Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 4th February 20 Content

2020-21 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்

  • நிதியமைச்சர் நிர்மலா - சீதாராமன்
  • கல்வித் துறைக்கு 99,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உலக புற்றுநோய் தினம்

  • உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் 8.8 மில்லியன் மக்கள் புற்றுநோயால் இறக்கின்றனர்.
  • உலக புற்றுநோய் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 4 ஆம் தேதி சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியத்தால் குறிக்கப்படுகிறது.
  • இந்த நாள் 2008 முதல் குறிக்கப்படுகிறது.
  • ஐக்கிய நாடுகளும் இந்த நாளைக் கடைப்பிடிக்கின்றன.
  • இந்த ஆண்டின் உலக புற்றுநோய் தினத்தின்; கருப்பொருள் : நான்…நான் செய்வேன் Theme: I am I will
  • இந்த தீம் 2019-2021 ஆண்டுகளில் பின்பற்றப்படுகிறது.

ஐ.சி.சி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை

  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது சமீபத்திய டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசைகளை வெளியிட்டது. தரவரிசையில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார், இந்திய கிரிக்கெட் வீரர் சேதேஸ்வர் அரவிந்த் புஜாரா 6 வது இடத்திலும், இந்தியாவின் அஜின்கியா மதுகர் ரஹானே 9 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
  • இந்திய பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் ஜஸ்பீர்சிங் பும்ரா 6 வது இடத்தில் சிறந்த பந்து வீச்சாளராகவும், ரவிச்சந்திரன் அஸ்வின் 8 வது இடத்திலும் உள்ளனர்.

மாட்லா அபியான்

  • கடலோர பாதுகாப்புப் பயிற்சியை, சுந்தர்பான்ஸ் பிராந்தியத்தில் இந்திய கடற்படை நடத்தியது. இந்தியாவிற்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான சர்வதேச வர்த்தக நெறிமுறை வழியில் ஹேம்நகர் வரை சுந்தர்பானில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

கிராமப்புற தொழில்நுட்ப விழா

  • இந்தியாவின் மிகப் பெரிய கிராமப்புற தொழில்நுட்ப விழா ‘அந்தபிரக்னியா 2020’ ராஜீவ் காந்தி அறிவு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நிர்மல் மாவட்டம், தெலுங்கானாவில் நடைபெற்றது, இந்த விழாவை தெலுங்கானாவின் நிர்மல் மாவட்ட ஆட்சியர் எம்.பிரசந்தி திறந்து வைத்தார்.
  • திருவிழா ஜனவரி 31 முதல் பிப்ரவரி 1,2020 வரை 3 நாட்கள் நடைபெற்றது. 2020 ஆம் ஆண்டிற்கான மையக்கரு “கிராமப்புற தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்களைக் கண்டுபிடித்து ஊக்குவித்தல்.
Share with Friends