Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 26th September 19 Content

மங்கள்யான் - விண்கலம்

  • செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக மங்கள்யான் என்ற விண்கலம் (ஆர்பிட்டர் மிஷன்) பி.எஸ்.எல்.வி- சி25 ராக்கெட் மூலம் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
  • சுமார் 10 மாத காலத்துக்கு பின்னர் அது 2014-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 24-ந் தேதி செவ்வாயின் சுற்றுப்பாதையை சென்றடைந்தது. தற்போது செவ்வாய் கிரகத்தை சுற்றி வருகிறது.
  • இந்த விண்கலம், 6 மாத கால ஆயுளுடன் வடிவமைக்கப்பட்டது. ஆனால் அது 5 ஆண்டு காலத்தை வெற்றிகரமாக கடந்து விட்டது.

இந்திய பத்திரிகை சங்க தலைவர்

  • இந்திய பத்திரிகை சங்கத்தின் 2019-20-ம் ஆண்டின் தலைவராக சைலேஷ் குப்தா (மிட்-டே) தேர்ந்து எடுக்கப்பட்டார்.எல்.ஆதிமூலம் (தினமலர், கோவை) துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
  • செயற்குழுவுக்கு 41 உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர். மேரி பால், பொதுச்செயலாளராக நீடிப்பார்.

"தேசிய ஒற்றுமை விருது"

  • தேசிய ஒற்றுமைக்காக பாடுபடுவோரை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தேசிய ஒற்றுமை விருது வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி அறிவித்தார்.
  • நாட்டின் முதல் உள்துறை மந்திரியான சர்தார் வல்லபாய் படேல் சிறுசிறு பகுதிகளாக இருந்த சுமார் 500 சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்தார்.
  • அவரது நினைவாக இந்த விருது அறிவிக்கப்படும் என மத்திய அரசு கூறியது. இந்நிலையில் "சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை விருது" என்ற புதிய விருதை மத்திய அரசு அறிமுகம் செய்தது.
  • நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு இணையாக இந்த விருது கருதப்படும் எனவும், நாட்டின் ஒற்றுமைக்காகவும், ஒருங்கிணைப்புக்காகவும் சிறந்த பங்களிப்பை அளிக்கும் நபர்களுக்கு இந்த விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

"பில்கேட்ஸ் விருது"

  • இந்தியாவை சேர்ந்த 17 வயது பெண், குழந்தை திருமண முறைக்கு எதிராகவும், குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கி போராடி வருகிறார். அவர், பாயல் ஜாங்கிட் ஆவார். பாயல் ஜாங்கிட்டுக்கு இதற்காக ‘சேஞ்ச்மேக்கர்’ விருது வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், மிலிந்தா அறக்கட்டளை அறிவித்தது.
  • நியூயார்க் நகரில் பில்கேட்ஸ் முன்னிலையில் நடந்த விழாவில் அவருக்கு ‘சேஞ்ச்மேக்கர்’ விருதை ஐ.நா. சபையின் தலைமை துணைச்செயலாளர் ஆமினா முகமது வழங்கி கவுரவித்தார். பாயல் ஜாங்கிட், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள ஹின்ஸ்லா என்ற கிராமத்தை சேர்ந்தவர்.

அணு ஒழிப்பு நாள்

  • 2013 ஆம் ஆண்டில், ஐ.நா பொதுச் சபை (யு.என்.ஜி.ஏ) செப்டம்பர் 26 ஐ அணு ஆயுதங்களை முற்றிலுமாக அகற்றுவதற்கான சர்வதேச தினமாக (அணு ஒழிப்பு நாள்) அறிவித்தது.

உலக கடல்சார் தினம்

  • உலக கடல்சார் தினம் செப்டம்பர் 26 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் கடல் சமூகத்தில் முக்கியமான பங்குதாரர்களை ஒன்றிணைக்கும் ஒரு தளத்தை வழங்குகிறது.

ஹரேகா தேஷ் ஜீதேகா

  • மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ,” காசநோய் ஹரேகா தேஷ் ஜீதேகா பிரச்சாரத்தை” தொடங்கினார்.
  • “காசநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, முதல் 100 நாட்களில் அனைத்து மாவட்டங்களிலும் 95 சதவீதத்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கான மன்றங்களை அரசாங்கம் நிறுவியுள்ளது , இது குறுகிய காலத்தில் காசநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வலுவான உறுதிப்பாட்டை தெளிவாகக் காட்டுகிறது.

