காசநோய்- ஹரேகா தேஷ் ஜீடேகா
- சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் 'காசநோய் ஹரேகா தேஷ் ஜீடேகா' பிரச்சாரத்தை செப்டம்பர் 25, 2019 அன்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் புதிய 'காசநோய் ஹரேகா தேஷ் ஜீதேகா' பிரச்சாரத்துடன் டெல்லி யில் தொடங்கினார்.
- காச நோய் (Tuberculosis, டியூபர்க்குலோசிசு) என்பது மைக்கோபாக்டீரியா (mycobacteria) என்னும் நுண் கோலுயிரியின் தாக்குதலால் மாந்தர்களுக்கு ஏற்படும் கடும் தொற்றுநோய். இதனால் நோயுற்றவர் இறக்கவும் நேரிடும்.
- இந்நோய் முக்கியமாக மைக்கோபாக்டீரியம் டியூபர்க்குலோசிசு (Mycobacterium tuberculosis) என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகின்றது.
‘இரவு நடை-Night Walk’
- இரவு 11 மணி முதல் அதிகாலை ஒரு மணி வரை பெண்களின் நைட் வாக் என்ற இரவில் நடமாடும் நிகழ்ச்சி நிர்பயா தினமான வரும் 29-ம் தேதி முதல் தொடங்குகிறது.
- இந்த திட்டத்தின்படி நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள நூறு மையங்களில் இரண்டு, மூன்று பெண்கள் இரவு நேரங்களில் தெருக்களில் நடந்து செல்வார்கள்.
- அவர்களை 200 மீட்டர் தொலைவில் இருந்து 25 பேர் கொண்ட தன்னார்வ தொண்டர்கள் கண்காணிப்பார்கள்.
- இந்த குழுவில் போலீஸ், குடியிருப்போர் சங்கத்தினர், பெண்கள் முன்னேற்றத்திற்கான குடும்பஸ்ரீ அமைப்பைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருப்பார்கள். இரவில் நடமாடும் பெண்களிடம் யாரவாது அத்துமீற முயன்றால் உடனடியாக அவர்களை பிடித்து போலீஸில் ஒப்படைப்பார்கள்.
- கைது செய்யப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல் பல்கலைக்கழகம் - திருநங்கைகள்
- திருநங்கைகள் சமூகத்தை சோ்ந்தவா்களுக்காக நாட்டின் முதலாவது பல்கலைக்கழகம் உத்தரப் பிரதேச மாநிலம், குஷிநகா் மாவட்டத்தில் திறக்கப்பட உள்ளது.
- இங்கு திருநங்கைகள் 1ம் வகுப்பு முதல் முதுநிலை படிப்பு வரை படிக்கலாம்.
- இது தவிர அவர்கள் ஆராய்ச்சி படிப்பும் படிக்கலாம்.
- இந்த பல்கலைக்கழகத்தை அகில இந்திய திருநங்கைகளின் கல்வி சேவை அறக்கட்டளை(அகில பாரதிய கின்னாா் சிக்ஷா சேவா) கட்டி வருகிறது.
- அறக்கட்டளையின் தலைவா் டாக்டா் கிருஷ்ணா மோகன் மிஸ்ரா.
Typhoon Phanfone (2019)
- டைபூன் ஃபார்ஃபோன், பிலிப்பைன்ஸில் டைபூன் உர்சுலா என்று அழைக்கப்படுகிறது, இது மிகவும் வலுவான வெப்பமண்டல சூறாவளியாக இருந்தது, இது மத்திய பிலிப்பைன்ஸ் வழியாக பயணித்தது, கிறிஸ்துமஸ் ஈவ் மற்றும் கிறிஸ்துமஸ் தினத்தன்று 2016 இல் நாக்-டென் முதல் முதல் முறையாக அழிவுகரமான காற்று மற்றும் மழை பெய்தது.
