Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 3rd September 19 Content

பழங்கால செங்கல் தொட்டி

  • சிவகங்கை மாவட்டத்தின் கீழடியில் நடந்த ஐந்தாவது கட்ட அகழ்வாராய்ச்சியின் போது தொல்பொருள் ஆய்வாளர்களால் செங்கல் தொட்டி ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • இந்த அகழ்வாராய்ச்சியானது மாநில தொல்பொருள் துறையால் நடத்தப்படுகிறது.
  • 3 முதல் 4 அடி நீளமும் சுமார் 2.5 அடி அகலமும் இரண்டு மீட்டர் ஆழமும் கொண்ட இந்தத் தொட்டியானது செங்கல்லினால் ஆன தரையையும் கொண்டது.
  • 2015 ஆம் ஆண்டில் இந்த இடத்தில் நடைபெற்ற இந்திய தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்ட தொட்டியின் கட்டமைப்புகளையே இதுவும் கொண்டுள்ளது.
  • இவற்றில் பல தொட்டிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.

அங்கிகார் பிரச்சாரம்

  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகமானது அங்கிகார் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
  • இது பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) பயனாளிகளை மற்ற மத்திய அரசின் திட்டங்களான உஜ்ஜாவாலா மற்றும் ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்களுக்குள் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டது.
  • அங்கிகார் ஆனது பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாவின் (நகர்ப்புறம்) அனைத்துப் பயனாளிகளையும் படிப்படியாக அணுகுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேலும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகமானது இந்தியாவின் எளிதில் பாதிக்கப் படக்கூடிய பகுதிகளின் அட்லஸ் எனும் மின்னணு கல்வியையும் தொடங்கியுள்ளது.
  • இது இயற்கைப் பேரிடர்கள் பற்றிய விழிப்புணர்வையும் புரிதலையும் வழங்கும் ஒரு தனித்துவமான பாடமாகும். மேலும் இது பல்வேறு அபாயங்களினால் எளிதில் பாதிப்படையக் கூடிய பகுதிகளை அடையாளம் காண உதவுகிறது.

இந்தியா – கானா வெளியுறவு அலுவலக ஆலோசனைகள்

  • முதலாவது இந்தியா-கானா நாடுகளின் வெளியுறவு அலுவலக ஆலோசனைகள் கடந்த ஆகஸ்ட் 28 அன்று புதுடெல்லியில் நடைபெற்றது.
  • இந்தியக் குடியரசுத் தலைவர் ஜுன் 2016ல் கானாவிற்கு பயணம் மேற்கொண்டார். சர்வதேச சூரியஒளிக் கூட்டிணைவின் தொடக்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கானா நாட்டின் குடியரசுத் தலைவர் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.
  • வர்த்தகம் மற்றும் முதலீடு, மேம்பாட்டுக் கூட்டாண்மை, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் மருத்துவ துறை, திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி, மக்கள் தொடர்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்த இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

AB-MGRSBY சுகாதார காப்பீட்டு திட்டம் - ராஜஸ்தான்

  • ராஜஸ்தான் அரசானது ‘ஆயுஷ்மான் பாரத்-மகாத்மா காந்தி ராஜஸ்தான் ஸ்வஸ்திய பீமா யோஜ்னா’ (AB-MGRSBY/ Ayushman Bharat Mahatma Gandhi Rajasthan Swasthya Bima Yojana) என்ற புதிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது. இது செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
  • இது மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா மற்றும் மாநில அரசின் பாமாஷா ஸ்வஸ்திய பீமா யோஜ்னா ஆகியவற்றை இணைத்த பின்னர் செயல்படுத்தப்படும்.

நமஸ்தே பசிபிக்

  • நமஸ்தே பசிபிக் என்பது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பிஜி மற்றும் பப்புவா நியூ கினியாவின் உயர் ஆணையர்களால் கூட்டாக இணைந்து நடத்தப்படும் ஒரு நிகழ்வாகும்.
  • நமஸ்தே பசிபிக்கின் இரண்டாம் பதிப்பு நியூசிலாந்து உயர் ஆணையரின் இல்லத்தில் நடத்தப்பட்டது.
  • இந்நிகழ்வானது நியூசிலாந்தின் உயர் ஆணையரான ஜோனா கெம்ப்கெர்ஸின் சிந்தனையால் உருவானதாகும். நமஸ்தே பசிபிக் நிகழ்வானது பசிபிக் கலாச்சாரத்தை இந்தியாவுக்கு வழங்கியது.

