உலக வனவிலங்கு தினம்
- உலக வனவிலங்கு தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3 ஆம் தேதி பூமியில் காணப்படும் அழகான மற்றும் மாறுபட்ட காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களை கொண்டாடும் விதமாக உலகளவில் அனுசரிக்கப்படுகிறது.
- உலக வனவிலங்கு தினம், காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் பாதுகாப்பு பூமியில் வாழும் மக்களுக்கு அளிக்கும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
உலக செவித்திறன் நாள்
- உலக செவித்திறன் தினம் ஆண்டு தோறும் மார்ச் 3ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- உங்கள் செவித்திறனை பரிசோதியுங்கள் என்பதே இந்த நாளின் முக்கிய மையக்கருத்தாக உள்ளது.
- காது கேளாமையை தடுப்பது மற்றும் உலகம் முழுவதும் காது மற்றும் செவிப்புலன் பராமரிப்பை மேம்படுத்துவது குறித்த விழிப்புணர்வை இந்த நாள் உணர்த்துகிறது.
பூர்வோதயா திட்டம்
- மத்திய உருக்கு அமைச்சகம் சமீபத்தில் உலக தரத்திலான உருக்காலை ஒருங்கமைவு மையத்தை ஏற்படுத்த பூர்வோதயா என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.
- இந்த திட்டம் முழுவதுமாக இந்தியாவின் கிழக்கு பகுதி மாநிலங்களை பொருளாதார ரீதியாக ஒருங்கிணைப்பதை நோக்கமாக கொண்டு துவங்கப்பட்டுள்ளது.
- பூர்வோதயா திட்டத்தை செயல்படுத்தும் அமைப்பாக இந்தியா தொழிற்சாலைகள் கூட்டமைவு (CII) நியமிக்கப்பட்டுள்ளது.
- கிழக்கு மாநிலங்கள் இணைத்து உருக்கு மையமாக உருவாக்குதல் 5 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்கல் உலகத்தரம் வாய்ந்த சரக்கு கையாளும் கட்டமைப்பை உருவாக்குதல் 2030ம் ஆண்டிற்குள் 300 மில்லியன் டன் உலோக உருக்கு உற்பத்தி செய்யும் இலக்கை அடைய இந்த திட்டம் பயன்படும்.
FIH தரவரிசை
- இந்திய ஆண்கள் ஹாக்கி அணி நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
- உலக சாம்பியனான பெல்ஜியம் முதல் இடத்தில் உள்ளது, ஆஸ்திரேலியா 2 வது இடமும், நெதர்லாந்து 3 வது இடத்திலும் உள்ளன.
தலைமை நிர்வாக அதிகாரி - நோக்கியா
- நோக்கியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாகபெக்கா லண்ட்மார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
- தற்போதைய நோக்கியாவின் தலைமை நிர்வாகி திரு. ராஜீவ் சூரி தனது தற்போதைய பதவியை 2020 ஆகஸ்ட் 31 ஆம் தேதி விட்டுவிட்டு, 2021 ஜனவரி 1 ஆம் தேதி வரை நோக்கியா வாரியத்தின் ஆலோசகராக பணியாற்ற உள்ளார்.
பிரதமர் மோடி அனைத்து சமூக வலைத்தளத்தில் இருந்தும் விலகவுள்ளார்
- ட்விட்டரில் 53.3 மில்லியன், இன்ஸ்டாகிராமில் 35.2 மில்லியன், யூடியூப்பில் 4.51 மில்லியன் மற்றும் பேஸ்புக்கில் 44.73 மில்லியன் பின்தொடர்பவர்களுடன், சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான உலகத் தலைவர்களில் மோடி தனது சமூக வலைதள கணக்குகளில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
- ட்விட்டரில் 50 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட மூன்றாவது உலகத் தலைவர் மோடி மட்டுமே. முதல் இருவர் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
பென்ஷன் அடலட் திட்டம்
- ஜம்முவில் நடைபெற்ற ‘பென்ஷன் அடலட் ’ விழாவை மத்திய வடகிழக்கு பிராந்திய மாநில வளர்ச்சி அமைச்சர் ஸ்ரீ டாக்டர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார். இந்த திட்டத்தை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை, பணியாளர்கள், பொது குறைகளை மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் நடத்தியது.