NASA - கல்வி சுற்றுப் பயணம்
- தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகத்திற்கு (National Aeronautics and Space Administration - NASA) கல்வி சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அங்குள்ள விண்வெளி வீரர்களுடன் உரையாட இருக்கும் மூன்று மாணவர்களில் ஒருவராக மதுரையைச் சேர்ந்த ஜே தன்யா தஸ்னெம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
- 10 ஆம் வகுப்பு பயிலும் இந்த மாணவி 2019 ஆம் ஆண்டின் தேசிய விண்வெளி அறிவியல் போட்டியில் வெற்றி பெற்ற பின்பு இந்த வாய்ப்பைப் பெற்றார்.
ஜம்மு - காஷ்மீர்
- ஜம்மு - காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370வது சட்டப் பிரிவை ரத்து செய்த மத்திய அரசின் முடிவுக்கு எதிரான "சட்ட சவாலை" ஆராய உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
- இது ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்விற்கு மாற்றப்பட்டுள்ளது.
ஜன் அவுசாதி சுகம்
- மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் டி. வி. சதானந்த கவுடா "ஜன் அவுசாதி சுகம்" என்ற ஒரு கைபேசி செயலியை அறிமுகப் படுத்தியுள்ளார். மக்கள் தங்களுக்கு அருகிலுள்ள ஜன் அவுசாதி என்ற பொது மருந்துக் கடைகளைத் தேட இது உதவும்.
புதுச்சேரி அரசு
- ஒரு நல்ல ரட்சகரை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவர்களின் உயிரைக் காப்பாற்ற உதவும் நபர்களுக்கு ரூ.5,000 ரொக்கப் பரிசை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
போக்குவரத்து
- பல்வேறு போக்குவரத்துக் குற்றங்களுக்கு மேம்படுத்தப்பட்ட அபராதங்களைக்கையாள்வது உட்பட, மோட்டார் வாகனத் திருத்தச் சட்டம் 2019இன் 63 விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
- புதிய உட்பிரிவுகள் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
புவிசார் குறியீடு
- திண்டுக்கல் பூட்டு மற்றும் கண்டாங்கி சேலை ஆகியவற்றிற்கு சென்னையில் உள்ள புவிசார் குறியீட்டுப் பதிவு அமைப்பினால் புவிசார் குறியீடு (Geographical Indication - GI) வழங்கப்பட்டுள்ளது.
- பூட்டு ஆனது அதன் உயர்ந்த தரம் மற்றும் நீடித்த உழைப்பு ஆகியவற்றிற்காக புகழ் பெற்று விளங்குகின்றது. திண்டுக்கல் நகரம் பூட்டு நகரம் என்று கூட அழைக்கப்படுகின்றது.
- இந்தத் தொழில் துறையின் வளர்ச்சிக்கு இந்தப் பிராந்தியத்தில் இருக்கும் ஏராளமான இரும்புத் தாதுக்கள் முக்கியக் காரணமாக விளங்குகின்றன.
- சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி தாலுகா முழுவதிலும் கண்டாங்கி பருத்திப் புடவைகள் தயாரிக்கப் படுகின்றன. அவை பெரிய மாறுபட்ட ஓரக் கோடுகளினால் வகைப்படுத்தப் படுகின்றன.
- கண்டாங்கி சேலைகளில் சில சேலைகள் மூன்றில் இரண்டு மடங்கு வரை ஓரக் கோடுகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகின்றன.
திண்டுக்கல் பூட்டு
கண்டாங்கி சேலை
மின்சார ரயில்கள்
- ஆற்றல் திறனுள்ள மின்சார ரயில்கள் - தெற்கு ரயில்வே
- தெற்கு ரயில்வே ஆனது சென்னைக்கும் அரக்கோணத்திற்கும் இடையே புதிய ஆற்றல் திறனுள்ள மூன்று நிலை கொண்ட மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபில் யூனிட் ரயில்க ளை (Mainline Electric Multiple Unit - MEMU) அறிமுகப் படுத்தியுள்ள து.
- இது 'மீட்டாக்க நிறுத்த (braking) அமைப்பைக்' கொண்டுள்ளது. * இது வேகமான முடுக்கம் மற்றும் எதிர் முடுக்கம் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றது.
- வழக்கமான எலக்ட்ரிக் மல்டிபில் யூனிட் ரயில்கள் (EMU) மற்றும் MEMU ரயில்கள் ஆகியவையுடன் ஒப்பிடப்படும் போது இது 35 சதவீத ஆற்றலைச் சேமிக்கின்றது.