112 ஒற்றை அவசர ஹெல்ப்லைன்

  • போலிஸ், தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் என மூன்று அவசர சேவைகளுக்காகவும் -112- என்ற அவசர எண் டெல்லியில் அறிமுகப்படுத்தபட்டது. இப்போது, டெல்லி குடிமக்கள் இந்த மூன்று அவசர சேவைகளின் வசதியையும் – 112 என்ற எண்ணை டயல் செய்வதன் மூலம் பெறலாம்.

டி20 கிரிக்கெட் போட்டி (இந்தியா - தென்ஆப்பிரிக்கா )

  • இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று சூரத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஷஃபாலி வர்மா இடம் பிடித்திருந்தார்.
  • ஷஃபாலி வர்மாவுக்கு 15 வயதே ஆகிறது. இதன்மூலம் இளம் வயதில் டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
  • ஒட்டுமொத்தமாக 2-வது இளம் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
  • தொடக்க வீராங்கனையாக களம் இறங்கிய ஷஃபாலி வர்மான நான்கு பந்துகளை எதிர்கொண்டு ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.

NITSER

  • புதுடில்லியில் நடைபெற்ற தேசிய தொழில்நுட்ப, அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (நிட்ஸர்) 12 வது கூட்டத்திற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ரீ ரமேஷ் போக்ரியல் ‘நிஷாங்க்’ தலைமை தாங்கினார் .
  • இந்த கூட்டத்தில் தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (என்ஐடி) மற்றும் இந்திய பொறியியல் நிறுவனத்தின் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியா - ஜப்பான்

  • முத்தரப்பு கடல்சார் உடற்பயிற்சி மலாபரின் 23 வது பதிப்பு, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் கடற்படைகளுக்கு இடையே செப்டம்பர் 26 முதல் 04 அக்டோபர் 2019 வரை ஜப்பான் கடற்கரையில் திட்டமிடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம்

  • பல்கேரியாவின் கிறிஸ்டாலினா ஜார்ஜீவா சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் உள்ள நாட்டிலிருந்து சர்வதேச நாணய நிதியத்தை வழிநடத்த உள்ள முதல் நபர் இவர் ஆவார்.
  • அக்டோபர் முதல் பொருளாதார நிபுணராக ஐந்தாண்டு காலத்திற்கு கிறிஸ்டின் லகார்ட்டைக்கு அடுத்து இவர் பொறுப்பேற்கவுள்ளார்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்

  • கஜகஸ்தானில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா வெள்ளிப் பதக்கம் வென்றார். இதேபோல், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா மற்றும் ரவிகுமார் தஹியா ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர்.
  • இந்நிலையில், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றவருக்கு ரூ.7 லட்சமும், வெண்கலம் வென்றவர்களுக்கு தலா ரூ.4 லட்சமும் வழங்கப்படும் என விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்.
  • இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் தீபக் புனியாவுக்கு 7 லட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா மற்றும் ரவிகுமார் தஹியா ஆகியோருக்கு தலா 4 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டும் என விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.

ஐ.ஏ.ஏ.எஃப்

  • இந்திய தடகள பெடெரேஷனின் தலைவர் அடில் சுமரிவல்லா சர்வதேச தடகள பெடெரேஷன் கவுன்சில் (ஐ.ஏ.ஏ.எஃப்) உறுப்பினராக இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேசிய நீர் மிஷன் விருதுகள் 2019

  • மத்திய ஜல் சக்தி அமைச்சகம், நீர் பாதுகாப்பு, திறமையான நீர் பயன்பாடு மற்றும் நிலையான நீர் மேலாண்மை நடைமுறைகளில் சிறந்து விளங்குவதற்காக, ‘தேசிய நீர் மிஷன் என்ற விருதுகள் வழங்குவதை துவக்கியுள்ளது.

