Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 4th March 20 Content

தேசிய பாதுகாப்பு நாள்

  • ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் தேசிய பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது. தேசிய பாதுகாப்பு கவுன்சில் “பாதுகாப்பு” குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய பாதுகாப்பு வாரத்தை அனுசரிக்கிறது.
  • இந்த ஆண்டின் கருப்பொருள் “மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு செயல்திறனை மேம்படுத்துதல்”.

‘எழுச்சி இந்தியா’

  • மத்திய அரசின் ‘எழுச்சி இந்தியா’ (ஸ்டேண்ட் அப் இந்தியா) திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளில் பெண்களுக்கு ரூ. 16,712 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்தது.
  • பெண்களின் தொழில்முனைவோர் கனவை நனவாக்கும் வகையில் ‘எழுச்சி இந்தியா’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டவர்களில் 81 சதவீதம் பேர் பெண்கள். சுமார் 73,155 வங்கிக் கடன் கணக்குகள் பெண்கள் பெயரில் தொடங்கப்பட்டுள்ளன.

எக்ஸ் கதிர் மற்றும் ரேடியோ தொலைநோக்கி

  • எக்ஸ் கதிர் மற்றும் ரேடியோ தொலைநோக்கிகளைப் பயன்படுத்திப் பெரு வெடிப்பிற்குப் பிறகு பிரபஞ்சத்தில் காணப்பட்ட மிகப்பெரிய வெடிப்பை வானியலாளர்களைக் கொண்ட சர்வதேச குழுவானது கண்டுபிடித்துள்ளது.
  • இந்தக் கண்டுபிடிப்பிற்காக 3 தொலைநோக்கிகள் பயன்படுத்தப்பட்டன.
  • அவையாவன: NASAவின் சந்திரா எக்ஸ்ரே ஆய்வகம்,ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் எக்ஸ்எம்எம் – நியூட்டன் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள முர்ச்சீசன் வைட்ஃபீல்ட் அரே ஆய்வகம்.
  • பூமியிலிருந்து 390 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஓபியுச்சஸ் விண்மீன்த் திரள் குழுவில் (Ophiuchus galaxy cluster) இந்த வெடிப்பு நிகழ்ந்தது.
  • இந்த வெடிப்பின் ஆற்றலானது விண்மீன் தொகுப்பில் உள்ள வெப்பமான வாயுக்களைக் கொண்ட பிளாஸ்மாவில் பெரும் இடைவெளியை ஏற்படுத்தியது.

எரிசக்தித் திறன்

  • எரிசக்தித் திறன் அமைப்பானது சமீபத்திய நிகழ்வின் போது ஆழ்உறைப் பெட்டகம் மற்றும் இலகு ரக வணிக ரீதியிலான குளிர்சாதனப் பெட்டிகளுக்கான (Light Commercial Air Conditioners – LCAC)) நட்சத்திர மதிப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • எரிசக்தி பாதுகாப்புச் சட்டம், 2001ன் கீழ், நட்சத்திரக் குறியீட்டுத் திட்டமானது, அதன் விதிமுறையின் ஒரு பகுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • நட்சத்திர மதிப்பீடானது ஒரு சாதனத்தின் ஆற்றல் செயல்திறனை வழங்குகின்றது. அதிக நட்சத்திர மதிப்பீடானது குறைவாக நுகரப்படும் ஆற்றலைக் குறிக்கின்றது.
  • இந்த நிகழ்வின் போது உலக வள நிறுவனத்துடன் (WRI – World Resources Institute) இணைந்து BEE ஆல் எடுக்கப்பட்ட முதலாவது முயற்சியான உர்ஜா தக்சதா தகவல் கருவியானது (Urja Dakshata Information Tool – UDIT)தொடங்கப்பட்டுள்ளது.

அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி

  • உலகெங்கிலும் நாவல் கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து மதிப்புமிக்க அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  • இந்த போட்டியில் ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், புரவலன் மலேசியா, பாகிஸ்தான் மற்றும் தென் கொரியா ஆகிய அணிகள் பங்கேற்க உள்ளன.

“இன்கிரிடிபில் இந்தியா”

  • இந்தியாவின் சுற்றுலாத் தலங்கள், இடங்கள், அனுபவங்கள் மற்றும் பல தகவல்களை வழங்கும் நோக்கில் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஸ்ரீ பிரஹ்லத் சிங் படேல் புதுதில்லியில் ‘இன்கிரிடிபில் இந்தியா’ வலைத்தளம் மற்றும் மொபைல் செயலியின் பன்மொழி பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளார்.

கால்நடைகளை பராமரிப்பு- உ.பி அரசு ரூ .900

  • கால்நடைகளை பராமரிக்க விரும்பும் விவசாயிகளுக்கு மாதத்திற்கு ரூ .900 செலுத்துவதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.
  • கால்நடைகளை பராமரிக்க , மாநில அரசு “முதலமைச்சர் பசு பங்கேற்பு திட்டத்தை” அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ரூ .900 வழங்கப்படும்.

“ஈகாம் ஃபெஸ்ட்” கண்காட்சி

  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய ஊனமுற்ற நிதி மேம்பாட்டுக் கழகம் புதுடில்லியில் ஈகாம் ஃபெஸ்ட்கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
  • ஊனமுற்ற கைவினைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரின் கைவினைத்திறன் மற்றும் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்காக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Share with Friends