ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்
- உலகளாவிய கடன் மதிப்பீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் இந்தியாவுக்கான கணிப்பை முந்தைய 5.7 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாகக் குறைத்தது.
- மூடிஸ், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆகியவையும் இந்தியாவுக்கான வளர்ச்சி கணிப்புகளைக் குறைத்துள்ளன. மூடிஸ் 2020 நிதியாண்டிற்கான இந்தியாவுக்கான வளர்ச்சி கணிப்புகளை 5.3% ஆக குறைத்துள்ளது.
- பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு 2020 நிதியாண்டிற்கான இந்தியாவுக்கான வளர்ச்சி கணிப்புகளை 5.1 சதவீதமாகக் குறைத்துள்ளது.
இந்தியாவில் 52 சோதனை மையங்கள் - கொரோனா
- இந்த வைரஸ் கண்டறியப்பட்டவர்களுக்கு முறையான நோயறிதல் மற்றும் சிகிச்சையை வழங்குவதற்காக நாடு முழுவதும் 52 இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- இதில் 1 லட்சம் சோதனை கருவிகள் உள்ளன, கூடுதல் சோதனை கருவிகள் ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
200,000 அமெரிக்க டாலர் நிவாரண நிதி
-
சார்க் நாடுகளுக்காக உருவாக்கப்பட்ட கோவிட் -19 அவசர நிவாரண நிதிக்காக மாலத்தீவு அரசாங்கம் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்களைச்
ஒதுக்கியுள்ளது. ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ் தலைமையிலான கோவிட் -19 தேசிய பணிக்குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளது.
இ-நைட் பீட் செக்கிங் சிஸ்டம்
- இமாச்சலப் பிரதேச மாநில அரசு சிம்லாவில் இமாச்சல காவல்துறையினருக்கான காவல் நிலைய பார்வையாளர் கணக்கெடுப்பு முறை மற்றும் இ-நைட் பீட் செக்கிங் முறையை அறிமுகப்படுத்தியது.
- இந்த அமைப்புகள் காவல்துறையின் பணியை மேம்படுத்துவதற்கு உதவும்.
சர்வதேச காடுகள் தினம்
- மார்ச் 21-ம் தேதியான ஐநா சபையினால் சர்வதேச காடுகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
- காடுகளின் நன்மை, பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த தினமாகக் கொண்டாடுகிறோம்.
- 2012-ம் ஆண்டு முதல் ஐநா-வின் அறிவிப்பின்படி காடுகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
- 2020-ம் ஆண்டு காடுகள் தினத்துக்கான மையக் கருத்து 'காடுகளும் பல்லுயிர்பெருக்கமும்'.
நிலவுக்கு மீண்டும் மனிதர்கள்
- நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- இது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நியூ ஆர்லியன்ஸ் நகரிலுள்ள அந்த அமைப்பின் தொழிலகத்தில் ராக்கெட் கட்டுமானப்
பணிகளும் ஸ்டென்னிஸ் ஸ்பேஸ் மையத்தில் நடைபெறும் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வரும் 2024ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு
மனிதர்களை அனுப்பும் நாசாவின் திட்டம் தாமதமாவதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
உலக மகிழ்ச்சி அறிக்கை
- ஐக்கிய நாடுகளால் வெளியிடப்படும் உலக மகிழ்ச்சி அறிக்கை (World Happiness Report) – 2020 இல் இந்தியா 144-வது இடத்தில் உள்ளது.
- மொத்தம் 156 நாடுகள் இதில் உள்ளன. இதில் மூன்றாவது முறையாக முதலிடத்தில் பின்லாந்து உள்ளது. அதனை தொடர்ந்து டென்மார்க்கும, சுவிட்சர்லாந்து உள்ளது. இதனை சர்வதேச மகிழ்ச்சி தினமான மார்ச் 20 அன்று ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி தீர்வுகள் அமைப்பு (United Nations Sustainable development Solutions Network) வெளியிட்டது.
‘லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில்’
-
இந்திய மலையேறுபவர் சத்யருப் சித்தாந்தா அவரது அசாதாரண சாதனைகளுக்காக ‘லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ இடம் பெற்றுள்ளார். உலகில்
உள்ள 7 கண்டங்கள் ஒவ்வொன்றிலும் மிக உயர்ந்த எரிமலைகளில் ஏறிய முதல் இந்தியர் இவர் ஆவர்.
இன பாகுபாட்டை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்
-
இன பாகுபாட்டை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் ஆண்டுதோறும் மார்ச் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. 1966 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி
நிறைவேற்றப்பட்ட ஐ.நா பொதுச் சபைத் தீர்மானம், மார்ச் 21 ஆம் தேதி இன பாகுபாட்டை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாக ஆண்டுதோறும்
நினைவுகூரப்படும் என்று அறிவித்தது.
ஒலிம்பிக் சுடர்
-
ஒலிம்பிக் சுடர் கிரேக்கத்திலிருந்து ஜப்பானுக்கு தனது பயணத்தை நிறைவு செய்தது. வடகிழக்கு ஜப்பானின் மியாகி ப்ரிபெக்சரில் உள்ள ஜப்பானிய
விமான தற்காப்புப் படையின் மாட்சுஷிமா தளத்தில் சுடரைச் சுமந்து செல்லும் ஒரு சிறப்பு போக்குவரத்து விமானம் தரையிறங்கியது.