கிருஷி கர்மன் விருது 2019
- எண்ணெய் வித்துகள் உற்பத்தி யில் சாதனை படைத்ததற்காக 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் ‘கிரிஷி கர்மான்’ விருது தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. இவ்விருதை 5-வது முறையாக தமிழகம் பெறுகிறது என்பது குறிப் பிடத்தக்கது.
- கடந்த 2011-12-ம் ஆண்டில், அப்போதைய முதல்வர் ஜெய லலிதாவால் அறிமுகப்படுத்தப் பட்ட 2-ம் பசுமை புரட்சி மற்றும் உணவு தானிய இயக்கத்தின் காரணமாக, தமிழகத்தில் உணவு தானிய உற்பத்தி தற்போது 2 மடங்கு சாதனையை எட்டியுள்ளது.
- தமிழகம் கடந்த 2011-12, 13-14, 2014-15 மற்றும் 2015-16 ஆகிய ஆண்டுகளில் ஒரு கோடி மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான உணவுதானியங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.
தேசிய விவாசிகள் தினம்
- இந்தியாவின் முதுகெலும்பு விவசாயமாகும்.
- ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்த நாளான டிசம்பர் 23-ம் தேதி 'தேசிய விவசாயிகள் தினமாக' கொண்டாடப்பட்டு வருகிறது.
- இவர் உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்தபோது, நிலக் கையிருப்புச் சட்டம் கொண்டு வருவதற்கு முக்கிய பங்காற்றினார்.
- இச்சட்டம் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான நிலக் கையிருப்பின் உச்ச அளவை குறைக்கும் முயற்சியாக அமைந்தது. இந்தியாவில் நெடுநாள் பிரச்சனையாக இருந்துவந்த உழுபவர்களுகே நிலம் என்பதை பல கூட்டங்களில் முன்வைத்தவர்.
- 'ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்டத்தை கொண்டு வந்தார்.
- விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக 'வேளாண் விளைபொருள் சந்தை மசோதா'வையும் அறிமுகப்படுத்தினார்.
ஈர்ப்பு அலைகள் குறித்த ஆய்வு
- விண்வெளியில் உள்ள ஈர்ப்பு அலைகள் குறித்த ஆய்வுக்காக முதல் செயற்கைக் கோளை சீனா ஏவியுள்ளது.
- பிரேசில் மற்றும் சீனாவைச் சேர்ந்த 8 செயற்கைக் கோள்களுடன் டியான்கின்-1 ராக்கெட், தையுவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது.
- பூமியிலிருந்து 600 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட்ட ஈர்ப்பு அலைகள் ஆய்வு செயற்கைக் கோள் தனது பணியைச் செய்யும் என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
- விண்ணில் காணப்படும் வெப்பநிலை மூலம் ஈர்ப்பு அலைகள் குறித்தும், அதன் மூலம் ஏற்படும் தாக்கம் குறித்தும் ஆராயப்படும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.