தேசிய ஒற்றுமை தினம்

  • இந்த விருது தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை ஊக்குவிப்பதற்கும் வலுவான மற்றும் ஒன்றுபட்ட இந்தியாவின் மதிப்பை வலுப்படுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க மற்றும் ஊக்கமளிக்கும் பங்களிப்புகளை அங்கீகரிக்க முயல்கிறது.
  • இந்த விருது தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும், அதாவது அக்டோபர் 31 அன்று சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் அன்று அறிவிக்கப்படும்.

‘உலகளாவிய கோல்கீப்பர்’

  • செப்டம்பர் 24, 2019 அன்று நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (யுஎன்ஜிஏ) அமர்வில், பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, ஸ்வச் பாரத் அபியனுக்கான பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் ‘குளோபல் கோல்கீப்பர்’ விருதைப் பெற்றார்.

ஐபிஎஸ்எஃப் உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்

  • இந்திய ஜோடிகளான பங்கஜ் அத்வானி மற்றும் ஆதித்யா மேத்தா ஆகியோர் மியான்மரின் மாண்டலேயில் நடந்த ஐ.பி.எஸ்.எஃப் உலக ஸ்னூக்கர் பட்டத்தை வென்றுள்ளனர்.

‘மாற்று நோபல் விருது'

  • அமெரிக்காவின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கடந்த திங்கள்கிழமை (செப்டம்பர் 23) ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கிரேட்டா தன்பெர்க் என்ற 16 வயது சிறுமி (பருவநிலை மாற்ற ஆர்வலர்) பங்கேற்றார்.
  • இந்நிலையில், கிரேட்டா தன்பெர்க் 'வாழ்வாதார உரிமை விருது'-க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மனித உரிமைகள் விருதுக்கான தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
  • உலக அளவில் 'வாழ்வாதார உரிமை விருது' நோபல் பரிசுக்கு நிகராக கருதப்படுவதால் இது ‘மாற்று நோபல் விருது' என்றும் அழைக்கப்படுகிறது.
  • கிரேட்டா தன்பெர்க் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘வெள்ளிக்கிழமைகள் எதிர்காலத்திற்கானது’ என்ற இயக்கத்தின் பெயரில் 'பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த பள்ளிகள் வேலைநிறுத்தம் செய்கின்றன’ என்ற பதாகைகளுடன் ஸ்விடன் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டார்.
  • இந்த போராட்டத்தின் வளர்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) ‘உலக பருவநிலைமாற்ற போராட்டம்’ என்ற பெயரில் உலகம் முழுவதும் 150-க்கும் அதிக நாடுகளில் பருவநிலைமாற்ற ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலத்தரப்பட்ட மக்கள் இணைந்து போராட்டம் நடத்தினர்.
  • பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதும் கொண்டு சென்று ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் ஆதரவு குரல்களை வெளிப்படுத்த காரணமாக இருந்து உலக தலைவர்கள் மத்தியில் நிலைமையை எடுத்து கூறியதற்காக கிரேட்டா தன்பெர்க்கு ‘மாற்று நோபல் விருது' என அழைக்கப்படும் 'வாழ்வாதார உரிமை விருது' வழங்கப்படுவதாக இந்த விருது வழங்கும் வாழ்வாதார அறக்கட்டளை தெரிவித்துள்ளது

64 வது காமன்வெல்த் - மாநாடு

  • 64 வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவில் செப்டம்பர் 22 முதல் 29 வரை நடைபெறுகிறது.
  • மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழு காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளது. 64 வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் இந்திய தூதுக்குழு இந்த மாநாட்டில் காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் (சிபிஏ) உறுப்பினர்களான இந்தியாவிலிருந்து மாநில சட்டமன்றங்களின் தலைமை அதிகாரிகள் மற்றும் செயலாளர்கள் அடங்கிய இந்திய தூதுக்குழுவும் கலந்து கொள்ளும்.

உலக கருத்தடை தினம்

  • உலக கருத்தடை தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 26 அன்று அனுசரிக்கப்படுகிறது. கிடைக்கக்கூடிய கருத்தடை முறைகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும், இளைஞர்கள் தங்கள் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்து தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவுவதற்கும் இது ஒரு உலகளாவிய பிரச்சாரமாகும்.
Share with Friends