தை திட்டமிட்டு காட்சிப்படுத்தும் நோக்கத்துடனும் மற்றும் நாட்டின் புத்த இடங்களுக்கு பயணிப்பதன் மூலமும் மற்றும் சுற்றுலாளர்கள் , மீடியா, கருத்துத் தயாரிப்பாளர்கள் ஆகியோர்கள் வெளிநாடுகளிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் பங்கேற்பதன் மூலம் சுற்றுலாவை அதிகரிக்க சுற்றுலா அமைச்சகம் சர்வதேச புத்த மாநாட்டை ஏற்பாடு செய்து வருகிறது.
கரிம வேளாண்மை
- நாட்டில் கரிம வேளாண்மையிக்கு உட்பட்ட 27.77 லட்சம் ஹெக்டேர் நிலம் பங்கேற்பு உத்தரவாத அமைப்பு (பிஜிஎஸ்) மற்றும் 3 வது தரப்பு சான்றிதழ் ஆகியவற்றின் கீழ் உள்ளது.
- இந்திய அரசு நாட்டில் கரிம விவசாயத்தை பரம்பரகத்கிருஷிவிகாஸ் யோஜனா என்ற பிரத்யேக திட்டத்தின் மூலமும் வட கிழக்கு பிராந்தியத்தின் மிஷன் ஆர்கானிக் மதிப்பு தொடர்பு வளர்ச்சி மூலமும் ஊக்குவித்து வருகிறது.
வர்த்தக கண்காட்சி 2019
- மத்திய கிராம அபிவிருத்தி அமைச்சர் நரேந்திர சிங் தோமர் புதுடில்லியில் பிரகதிமெய்தனில் நடந்த சாரஸ் இந்தியா சர்வதேச வர்த்தக கண்காட்சியை திறந்து வைத்தார்.
- திரு டோமர் கூறுகையில், கிராமப்புற பெண்களை சுய உதவிக்குழுக்கள் மூலம் மேம்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும். இதுவரை ஏழு கோடிக்கும் அதிகமான பெண்கள் சுய உதவிக்குழுக்களில் சேர்ந்துள்ளனர், மேலும் இந்த எண்ணிக்கையை 10 கோடியாக எடுத்துச் செல்ல அமைச்சகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்று கூறினார்.
இந்திரா காந்தி தேசிய கலை மையம்
- புதுடில்லியில் இந்திரா காந்தி தேசிய கலை மையத்தில் நடைபெற்ற 32 வது தொடக்க தினத்தில் மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஸ்ரீ பிரஹ்லத் சிங் படேல் பங்கேற்றார்.
- கலை மற்றும் கலாச்சாரத்தின் வடிவங்களை பாதுகாக்கும் பொறுப்பை IGNCA கொண்டுள்ளது என்று ஸ்ரீ படேல் கூறினார்.
தெற்காசியா உச்சி மாநாடு
- பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை இல்லத்திற்குள் உறுதிசெய்ய வேண்டியதன் அவசியத்தையும், வன்முறை மற்றும் துன்புறுதல்களுக்கு எதிராக அவர்களைப் பாதுகாக்க பாதுகாப்பான சுழலை உருவாக்குவதையும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வலியுறுத்தியுள்ளார்.
- இதை புதுடில்லியில் நடைபெற்ற தெற்காசியா பாதுகாப்பு உச்சி மாநாட்டின் 2 வது பதிப்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் கூறினார்.
சர்வதேச கல்வி - மாநாடு (ஐபிஇசி)
- ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் மோகன் பகவத் நாக்பூரில் சர்வதேச முதல்வரின் கல்வி மாநாட்டை திறந்து வைத்தார். கல்வி முறையின் சிறப்பு முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திரு. பகவத் கூறுகையில், சிறப்பிற்காக பாடுபடுவது வாழ்க்கையில் வெற்றிபெறவதற்கு முக்கியமாகும்.
- மாணவர்களை அச்சமற்ற, நம்பிக்கையுள்ளவர்களாக உருவாக்குவது கல்வி கல்வி நிறுவனங்களின் பொறுப்பு என்று அவர் வலியுறுத்தினார்.
ஆசிய வங்கி & விஜயநகரா சேனல் பாசன அமைப்பு
- விஜயநகர சேனல் பாசன முறைகளை நவீனமயமாக்குவதற்கும், கிருஷ்ணா நதிப் படுகையில் நதி படுகை மேலாண்மைத் திட்டங்களைத் தயாரிப்பதற்கும் 91 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை நீட்டிக்கும் ஒப்பந்தத்தில் மையமும் ஆசிய மேம்பாட்டு வங்கியும் (ஏடிபி) கையெழுத்திட்டுள்ளன.
- இது பாசன நீர் பயன்பாட்டு செயல்திறனை மேம்படுத்தவும், கர்நாடகாவில் நிலையான நீர் பாதுகாப்பை மேம்படுத்தவும் உதவும்.
- கர்நாடக ஒருங்கிணைந்த மற்றும் நிலையான நீர்வள மேலாண்மை முதலீட்டு திட்டத்தின் இரண்டாவது திட்டக் கடனை நிதி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சமீர் குமார் கரே மற்றும் ஏடிபியின் இந்தியா ரெசிடென்ட் மிஷனின் நாட்டின் இயக்குநர் கெனிச்சி யோகோயாமா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
2022 உலகக் கோப்பை
- மஸ்கட்டில் நடைபெற்ற 2022 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் இந்திய கால்பந்து அணி ஓமனிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
- சுல்தான் கபூஸ் விளையாட்டு வளாக மைதானத்தில் நடந்த 33 வது நிமிடத்தில் அனைத்து கோல்களை மொஹ்சின் அல் கசானி அடித்தார், இதனால் ஓமனிடம் இரண்டாவது முறையாக இந்தியா தோல்வியுற்றது .