BPR&D - தினம்
- காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தொடக்க தினம்
- புது தில்லியில் நடைபெற்ற காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (Bureau of Police Research and Development - BPR&D) 49வது தொடக்க தினக் கொண்டாட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.
- இந்த நிகழ்வின் போது உள்துறை அமைச்சர் BPR&Dயின் புதிய இலச்சினையை வெளியிட்டார். இந்தக் கொண்டாட்டத்தின் கருத்துரு, "சிறந்த நடைமுறைகள் மற்றும் தரங்களை மேம்படுத்துதல்" என்பதாகும்.
- இதுபற்றி காவல் துறைகளின் நவீனமயமாக்கலுக்காக BPR&D ஆனது 1970 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று அமைக்கப்பட்டது.
- தற்பொழுது இது ஆராய்ச்சி, மேம்பாடு, பயிற்சி மற்றும் சீர்திருத்த நிர்வாகம் என 4 பிரிவுகளைக் கொண்டுள்ளது.
Fit India - இயக்கம்
- ஆரோக்கியமான இந்தியா (Fit India) - இயக்கம்
- பிரதமர் நரேந்திர மோடி தேசிய விளையாட்டுத் தினத்தை முன்னிட்டு (ஆகஸ்ட் 29) நாடு தழுவிய "ஆரோக்கியமான இந்தியா" (Fit India) என்ற ஒரு இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
- இந்தப் பிரச்சாரமானது மக்கள் தங்களின் அன்றாட வாழ்வில் உடற் பயிற்சி மற்றும் விளையாட்டுகள் ஆகியவற்றை மேற்கொள்வதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தப் பிரச்சாரம் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜுவின் தலைமையில் 28 நபர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
- இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்த போது, இத்தினமானது ஹாக்கி வீரரான மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்த நாள் என்பதால் பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
75 புதிய மருத்துவக் கல்லூரிகள்
- அடுத்த 3 ஆண்டுகளில் 75 புதிய மருத்துவக் கல்லூரிகள் - 2021-22 ஆம் ஆண்டிற்குள் 75 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த நடவடிக்கையானது நாட்டில் மேலும் 15,700 எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்க இருக்கின்றது.
- குறைந்த பட்சம் 200 படுக்கைகளைக் கொண்ட மாவட்ட மருத்துவமனைகளுடன் இது போன்ற கல்லூரிகள் இல்லாத குறைந்த சேவைப் பகுதிகளில் இந்த மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படும்.
- 300 படுக்கைகளைக் கொண்ட மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் இலட்சிய மாவட்டங்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மாலுமிகளின் முகம் சார்ந்த பயோமெட்ரிக் தரவு (BSID)
- மாலுமிகளின் முகம் சார்ந்த பயோமெட்ரிக் தரவைக் கொண்டுள்ள பயோமெட்ரிக் மாலுமி அடையாள ஆவணத்தை (Biometric Seafarer Identity Document - BSID) வெளியிடும் "உலகின் முதலாவது" நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
- இந்தத் திட்டத்தை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் மன்சுக் மண்டாவியா புது தில்லியில் தொடங்கினார்.
- BSIDஐ வழங்குவதற்காக மும்பை, கொல்கத்தா, சென்னை, நொய்டா, கோவா, புதிய மங்களூர், கொச்சி, விசாகப்பட்டினம் மற்றும் காண்ட்லா ஆகிய இடங்களில் ஒன்பது தரவு சேகரிப்பு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
- BSIDகள் வழங்கப்பட வேண்டிய மொத்த இந்திய மாலுமிகளின் எண்ணிக்கை சுமார் 3,50,000 ஆகும்.
சமூக வானொலி சம்மேளனம்.
- புது தில்லியில் நடைபெற்ற 7வது தேசிய சமூக வானொலி சம்மேளன (சந்திப்பு) நிகழ்ச்சியில் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டார்.
- உள்ளூர் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் அவர்களின் மதிப்பு மிக்க பங்களிப்பிற்காக பல்வேறு சமூக வானொலி அலைவரிசைகளுக்கு சிறப்புமிகு விருதுகள் வழங்கப்பட்டன.
- 2019 ஆம் ஆண்டிற்கான விருதில் திரிபுராவின் "ஃப்ரெண்ட்ஸ் ரேடியோ" ஆனது கருப்பொருள் பிரிவில் முதல் பரிசை
- ெற்றது.
- இந்த விருதுகள் 5 பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டன.