Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 4th September 19 Content

8 அப்பாச்சி ஏ. எச் - 64இ தாக்குதல் ஹெலிகாப்டர்கள்

  • பஞ்சாபின் பதான்கோட் விமானப் படை நிலையத்தில் 8 அப்பாச்சி ஏ. எச் - 64இ தாக்குதல் ஹெலிகாப்டர்களை இந்திய விமானப் படையானது பணியில் சேர்த்துள்ளது.
  • அவை அமெரிக்க நிறுவனமான போயிங் நிறுவனத்தினால் தயாரிக்கப் படுகின்றன. மேலும் இந்திய விமானப் படையின் போர்த் திறன்களுக்கு இது ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது.
  • இந்தக் கையகப் படுத்துதலானது இந்தியாவும் அமெரிக்காவும் 2015 ஆம் ஆண்டில் கையெழுத்திட்ட 22 ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.

சமுத்திரயான் திட்டம்

  • நீரில் மூழ்கக் கூடிய வாகனத்தில் மனிதர்களை ஆழ்கடலுக்கு அனுப்ப வேண்டும் என்ற இந்தியாவின் கனவானது 2021-22ல் 'சமுத்திரயான்' திட்டத்தின் மூலம் நடைமுறைக்கு வர இருக்கின்றது.
  • ஆழ்கடல் ஆய்வுகளை மேற்கொள்ள கடலில் சுமார் 6000 மீட்டர் ஆழத்தில் மூன்று நபர்களுடன் ஒரு நீரில் மூழ்கக் கூடிய வாகனத்தை அனுப்புவதற்கு இத்திட்டம் முன்மொழிகின்றது.
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த வாகனம் 72 மணி நேரம் கடற் படுக்கையில் ஊர்ந்து செல்லும் திறன் கொண்டது. 'சமுத்திரயான்' திட்டமானது புவி அறிவியல் அமைச்சகத்தின் ஒரு பகுதியாகும்.
  • இது சென்னையில் உள்ள தேசியக் கடல் தொழில்நுட்ப நிறுவனத்தால் (NIOT - National Institute of Ocean Technology) மேற்கொள்ளப் படுகின்றது.

சாகர் அவனேஷிகா - ஆராய்ச்சிக் கப்பல்

  • மேற்கு வங்காளத்தின் திதாகார்ஹ் மரைன்கள் என்ற நிறுவனம் சாகர் அன்வேஷிகா என்ற ஆராய்ச்சிக் கப்பலை வெற்றிகரமாக உருவாக்கி, அதை சென்னையில் உள்ள NIOTயிடம் ஒப்படைத்துள்ளது.
  • இது பல்வேறு கடல்சார் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும்.
  • தேசியக் கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT - National Institute of Ocean Technology) புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.
  • திதாகார்ஹ் நிறுவனம் இதற்கு முன்னர் 2018 ஆம் ஆண்டில் கடலோர ஆராய்ச்சிக் கப்பலான “சாகர் தாரா” என்ற கப்பலை அறிமுகப்படுத்தியது.

தோலில் புதிய வலி உணர்திறன் உறுப்பு கண்டுபிடிப்பு

  • தோலில் ஒரு புதிய உணர்ச்சி உறுப்பை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது துளைகள் மற்றும் தாக்கங்கள் போன்ற வலி மிகுந்த உடலில் ஏற்பட்ட சேதங்களைக் கண்டறியும்.
  • வலிக்கு காரணமான உறுப்பு: இணைப்பு உயிரணு.
  • இது ஒரு மேம்படுத்தப்பட்ட கண்டுபிடிப்பாகும். இது புதிய வலி நிவாரணி மருந்துகளை உருவாக்க உதவும்.
  • இந்தக் கண்டுபிடிப்பு 'அறிவியல்' இதழில் வெளியிடப்பட்டது.