- இருபத்தி ஒன்பதாவது மற்றும் இறுதி பெயரிடப்பட்ட புயல், 2019 பசிபிக் சூறாவளி பருவத்தின் பதினேழாம் மற்றும் இறுதி சூறாவளி, ஃபான்ஃபோனின் தோற்றம் கரோலின் தீவுகளுக்கு அருகே உருவான ஒரு உயர் மட்ட தாழ்வைக் காணலாம், இது படிப்படியாக வெப்பமண்டல மந்தநிலை 30W இல் ஒழுங்கமைக்கப்பட்டது டிசம்பர் 21 அன்று. மேற்கு நோக்கி நகரும் போது, இந்த அமைப்பு விரைவாக கடுமையான வெப்பமண்டல புயலாக தீவிரமடைந்து, ஃபான்ஃபோன் என்ற பெயரைப் பெற்றது.
- பிலிப்பைன்ஸ் வளிமண்டல, புவி இயற்பியல் மற்றும் வானியல் சேவைகள் நிர்வாகம் ஃபான்ஃபோனை பிலிப்பைன்ஸ் பொறுப்புப் பகுதியில் (PAR) நுழைந்தவுடன் கண்காணிக்கத் தொடங்கியது. நிலச்சரிவுக்கு முன்னர் குறைந்தபட்சம் 1 வகை சூறாவளி வலிமைக்கு இந்த அமைப்பு பலமடையும் என்றும், நாடு முழுவதும் துரோக நிலைமைகளைக் கொண்டுவரும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
எம்.எஸ்.தோனி
- சர்வதேச கிரிக்கெட்டில் கால் பதித்து இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவு செய்கிறார் எம்.எஸ்.தோனி . 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ம் தேதி, வங்கதேச அணிக்கு எதிராக அறிமுகமான தோனி, அதன் பின்னர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உருவெடுத்தார்.
- இந்தியாவின் மிக வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான 38 வயதான இவர், கடந்த 15 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட்டுக்கு முக்கிய வீரராக இருந்து வருகிறார்.
லூயி பாஸ்ச்சர்
- லூயி பாஸ்ச்சர் அவர்கள் பிரான்சில், டோல், ஜூரா என்னுமிடத்தில் டிசம்பர் 27ஆம் தேதி, 1822 ல் பிறந்தார்.
- லூயி பாஸ்ச்சர் அவர்கள் நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படும் வேதியியலாளர்.
- வேதி நிகழ்வுகளில் ஒன்றான நொதித்தல் நிகழ்வை உற்றுநோக்கும் போது நுண்ணுயிரிகளைப் பற்றி இவர் அறிந்துக்கொண்டார்.
- நுண்ணுயிரியல் துறையில் இவரது பங்களிப்பு அளப்பரியது.
- தடுப்பு மருந்து, நுண்ணுயிர் நொதித்தல் மற்றும் பாஸ்ச்சர் முறை ஆகிய கொள்கைகளைப் பல கண்டுபிடிப்புகள் மூலம் ஏற்படுத்திப் புகழ் பெற்றவர்.
- நோய்க்கான காரணங்கள் மற்றும் அவற்றின் தடுப்புமுறைகள் குறித்த அவரது ஆராய்ச்சி ஒரு முக்கியத் திருப்புமுனையாக இருந்தது.
- இவர்தான் முதன்முதலாக வெறிநாய் முதலிய வெறிநோய் ஏறிய விலங்குகளின் கடியில் இருந்து காக்க ஒரு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தார்.
- நுண்ணுயிரியலை நிறுவிய மூவருள் இவர் ஒருவராகக் கருதப்படுகின்றார். மற்றவர்கள் பெர்டினாண்ட் கோன், ராபர்ட் கோக் ஆவர்.
- தன்னிச்சை உருவாக்கக் கோட்பாடு (spontaneous generation) மறுக்கப்பட்டதற்கு இவர் காரணமாக இருந்தார்.
- வெறிநாய்க்கடி நோய் மற்றும் ஆந்த்ராக்ஸ் போன்ற நோய்களுக்கு முதலில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்தார்.
- லூயி பாஸ்ச்சர் அவர்கள் 1885 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி இயற்கை எய்தினார்.