Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 4th April 20 Notes


நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள்

  • International Day for Land Mine Awareness and Assistance in Mine Action
  • நிலக்கண்ணிகள் நிலத்தில் ஒரு சில சென்டிமீட்டர் ஆழத்திலோ அல்லது நிலத்தின் மேலோ வைக்கப்படும் வெடிபொருட்களாகும்.
  • பெரும்பாலும் நாட்டின் எல்லைப்புரங்களிலும், யுத்தம் நடைபெறும் இடங்களிலும் வைக்கப்படுகின்றன.
  • நிலக்கண்ணிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், இதன் உற்பத்தி, விற்பனை, விநியோகம் ஆகியவற்றை தடுத்திடவும், இதனால் பாதிக்கப்பட்டவரின் உரிமையை எடுத்துக் கூறவும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர்

  • கொரோனா வைரஸ் பரவி வருவதால், இந்தியாவில் நடக்கவிருந்த மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் வரும் நவம்பர் மாதம் 2ம் தேதி முதல் 21ம் தேதிவரை 17 வயதிற்குட்பட்ட மகளிர் கால்பந்து அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்த திட்டமிடப்பட்டது.
  • இதற்கான அட்டவணையை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) வெளியிட்டிருந்தது.
  • இதில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தன.
  • சமீபத்தில் பிபா கவுன்சிலால் நிறுவப்பட்ட பிபா-கூட்டமைப்பு செயற்குழுவின் கூட்டம் நடைபெற்றது.
  • இந்நிலையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் போட்டியை போட்டியை ஒத்திவைப்பதாக பிபா அறிவித்துள்ளது.
  • போட்டிக்கான புதிய அட்டவணை பின்னர் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது.
  • இக்கூட்டத்தைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் நடைபெறவிருந்த சர்வதேச போட்டிகள் (ஜூன் 2020 வரை) மற்றும் யு-17 மற்றும் யு-20 மகளிர் உலகக் கோப்பை உள்ளிட்ட அனைத்து பிபா போட்டிகளையும் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • மேலும், 2022 உலகக் கோப்பை தகுதிப் போட்டிகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணை குறித்து, கூட்டமைப்புகளுடன் கலந்துரையாடவும் முடிவு செய்யப்பட்டது.

ஹரித்துவார் மகா கும்பமேளா - ரூ.375 கோடி

  • ஒதுக்கீடு உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் அடுத்த ஆண்டு மகா கும்பமேளா கொண்டாடப்பட உள்ளது.
  • இந்த விழாவுக்கு மத்திய நிதியமைச்சகம் ரூ.375 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லிபியாவில் ராணுவப் போர்

  • வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் ஐ.நா. ஆதரவு பெற்ற அரசு படைக்கும், நாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் கிளர்ச்சி ராணுவ படைக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
  • ராணுவ தளபதி கலீபா ஹப்தார் தலைமையிலான கிளர்ச்சி படை தலைநகர் திரிபோலியை ஆக்கிரமிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
  • இதனிடையே லிபியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இருதரப்பும் மோதலை நிறுத்திவிட்டு வைரசை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமென ஐ.நா. சபை வலியுறுத்தி வருகிறது.
  • ஆனால் கிளர்ச்சி ராணுவம் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
  • இந்த நிலையில் தலைநகர் திரிபோலி அருகே மிசூராடா நகரில் உள்ள கிளர்ச்சி ராணுவ படையின் நிலைகளை குறிவைத்து லிபியா விமானப்படை விமானங்கள் வான்தாக்குதல் நடத்தின.
  • இதில் கிளர்ச்சி ராணுவவீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஏவுகணைகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்த 3 ஆயுதக்கிடங்குகள் நிர்மூலமாக்கப்பட்டன.

சூரியசக்தி மின்சாரம் முதல் முறையாக 3,095 மெகா வாட் கொள்முதல்

  • சென்னை: சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, மின் வாரியம், முதல் முறையாக, 3,095 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்துள்ளது.
  • தமிழகத்தில், தனியார் நிறுவனங்கள், 3,759 மெகா வாட் திறனில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைத்துள்ளன.
  • அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள விலைக்கு, தமிழக மின் வாரியம் கொள்முதல் செய்கிறது.
  • சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, தினமும் சராசரியாக, 2,000 மெகா வாட் கொள்முதல் செய்யப்படுகிறது.
  • அவற்றில் இருந்து, நடப்பாண்டு மார்ச், 10ம் தேதி, 3,082 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது.
  • தற்போது, கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில் நேற்று முன்தினம், சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, மின் வாரியம், முதல் முறையாக, 3,095 மெகா வாட் மின்சாரத்தை கொள்முதல் செய்துள்ளது.

ஆரோக்யாசேது (AarogyaSetu)

  • கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள், தனியார் துறைகள் தீவிரமாக களமிறங்கி செயல்பட்டு வருகிறது.
  • இந்த நிலையில் தற்போது மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப துறை மூலம் இதற்கு ஆரோக்யாசேது (AarogyaSetu) என்ற செயலி வெளியிடப்பட்டுள்ளது.
  • ஆரோக்யாசேது (AarogyaSetu) எனப்படும் ஆப் தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து உருவாக்கப்பட்டு உள்ளது.
  • நீங்கள் இருக்கும் இடம், உங்களுக்கு அருகே இருக்கும் நபர்கள் மூலம் உங்களுக்கு எந்த அளவிற்கு கொரோனா பரவ வாய்ப்புள்ளது என்று இந்த ஆப் கணித்து உங்களை எச்சரிக்கும்.
  • இது ஏஐ மூலம் செயல்பட கூடிய ஆப் ஆகும்.
  • உங்கள் ஜிபிஎஸ் லொகேஷன், ப்ளூடூத், வைஃபை ஆகியவற்றின் மூலம் இது உங்கள் இருப்பிடத்தை வைத்து உங்களை எச்சரிக்கும்.
  • உங்களுக்கு கொரோனா ஏற்பட்டால், இதில் நீங்கள் தகவலை தெரிவிக்கலாம்.
  • அதன்மூலம் உங்களுக்கு அருகே உள்ளவர்களை இந்த ஆப் எச் மொத்தமாக டேட்டாக்களை திரட்டி இந்த ஆப் உங்களை சோதனை செய்யும்.
  • அதேபோல் அரசுக்கும் உடனுக்குடன் இது கொரோனா குறித்த தகவல்களை தெரிவிக்கும். இந்த ஆப் இந்தியாவில் மொத்தம் 11 மொழிகளில் வெளியிடப்பட்டு உள்ளது. ஆண்டிராய்டு மற்றும் ஆப்பிள் இயங்கு தளத்தில் இது இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விம்பிள்டன் டென்னிஸ் ரத்து

  • கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிக உயரியதான கருதப்படுவது விம்பிள்டன் டென்னிஸ் தொடர்.
  • 134-வது விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ஜூன் 29-ந்தேதி முதல் ஜூலை 12-ந்தேதி வரை லண்டனில் நடத்தப்பட இருந்தது.
  • கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த போட்டியை ரசிகர்கள் இன்றி மூடப்பட்ட மைதானத்தில் நடத்தவோ அல்லது தள்ளிவைக்கப்படவோ சாத்தியமில்லை என்று போட்டி அமைப்பாளர்கள் ஏற்கனவே கூறியிருந்தனர்.
  • தொற்று இங்கிலாந்திலும் மின்னல் வேகத்தில் பரவுவதால் வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோரின் நலனை கருத்தில் கொண்டு விம்பிள்டனை ரத்து செய்வதாக ஆல் இங்கிலாந்து டென்னிஸ் கிளப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
  • இதனால் சாம்பியன்கள் ஜோகோவிச், பெடரர், செரீனா வில்லியம்ஸ், ஹாலெப் போன்ற முன்னணி வீரர், வீராங்கனைகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
  • உலகப் போர்களுக்காக அல்லாமல் வேறு காரணத்துக்காக முதல்முறையாக விம்பிள்டன் ரத்து செய்யப்படுகிறது.
  • முதலாம் உலகப் போரினால் 1915-18 வரை விம்பிள்டன் நடைபெறவில்லை.
  • இரண்டாம் உலகப் போரினால் 1940-45 வரை மீண்டும் ரத்து செய்யப்பட்டது.
  • விம்பிள்டன் புல்தரையில் ஆடப்படும் ஒரே கிராண்ட் சிலாம் போட்டித் தொடர் என்பது குறிப்பிடதக்கது.

புதிய குடியேற்றச் சட்டம் - ஜம்மு-காஷ்மீர்

  • ஜம்மு-காஷ்மீரில் 138 சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதனை அரசிதழில் புதன்கிழமை அரசு வெளியிட்டது.
  • புதிய குடியேற்றச் சட்டத்தின்படி குரூப்-4க்கான பணிகளை அந்த யூனியன் பிரதேசத்தில் வசிப்பவா்களுக்கு மட்டுமே அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த திருத்தப்பட்ட சட்டங்களில் ஜம்மு-காஷ்மீா் சிவில் சா்வீஸ் (பரவலாக்கம் மற்றும் ஆள்சோ்ப்பு) சட்டமும் சோ்க்கப்பட்டுள்ளது.
  • அதன்படி, யூனியன் பிரதேசத்தில் 15 ஆண்டுகள் தங்கியிருக்கும் நபா்களே அங்குள்ள குடியிருப்புவாசிகளாக கருதப்படுவாா்கள்.
  • 10 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வரும் அகில இந்திய சேவை ஊழியா்களின் வாரிசுகளும் இந்த பிரிவின் கீழ் சோ்க்கப்படுவாா்கள்.
  • அதேசமயம் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் குடியிருப்பவா்களாக இல்லாவிட்டால், ரூ. 25,500- க்கு மேல் இல்லாத ஊதிய அளவைக் கொண்ட குரூப் -4 பதவியில் நியமனம் பெற எந்தவொரு நபரும் தகுதி பெறமாட்டாா் என்று இந்தச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த அக்டோபா் 31-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டப்பின், அமலில் இருந்த 138 சட்டங்களில் 28 ரத்து செய்யப்பட்டன.
  • தற்போதைய புதிய குடியேற்றச் சட்டத் திருத்தத்தின்படி, ஜம்மு-காஷ்மீரில் 15 ஆண்டுகளாக வசித்து வருபவா் அல்லது 7 ஆண்டுகளாக படித்து வருபவா் மற்றும் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேவெழுதியவா்கள் அதன் குடியிருப்புவாசிகளாக கருதப்படுவாா்கள்.
  • மேலும், நிவாரண மற்றும் மறுவாழ்வு ஆணையா் (புலம்பெயா்ந்தோா்) மூலம் சான்றளிக்கப்பட்டு குடியேறியவா்களும் குடியிருப்புவாசியாக கருதப்படுவாா்கள்.
  • அதேபோல புதிய குடியேற்றச் சட்ட திருத்தத்தின்படி குடியிருப்புவாசிகளாக கருதக்கூடியவா் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளவா்கள் வருமாறு: மத்திய அரசு அதிகாரிகள், அகில இந்திய சேவை அதிகாரிகள், பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை வங்கிகள், சட்டரீதியான அமைப்புகளின் அதிகாரிகள், மத்திய பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளாக பணியாற்றிய மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள்.
Share with Friends