ஸ்காட்டிஸ் ஓபனில் பட்டம் வென்றார் லக்சயா சென்
- ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஸ்காட்டிஸ் ஓபன் பாட் மிண்டன் தொடர் நடைபெற்றது.
- இதன் இறுதி சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், பிரேசில் வீரர் யாகோர் கோயல்ஹோவை எதிர்த்து விளையாடினார்.
- 56 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 18-21, 21-18, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
சுறா மீனின் துடுப்புகள் கடத்தல்
- சென்னையிலிருந்து சிங்கப்பூா் செல்லவிருந்த ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள மருந்துக்கு பயன்படும் சுறா மீனின் வால்கள் மற்றும் செதில்களை கடத்த முயன்ற திருச்சியை பயணியை விமான நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் பிடித்து கைது செய்தனர்.
- இவைகளை கொண்டு சூப் தயாரிப்பார்கள்.
- இவைகள் உயர் ரக ஸ்டாா் ஓட்டல்களில் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படும்.
- இந்த வகையான சூப் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பதால் சீனாவில் இந்த வகை சூப் பிரபலமானது.
- இந்த மீன்கள் நமது நாட்டில் அழிந்துவரும் ஒரு இனம் என்பதால், மத்திய அரசு இதை வெளிநாடுகளுக்கு கடத்த தடைவிதித்துள்ளது.
கின்னஸ் சாதனை - யோகாசனம்
- யோகாசனத்தில் கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார், கோவை பள்ளி மாணவி வைஷ்ணவி.
- சர்க்கர சுழல் நிலையில் 20 மீட்டருக்கு மேல் பயணித்தல்,
- செலபாசன நிலையில் 26 நிமிடங்கள் இருத்தல்,
- பிம்பாசன நிலையில் முதுகு தண்டு மூலமாக விரைவாக 3 பலூன்களை வெடிக்கச் செய்தல்,
- சர்க்கர கோனாசன நிலையில்1.28 நிமிடம் நிற்றல் ஆகிய 4 சாதனை முயற்சிகளை மேற்கொண்டு, முந்தையை சாதனைகளை முறியடித்து, புதிய சாதனை படைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம்
- ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டம் கடந்த 1993-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி விழுப்புரம், கடலூா் மாவட்டங்களாக பிரிக்கப் பட்டன.
- விழுப்புரம் மாவட்டம் 1,104 கிராமங்கள், 13 வட்டங்கள், 4 கோட்டங்களுடன் 7,217 சதுர கி.மீ பரப்பில் 34.58 லட்சம் மக்கள் தொகையுடன் (2011-கணக் கெடுப்பின்படி) மிகப் பெரிய மாவட்டமாக இருந்தது.
- தற்பொழுது விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
- (நவ. 26) கள்ளக்குறிச்சி மாவட்டத்தை துவக்கி வைத்து நலத்திட்ட உதவி களையும் முதல்வர் பழனிசாமி வழங்கவுள்ளார்.
- புதிய மாவட்ட ஆட்சியராக கிரண்குரலாவும், எஸ்பியாக ஜெயசந்திரனும் ஏற்கெனவே நியமிக்கப்பட் டுள்ளனர்.
ராமசாமி படையாட்சியார் நினைவு மண்டபம்
- கடலூரில் ராமசாமி படையாட்சியார் நினைவு மண்டபத்தை முதல்வர் பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.
- கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் சுதந்திர போராட்ட தியாகியும், சமூக நீதிக்காக பாடு பட்டவருமான முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சி யாருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.2 கோடியே 15 லட்சம் செலவில் 1.5 ஏக்கரில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
சங்காய் திருவிழா
- வட கிழக்கு மாநிலமான மணிப்பூரின் தனிச்சிறப்பான திருவிழா சங்காய் திருவிழா.
- அந்த மாநிலத்தில் மட்டுமே காணப்படும் சங்காய் (நாலு கொம்பு) மான் இனத்தின் பெயரிலேயே இந்தத் திருவிழா 2010-ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
- மாநிலச் சுற்றுலா வளர்ச்சியை நோக்கமாகக்கொண்டு, மாநிலத்தின் பண்பாடு பாரம்பரியத்தின் பெருமைகளையும் கைவினைப் பொருட்களின் சிறப்புகளையும் வெளிப்படுத்தும் வகையில் இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
- இந்த ஆண்டு நவம்பர் 21 முதல் நவம்பர் 30 வரை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.