விசித்திர இசை தினம்
- ஆகஸ்ட் 24 அன்று சர்வதேச விசித்திர இசை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
- இந்த இசை தினத்தை உருவக்கியவர் பேட்ரிக் கிராண்ட் (நியூயார்க்).
FSSAI - தேசிய உணவு ஆய்வகம்
- இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) அதிநவீன தேசிய உணவு ஆய்வகம் என்.சி.ஆர் காசியாபாத்தில் திறக்கப்பட்டது.
மிஷன் ரீச் அவுட்
- "மிஷன் ரீச் அவுட்" என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்தியா ராணுவம் சூரிய விளக்குகளை லாப்ரி டாப் & ரியசி கிராமங்களுக்கு வழங்கியது. இதுவரை மொத்தம் 180 விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
ஏர் இந்தியா விமான விபத்து நினைவுச்சின்னம்
- பிரான்சின் மோன்ட் பிளாங்க் மலையின் அடிவாரத்தில் இரண்டு ஏர் இந்தியாவிமானம் விபத்துக்குள்ளானதின் நினைவாக ஒரு நினைவுச்சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
- இதில் இந்தியாவின் அணுசக்தியின் தந்தை என்று ஹோமி ஜே.பாபா உட்பட பல இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.
- இந்த நினைவுச்சின்னம் நிட் டி ஏகிள் என்ற இடத்தில் அர்ப்பணிக்கப்பட்டது.
இந்தியா - பிரான்ஸ் : செயற்கைக்கோள்
- இந்தியாவும் பிரான்சும் சுமார் 10 பூமியின் தாழ் வட்டப்பாதை செயற்கைக்கோள்களின் தனித்துவமான தொகுப்பை உருவாக்கி ஏவவுள்ளன.
- அவைகள் தொடர்ந்து கடல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை வழங்கும்.
- இந்த குறைந்த தாழ்வான சுற்றுப்பாதை செயற்கைக்கோள்கள் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஆக்கிரமிப்பு, பயங்கரவாதம், திருட்டு, கடத்தல், எண்ணெய் கசிவுகளின் ஆதாரம் ஆகியவற்றை கண்காணிக்கும்.
ககன்யான்
- 2022 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் முதல் மனித விண்வெளித் திட்டமான ககன்யானில் ஒரு பகுதியாக விண்வெளி வீரர்களுக்கு விண்வெளி உடைகள், குழு இருக்கைகள் மற்றும் விண்வெளி வீரர்களுக்கான ஜன்னல்கள் வழங்குவது குறித்து இந்தியாவும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்று ரஷ்ய அரசுக்கு சொந்தமான ரோஸ்கோஸ்மோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) மற்றும் ரஷ்ய விண்வெளி ரோஸ்கோஸ்மோஸின் துணை நிறுவனமான கிளாவ்கோஸ்மோஸ் இடையே ஜூன் 27 அன்று கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் படி நான்கு இந்தியர்கள் யூரி ககரின் காஸ்மோனாட் மையத்தில் பயிற்சி பெறவுள்ளனர்.
MAKS 2019
- சர்வதேச விமான மற்றும் விண்வெளி நிகழ்ச்சியான MAKS 2019 ரஷ்யாவில் நடைபெறவுள்ளது.
- இதில் உலகம் முழுவதும் இருந்து பாதுகாப்பு மற்றும் விண்வெளி மேஜர்கள் பங்கேற்கிறார்கள்.
- இந்நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் மற்றும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் பங்கேற்கவுள்ளது.
வில்வித்தை சாம்பியன்ஷிப்
- ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடந்த வில்வித்தை உலக இளைஞர் சாம்பியன்ஷிப்பில், ஜூனியர் காம்பவுண்ட் ஆண்கள் அணி போட்டியில் சுக்பீர் சிங், சங்கம்பிரீத் சிங் பிஸ்லா மற்றும் துஷார் பட்தரே ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
போஷான் அபியான் விருதுகள்
- மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி 2018-19 ஆம் ஆண்டிற்கான போஷன் அபியான் விருதுகளை புதுடில்லியில் நடந்த விழாவில் வழங்கினார்.
- ஆந்திரா, சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மிசோரம், ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் உத்தரகண்ட் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்கள் – சண்டிகர், தமன் & டியு, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகியவற்றுக்கு நடத்தை மாற்றம் மற்றும் சமூக அணிதிரட்டளுக்காக 23 சிறந்த விருதுகள் வழங்கப்பட்டன.
பாலிசிங் விருதுகள்
- டாக்டர் ஜிதேந்திர சிங் உள்நாட்டு பாதுகாப்பு 2019 மாநாட்டில் ஸ்மார்ட் போலிசிங் விருதுகளை வழங்கினார்.
- கிளர்ச்சி எதிர்ப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, குற்ற விசாரணை மற்றும் வழக்கு, சைபர் குற்ற மேலாண்மை, அவசரகால பதில், மனித கடத்தல், சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை, ஸ்மார்ட் காவல் நிலையம் போன்ற துறைகளில் பணியாற்றிய அதிகாரிகளுக்கு 35 ஸ்மார்ட் பாலிசிங் விருதுகள் வழங்கப்பட்டன.