இந்திய ரயில்வேயின் குறுகிய வரலாறு

  • இந்திய ரயில்வேயின் வரலாறு குறித்த இந்த புதிய புத்தகமானது 1830களில் இருந்து புதிய அதிவேக ரயில் 18 வரையிலான இந்திய ரயில்வேயின் பயணம் பற்றி விளக்குகிறது.
  • "இந்திய ரயில்வேயின் குறுகிய வரலாறு" என்ற இந்தப் புத்தகத்தை மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ராஜேந்திர பி அக்லேகர் எழுதியுள்ளார்li>இந்தப் புத்தகத்திற்கான முன்னுரையை பிரபல பத்திரிகையாளரான மார்க் டல்லி எழுதியுள்ளார்.

கார்வி குஜராத் பவனை

  • புது தில்லியில் கார்வி குஜராத் பவனை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். தேசிய தலைநகரில் அக்பர் சாலையில் அமைந்துள்ள புதிய கட்டிடம் குஜராத் அரசால் சுமார் 131 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.

டின்சுகியா ரயில் நிலையம்

  • ரெயில்டெல் சிஎம்டி புனீத் சாவ்லா, இந்த பயணம் மும்பை சென்ட்ரலில் இருந்து 2016 ஜனவரியில் தொடங்கியது என்றும், வரும் சில வாரங்களில் இந்தியாவின் எல்லா ரயில் நிலையங்களிலும் (நிறுத்த நிலையங்கள் தவிர) வேகமான மற்றும் இலவச ரயில்வேர் வைஃபை இருக்கும் என்றும் கூறினார்.

ஜப்பான்

  • கிழக்கு சீனக் கடலில் சர்ச்சைக்குரிய தீவுகளில் ரோந்து செல்வதற்காக ஜப்பான் சப்மஷைன் துப்பாக்கிகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பொருத்தப்பட்ட ஒரு சிறப்பு போலீஸ் பிரிவைத் தொடங்கவுள்ளது.

ஸ்ரீ ஸ்கூல்சவுன் மேல்நிலைப்பள்ளி

  • நேபாளத்தின் அட்டர்னி ஜெனரல் அக்னி பிரசாத் கரேல் மற்றும் நேபாளத்திற்கான இந்திய தூதர் மஞ்சீவ் சிங் பூரி ஆகியோர் கூட்டாக ஜாபா மாவட்டத்தில் இந்தியாவின் உதவியுடன் அமைக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

பொருளாதார மன்றம்

  • ரஷ்யாவில் நடைபெறும் 5 வது கிழக்கு பொருளாதார மன்றம் – இஇஎஃப் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார். மூன்று நாள் பயணத்தின் போது ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 20 வது ஆண்டு உச்சி மாநாட்டிலும் பிரதமர் கலந்து கொள்வார்.

ஐ.நா. மாநாடு COP14

  • நிலையான நில மேலாண்மை, நில சீரழிவை மாற்றியமைத்தல், வறட்சியைத் தணித்தல், பாலைவனமாக்குதலை நிறுத்துதல், மணல் மற்றும் தூசி புயல்களை நிவர்த்தி செய்தல், பாலினத்துடனான தொடர்புகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதே சிஓபி 14 இன் நோக்கமாகும்.

அப்பாச்சி ஹெலிகாப்டர்

  • அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எட்டு அப்பாச்சி ஏ.எச் -64 இ தாக்குதல் ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்படும். அப்பாச்சி கடற்படையின் சேர்க்கை IAF இன் போர் திறன்களை கணிசமாக மேம்படுத்தும்.

‘குளோபல் கோல்கீப்பர் விருது’

  • பிரதமர் நரேந்திர மோடிக்கு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை வழங்கும் மதிப்புமிக்க ‘குளோபல் கோல்கீப்பர் விருது’ வழங்கப்படவுள்ளது . ஸ்வச் பாரத் அபியானில் அவருடய தலைமை மற்றும் அர்ப்பணிப்புக்காக இந்த விருது வழங்கப்படவுள்ளது .

தேசிய நீர்வாழ் சாம்பியன்ஷிப்

  • போபாலில் பிரகாஷ் தரண் புஷ்கரில் நடைபெற்ற 73 வது மூத்த தேசிய நீர்வாழ் சாம்பியன்ஷிப்பின் போது ஹரியானாவைச் சேர்ந்த திவ்யா சதிஜா பெண்களின் 50 மீ பட்டர்ஃபிளை பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.

ஐ.எஸ்.எஸ்.எஃப்

  • ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை ரைபிள் / பிஸ்டல் சாம்பியன்ஷிப்பில் இந்தியா 5 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது.

53 டெஸ்ட் வெற்றிகள் - கிரேம் ஸ்மித்

  • ஒட்டுமொத்தமாக, தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் 53 டெஸ்ட் வெற்றிகளுடன் உலகின் மிக வெற்றிகரமான கேப்டனாக இருக்கிறார், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது கேப்டன் பதவியில் 48 டெஸ்ட் வெற்றிகளைப் பதிவு செய்தார்.
Share with Friends