Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 3rd April 20 Notes


கரோனா வைரஸ்: உதவிக்கு வந்தது உலக வங்கி

  • உலக வங்கி கரோனா வைரசை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு 1 பில்லியன் டாலர்கள் தொகையை அவசரகால நிதியாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
  • பாகிஸ்தானுக்கு 200மில் டாலர்கள், ஆப்கானுக்கு 100மில். டாலர்கள், மாலத்தீவுகளுக்கு 7.3 மில்லியன் டாலர்கள், இலங்கைக்கு 128.6 மில்லியன் டாலர்கள் வழங்குகிறது உலக வங்கி.
  • உலக வங்கியின் முதற்கட்ட உதவி 1.9 பில்லியன் டாலர்களாகும், இது 25 நாடுகளுக்கான உதவித்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்போது 40 நாடுகளுக்கு நீட்டிக்கப்பட்டு விரைவு கதியில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதில் இந்தியாவுக்குத்தான் அதிக அவசரகால நிதியாக 1 பில்லியன் டாலர்களை அறிவித்துள்ளது.
  • இதன் மூலம், “சிறந்த தடம்காணும் முறை, தொடர்பு தடம்காணுதல், மருத்துவப் பரிசோதனை நிலையங்கள், தனிப்பட்ட பாதுகாப்புக் கவசங்கள், புதிய தனிமைப்பிரிவு வார்டுகள் ஆகியவற்றை உருவாக்கலாம்” என்று உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கரோனா தாக்கத்தின் தீவிரத்தைக் குறைக்க அடுத்த 15 மாதங்களில் 160 பில்லியன் டாலர்கள் உதவித்தொகை அறிவிக்கவுள்ளது.
  • உலகின் ஏழை மக்கள் சுற்றுச்சூழல் ஆகியவைதான் பிரதான கவனம். மேலும் விரைவில் இதிலிருந்து மீள்வது பொருளாதார சரிவையும் தடுக்கும் என்கிறது உலகவங்கி.

குறைந்த விலை வென்டிலேட்டர் - இந்திய பொறியாளர்கள்

  • குறைந்த விலை வென்டிலேட்டரை வடிவமைத்த இந்திய பொறியாளர் குழுவுக்கு அமெரிக்க அரசு புகழாரம் சூட்டியுள்ளது.
  • அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.
  • கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வென்டிலேட்டர்கள் தேவைப்படுகிறது.
  • ஆனால் மருத்துவமனைகள் நிரம்பிவென்டிலேட்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
  • வென்டிலேட்டர் இல்லாமல் சுமார் 2 லட்சம் அமெரிக்கர்கள் உயிரிழக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
  • தற்போதைய நிலையில் அந்த நாட்டில் 7 லட்சம் வென்டிலேட்டர்கள் தேவைப்படுகின்றன.
  • இந்நிலையில் அமெரிக்க நிறுவனத்துக்காக இந்திய பொறியாளர்கள் குழு குறைந்த விலை வென்டிலேட்டரை வடிவமைத்துள்ளது.
  • இதன்படி குறுகிய காலத்தில் அதிக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்ய முடியும்.
  • ஒரு வென்டிலேட்டரை தயாரிக்கரூ.38,000 மட்டுமே செலவாகும்.
  • அமெரிக்காவின் எம்ஐடி பல்கலைக்கழகம் புதிய வென்டிலேட்டரை வடிவமைக்க உதவி செய்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி

  • இந்திய ரிசர்வ் வங்கி 1935 ஆம் ஆண்டு எப்ரல் முதல் நாள் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 இன் விதிகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்டது.
  • இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டதும் முதலில் அதன் மத்திய அலுவலகம் கொல்கத்தாவில் இயங்கியது. பின்னர் நிரந்தரமாக 1937லிருந்து அது மும்பைக்கு மாற்றப்பட்டது. இந்த மத்திய அலுவலகத்தில் தான் வங்கியின் கவர்னர் அமர்ந்து கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன.
  • தொடக்கத்தில் தனியாருக்குச்சொந்தமானதாக இருந்த போதிலும் 1949 இல் தேசிய மயமாக்கப்பட்டதன் பின்னரே, இந்திய ரிசர்வ் வங்கி முழுமையாக இந்திய அரசுக்குச் சொந்தமானது.

