2020-21-ஆம் நிதியாண்டில் இந்தியா
- 2020-21-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 5.2 சதவீதமாக இருக்கும் என சா்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான எஸ்&பி தெரிவித்துள்ளது.
- வரும் 2020-21-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என முன்பு மதிப்பிடப்பட்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில், கரோனா வைரஸ் உலக பொருளாதாரத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இதைத் தொடா்ந்து வரும் 2021-22 ஆம் நிதியாண்டிலும் பொருளாதார வளா்ச்சி மதிப்பீடு 7 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
- அதேசமயம், மாா்ச் 31-ஆம் தேதியுடன்
முடிவடையவுள்ள 2019-20-ஆம் நிதியாண்டில்
பொருளாதார வளா்ச்சி 5 சதவீத அளவுக்கே இருக்கும்
என கணிக்கப்பட்டுள்ளது.
400 ஆண்டுகள் பழமையான புலிகுத்தி நடுகல் இடிப்பு
- சேலம் அம்மாப்பேட்டை சாலை சித்தேஸ்வரா காளியம்மன் கோயில் அருகே சாலையோரம் 400 ஆண்டுகள் பழமையான புலிகுத்தி நடுகல் அமைந்துள்ளது.
- இந்த நடுக்கல்லில் சிறிய அளவில் கட்டடம் கட்டி, அந்தக் கட்டடத்தின் மேல்பகுதியில் அம்மன் சிலை அமைத்து பல ஆண்டுகளாக பொதுமக்கள் அதனை பராமரித்து வணங்கி வருகின்றனா்.
வெள்ளாடு ஆராய்ச்சி மையம்
- புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தில் வெள்ளாடு ஆராய்ச்சி மையம் ஒன்று அமைக்கப்படும் என்று தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சரான கே. ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
- மேலும் இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
எந்திர மனிதர்கள் - COVID-19
- பொதுமக்களிடையே COVID-19 குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக எந்திர மனிதர்களைப் பயன்படுத்துவதற்கான ஒரு முயற்சியை கேரள மாநில அரசு தொடங்கியுள்ளது.
- துளிர் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான மாநில அரசின் முன்னெடுப்பான கேரள துளிர்-நிறுவன திட்டத்தின்கீழ் கேரள மாநிலத்தில் 'அசிமோ' என்ற துளிர் நிறுவனம்மூலம் 2 ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
- இதில் ஒரு எந்திரமனிதர், முகமூடியை
அணிந்துகொண்டு கை தூய்மைப்படுத்தி மற்றும்
முகக்கவசங்களை பொதுமக்களுக்கு
விநியோகிக்கிறது. மற்றொரு எந்திரமனிதர்
கேள்விகளுக்கு பதிலளிக்கிறது. இவையிரண்டும்
முன்னோட்ட அடிப்படையில் கொச்சியில்
நிறுத்தப்பட்டுள்ளன.
குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1000
- கொரோனா: தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூபாய் 1000 வழங்கப்படும் என முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
- மார்ச் 24 சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக ரூ.3,250 கோடி நிவாரண நிதி அறிவித்தார்.
- நடைபாதை வியாபாரிகளுக்கு பொது நிவாரண நிதி ரூ.1000 மற்றும் கூடுதலாக ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
- ரேசன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க டோக்கன் முறையில் பொருட்கள் வழங்கப்படும்.
- ஆதரவற்றோருக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உணவு வழங்கப்படும்.
- அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மார்ச் மாத ரேசன் பொருட்களை ஏப்ரல் மாதம் பெற்றுக்கொள்ளலாம். விலையில்லா அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும்.
- ஆட்டோ தொழிலாளர்களுக்கு 17 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, சமையல் எண்ணெய் வழங்கப்படும்.
- ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்.
- நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும்.
- 100 நாட்கள் வேலை திட்டத்தில் 2 நாட்கள்
கூடுதல் சம்பளம் வழங்கப்படும்.
'கொவைட்-19' மருத்துவமனை
- ரிலையன்ஸ் நிறுவனத்தின் சா் எச்.என்.ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனை, பிருஹண் மும்பை மாநகராட்சி சாா்பில் இரண்டே வாரத்தில் மும்பை செவன்ஹில்ஸ் பகுதியில் 100 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளுடன் கொண்ட கரோனா வைரஸ் தொற்று (கொவைட்-19) மருத்துவ பரிசோதனை வசதியுடன் கூடிய மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- இந்தியாவில் முதன்முறையாக ரிலையன்ஸ் அறக்கட்டளை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்திற்கு தேவையான நிதி அனைத்தும் அந்த அறக்கட்டளையால் அளிக்கப்படும்.
- அனைத்து படுக்கைகளுக்கும் தேவையான உள்கட்டமைப்பு, மருத்துவ உபகரணங்கள், வென்டிலேட்டா்கள், பேஸ்மேக்கா்கள், டயாலிஸிஸ் இயந்திரங்கள் மற்றும் நோயாளி கண்காணிப்பு சாதனங்கள் போன்ற அனைத்து வகையான கட்டமைப்பு வசதிகளும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- இந்த மருத்துவமனைகளில் வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் கரோனா வைரஸ் பாதிப்புள்ள நபா்களை தனிமைப்படுத்தி சிறந்த சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
- இதேபோல, மகாராஷ்டிரத்தின் லோதிவலி பகுதியில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சாா்பில் மேலும் ஒரு சிறப்பு மருத்துவமனையை உருவாக்கி மாவட்ட அதிகாரிகள் வசம் ஒப்படைத்துள்ளது. இந்த மருத்துவமனையில் கொவைட்-19 நோயாளிகளை தனிமைப்படுத்தி, சிகிச்சையளிக்கும் கூடுதல் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் - ஹைடிராக்சிகுளோரோகுயின்
- கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலகளவில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவும் இதன் கோரப் பிடியில் சிக்கி தவித்து வருகிறது.
- இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நேற்று முன்தினம் நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
- நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
- இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலினால் உருவாக்கப்பட்டுள்ள தேசிய சிறப்பு படை, மலேரியா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ஹைடிராக்சிகுளோரோகுயின் என்ற மருந்தை கொரோனா பாதிப்பு சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளது.
- இதற்கு முன்னர் அமெரிக்கா கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு இதே மருந்தை பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், மருத்துவர் அளிக்கும் பரிந்துரையின் பேரிலேயே சிகிச்சை பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேன்டிடேட்ஸ் செஸ்
- கேன்டிடேட்ஸ் செஸ் தொடரின் ஐந்தாவது சுற்றில் ரஷ்யாவின் நோபோம்னியாட்சி வெற்றி பெற்றார்.
- உலகின் முன்னணி வீரர்கள் 8 பேர் இதில் பங்கேற்கின்றனர். ‘ரவுண்டு ராபின்’ முறையில் ஒவ்வொருவரும் மற்ற வீரர்களுடன் தலா இரண்டு முறை மோதுவர். இதில் வெற்றி பெறும் வீரர், இந்த ஆண்டு நடக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான போட்டியில் மோதுவர்.
- ஐந்தாவது சுற்றில் ரஷ்யாவின் நேபோம்னியாட்சி, சீனாவின் ஹாவோ வாங்கை சந்தித்தார்.
- இதில் வெள்ளை நிற காய்களுடன்
களமிறங்கிய நேபோம்னியாட்சி, போட்டியின் 43வது
நகர்த்தலில் வெற்றி பெற்றார்.