Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 3rd February 20 Content

காமன்வெல்த் - மாலத்தீவு

    மனித உரிமைகள் பிரச்சினையில் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மாலத்தீவுகள் காமன்வெல்த் நாட்டிலிருந்து பிரிந்தன. ஜனநாயக சீர்திருத்தங்களில் முன்னேற்றம் இல்லாததால் மாலத்தீவுகள் காமன்வெல்த் நாட்டிலிருந்து பிரிந்தன. மாலத்தீவுகள் காமன்வெல்த் குழுவில் மீண்டும் சேர அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

பயிர்கள் நாசம்: பாலைவன வெட்டுக்கிளி

    பாகிஸ்தானில் பாலைவன வெட்டுக்கிளிகளின் வருகையால் விவசாயப் பயிர் விளைச்சல்கள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ள நிலையில், பாலைவன வெட்டுக்கிளிகளுக்கு எதிராக நெருக்கடி நிலையை அந்நாடு அறிவித்துள்ளது. கடந்த இருபது முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மிக மோசமான வெட்டுக்கிளி தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது பாகிஸ்தான். இது குறித்து பாகிஸ்தான் விவசாயப் பயிர் பாதுகாப்புத்துறை பெரும் அச்சம் தெரிவித்துள்ளது.

கடலோர பாதுகாப்புப் பயிற்சி

    இந்திய கடற்படை சமீபத்தில் கொல்கத்தாவில் ஒரு தனித்துவமான கடலோர பாதுகாப்புப் பயிற்சியைத் தொடங்கியது. உள்ளுர் சமூகத்திற்கு கடலோர பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவிற்கும் பங்களாதேஷூக்கும் இடையிலான சர்வதேச வர்த்தக நெறிமுறை வழியில் ஹேம்நகர் வரை சுந்தர்பானில் இருந்து இரண்டு கடற்படை படகுகள் கொடியிடப்பட்டன.

கொரோனா வைரஸ் - கேரளா

    கேரளாவை சேர்ந்த மேலும் ஒரு இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அந்த இளைஞர் அண்மையில் சீனாவின் வுஹான் பகுதிக்கு சென்று வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்குகிறது ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரம்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரை வீழ்த்தி, நோவக் ஜேகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். தொடக்கத்தில் கடும் நெருக்கடி கொடுத்த பெடரர், பின்னர் ஜோக்கோவிச்சின் ஆக்ரோஷ ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினார். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் 7-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் நோவக் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.
Share with Friends