VeggiGo - App

  • கொரோனா காரணமாக ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பொது விநியோக முறையின் பயனாளிகளுக்கு இரண்டு மாத முன்கூட்டியே ரேஷன் வழங்க தனது அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
  • இந்த முடிவில் மாநிலத்தில் சுமார் 90 சதவீத குடும்பங்கள் பயனடைவார்கள் என்று அவர் கூறினார்.
  • ராஞ்சி துணை ஆணையர் ராய் மஹிமபத் ரே மக்கள் அத்தியாவசிய பொருட்களின் வரிசைக்காக " வெஜிகோ - VeggiGo" என்ற பயன்பாட்டை நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்

PRAGYAAM - App

  • COVID-19 ஊரடங்கு உத்தரவின் போது அத்தியாவசிய சேவைகளை வழங்குவதோடு தொடர்புடைய அனைவருக்கும் இ-பாஸ் வழங்க ஜார்க்கண்ட் அரசு ஒரு மொபைல் பயன்பாட்டை PRAGYAAM அறிமுகப்படுத்தியுள்ளது.
  • PRAGYAAM பயன்பாட்டின் மூலம் பதிவேற்றப்பட்ட ஆவணங்களை சரிபார்த்த பிறகு ஆன்லைன் முறை மூலம் வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்க மாவட்ட போக்குவரத்து அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
  • வழக்கமான விநியோக சேவைகள், மருத்துவம், வங்கி மற்றும் பிற தேவையான சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கு இந்த பாஸ் வழங்கப்படும்.
  • இதற்கிடையில், பயன்பாட்டில் உள்ள இ-பாஸின் நிலை மற்றும் போலி இ-பாஸ்களின் வாய்ப்புகளைத் தடுக்க இதுபோன்ற கடமைகளில் ஈடுபடும் நபரின் மொபைல் எண் மற்றும் அடையாள அட்டை உள்ளிட்ட பிற விவரங்களையும் அதிகாரிகள் சரிபார்க்க முடியும்.

"Stranded in India" என்ற இணையதளம்

  • மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகமானது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உதவுவதற்காக "Stranded in India" (இந்தியாவில் தவிப்போர்) என்ற ஒரு இணையத் தளத்தைத் தொடங்கியுள்ளது.
  • இந்தக் களமானது கோவிட் - 19 தொற்று நோயின் அச்சுறுத்தல் மற்றும் முடக்க நிலை காரணமாக தங்கள் தாயகத்தில் இருந்து வெகு தூரம் வரையில் நம்நாட்டிற்குப் பயணித்து வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தகவல் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சிவப்புக் கொடி (Exercise Red Flag) பயிற்சி

  • அமெரிக்க விமானப் படையானது, "சிவப்புக் கொடிப் பயிற்சி" எனும் தனது முதன்மைப் பலதரப்பு விமானப் பயிற்சியின் முதலாவது கட்டத்தை ரத்து செய்துள்ளது, இந்தப் பயிற்சியானது ஏப்ரல் 30 ஆம் தேதியிலிருந்து அலாஸ்காவில் நடக்க இருந்தது.
  • இந்தப் பயிற்சியில் இந்திய விமானப் படையானது தனது சுகோய் சு - 30 என்ற வகை போர் விமானங்களுடன் கலந்து கொள்ள இருந்தது.
  • அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடுகள் மட்டுமே இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளும்.

FRBM சட்டம் மற்றும் கேரளா

  • நிதியியல் பொறுப்புடைமை மற்றும் நிதிநிலை மேலாண்மை (FRBM - Fiscal Responsibility and Budget Management) சட்டத்தின் கீழ் கேரளாவிற்குச் சலுகை வழங்குமாறு மத்திய அரசிடம் அம்மாநில முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  • இது ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து தொடங்கும் அடுத்த நிதியாண்டில் மாநிலத்தின் நிதிநிலைமையானது மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏதும் அடையாமல் இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • அவசர கால நிவாரணத் திட்டத்திற்கு நிதியளித்து உதவுவதற்காக, ஏப்ரல் மாதத்திலேயே சந்தையிலிருந்து ரூ.12,500 கோடி கடனைப் பெற கேரளா பரிந்துரைத்துள்ளது.
  • இந்தச் சட்டமானது பொதுவாக அறியப்படும் "விடுபடு பிரிவு" (escape clause) என்ற ஒன்றைக் கொண்டுள்ளது.
  • FRBM சட்டம், 2003 ஆனது நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்காக நிதியியல் ஒழுங்குமுறைகளை ஏற்படுத்தியுள்ளது.
  • இந்தச் சட்டத்தின் நீண்ட கால நோக்கம் என்பது இந்தியாவிற்கான நிதியியல் நிலைத் தன்மையை அடைவது மற்றும் இந்தியாவில் பணவீக்கத்தைக் கையாளுவதற்காக ரிசர்வ் வங்கிக்குத் தேவையான அதிகாரங்களை வழங்குவது ஆகியவனவாகும்.
  • இந்தச் சட்டத்தின் கீழ், மத்திய அரசானது சிலபல காரணங்களைக் காரணம் காட்டி வருடாந்திர நிதிப்பற்றாக்குறை இலக்கை மீறலாம்.
  • தேசியப் பாதுகாப்பு, போர், தேசியப் பேரிடர், விவசாய நிலை சீர்குலைதல், அடிப்படைக் கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் மற்றும் முந்தைய 4 காலாண்டுகளின் சராசரி விகிதத்தை விட குறைந்தது 3 புள்ளிகள் குறைவாக தற்போதைய காலாண்டின் நேரடி வளர்ச்சிக் குறைவு ஆகியவை அதற்கான காரணங்களாகும்.
Share with Friends