உலக தேங்காய் தினம் - செப்டம்பர் 2

  • ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2 ஆம் தேதி உலக தேங்காய் தினம் அனுசரிக்கப் படுகின்றது.
  • இந்த நாள் தேங்காயின் சுகாதாரம் சார்ந்த நன்மைகள் மற்றும் பொருளாதார நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியாவின் தேங்காய் மேம்பாட்டு வாரியமானது செப்டம்பர் 2 ஆம் தேதி ஒடிசாவில் 'குடும்ப நலனுக்கான தேங்காய்' என்ற கருப்பொருளின் கீழ் 21வது உலக தேங்காய் தினத்தைக் கொண்டாட இருக்கின்றது.

தேசிய ஊட்டச்சத்து வாரம்: செப்டம்பர் 1 – 7

  • ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 7 வரை தேசிய ஊட்டச்சத்து வாரம் கொண்டாடப் படுகின்றது.
  • தேசிய ஊட்டச்சத்து வாரத்தின் நோக்கமானது மக்களிடையே ஊட்டச்சத்து நடைமுறை குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதாகும்.
  • குறிப்பாகப் பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு “சீம்பால்” என்று அழைக்கப்படும் பிரசவத்திற்குப் பிறகான முதல் பால் கொடுக்க ஊக்குவிக்கப் படுகிறார்கள்.
  • இந்தப் பிரச்சாரமானது முதன்முதலில் மத்திய அரசினால் 1982 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

"டெர்ரகோட்டா கிரைண்டர்"

  • டெர்ராக்கோட்டா கிரைண்டர் ’வீணான மட்பாண்டங்களை மீண்டும் பயன்படுத்த வாரணாசியில் கே.வி.ஐ.சி. செப்டம்பர் 2, 2019 அன்று மும்பையை தளமாகக் கொண்ட காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் (கே.வி.ஐ.சி) உத்தரபிரதேசத்தின் வாரணாசியிலுள்ள சேவாபுரியில் ‘டெர்ரகோட்டா கிரைண்டர்’ ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது KVIC இன் திட்ட REPLAN (REducingPLAstic in Nature) இன் கீழ் தயாரிக்கப்படுகிறது மற்றும் மட்பாண்ட தயாரிப்பில் மீண்டும் பயன்படுத்த கழிவு மற்றும் உடைந்த மட்பாண்ட பொருட்களை அரைக்கிறது. இதை கே.வி.ஐ.சி தலைவர் ஸ்ரீ வினாய் குமார் சக்சேனா வடிவமைத்துள்ளார், மேலும் ராஜ்கோட் (குஜராத்) சார்ந்த பொறியியல் பிரிவால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

“குளோபல் கோல்கீப்பர் விருது 2019

  • எம் மோடி பில் மற்றும் மிலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் “குளோபல் கோல்கீப்பர் விருது 2019” ஐ ஸ்வச் பாரத் அபியனுக்காக பெறுகிறார் ஸ்வச் பாரத் அபியான் (எஸ்.பி.ஏ) மிஷனின் கீழ் பணியாற்றியதற்காக பிரதமர் (பிரதமர்) நரேந்திர மோடியை பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ‘உலகளாவிய கோல்கீப்பர் விருது 2019’ உடன் கெளரிக்கப்படுகிறது .

“சி-ஆப்”

  • உ.பி. காவல்துறையினரால் சமூக பொலிஸுக்கு உதவ “சி-பிளான்” பயன்பாடு தொடங்கப்பட்டது செப்டம்பர் 3, 2019 அன்று, உத்திரபிரதேச (உ.பி.) காவல்துறையினர் உ.பி.யின் லக்னோவில் உள்ள தனது புதிய பொலிஸ் தலைமையகத்தில் “சி-ஆப்” என்ற புதிய பயன்பாட்டு பெயரை மாநிலம் முழுவதும் சமூக காவல்துறைக்கு உதவுவதற்காக சமூக-விரோத கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். நேரத்தில் கூறுகள். இந்த பயன்பாடு வகுப்புவாத பதட்டங்களைப் பற்றி அறிவிக்கவும், பெறப்பட்ட தகவல்களை சரிபார்க்கவும் உதவுகிறது.

Share with Friends