“ஒரு பாதுகாப்பான நாடு - ஒரு வளமான நாடு”
- 1948 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற 72 ஆவது ஆண்டு நிறைவை இலங்கை இன்று கொண்டாடுகிறது.
- இதில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஆதரவின் பேரிலும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்களிப்பிலும் ஒரு எளிய ஆனால் மகத்தான விழா நடைபெற்றது.
- இன்றைய சுதந்திர தின விழாவின் கருப்பொருள் “ஒரு பாதுகாப்பான நாடு - ஒரு வளமான நாடு”.
இந்திய உயர் ஸ்தானிகர்
- இலங்கை ஜனநாயக குடியரசின் இந்தியாவின் அடுத்த உயர் ஸ்தானிகராக கோபால் பாக்லே நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் இந்திய தூதராக நியமிக்கப்பட்ட தரஞ்சித் சந்து இவருக்கு முன்பு இப்பதவியில் இருந்துள்ளார்.
- தற்போது பாக்லே இந்தியாவின் பிரதமர் அலுவலகத்தில் இணை செயலாளராக பணியாற்றி வருகிறார்.
SFURTI- திட்டம்
- மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சகமானது “பாரம்பரியத் தொழில் துறைகளை மீளுருவாக்கம் செய்வ தற்கான நிதியியல் திட்டம்" (SFURTI - Scheme of Fund for Regeneration of Traditional Industries) என்ற ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
- இந்தத் திட்டத்தின் கீழ், காதி, கயிறு மற்றும் கிராமத் தொழிற்துறைக் குழுக்கள் போன்ற பாரம்பரியத் தொழிற்துறைக் குழுக்களை அமைப்பதற்கு நிதியுதவி அளிக்கப்பட இருக்கின்றது.
- இந்தக் குழுக்களின் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக இந்தத் திட்டமானது முதன்முதலில் 2005 ஆம் ஆண்டில் MSME ஆல் தொடங்கப்பட்டது.
பின்வரும் திட்டங்கள் SFURTI உடன் இணைக்கப்பட்டுள்ளன.
- காதி தொழில் மற்றும் கைவினைஞர்களின் உற்பத்தித் திறன் மற்றும் போட்டித் தன்மையை மேம்படுத்துவதற்கான திட்டம்.
- பொருள் மேம்பாடு, வடிவமைப்பு இடையீடு மற்றும் பொதி கட்டுதலுக்கான (PRODIP - Scheme for Product Development,Design Intervention and Packaging) திட்ட ம்.
- கிராமப்புறத் தொழிற்துறை சேவை மையத்திற்கான திட்டம் (RISC - Rural Industries Service Center) மற்றும் 0 உருமாற்றும் அலகுகள், அணிவதற்கான திட்டம் போன்ற பிற சிறிய இடையீடுகள்.
5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து
- தமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பிப்ரவரி 4 அன்று அறிவித்தார்.
- ஆனால், 5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முப்பருவ பாடத்திட்ட அடிப்படையில் நடைபெற உள்ளது. இதனால் 3 பருவத்துக்குரிய புத்தகங்களையும் சேர்த்து படிக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே பொதுத்தேர்வு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர்.
- இதுதொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன. அதை கவனமுடன் பரிசீலித்து, இந்த அரசாணையை ரத்து செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.
- எனவே, ஏற்கெனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.
கொசோவோவின் புதிய பிரதமர்
- கொசோவோவின் பிரதமராக ஆல்பின் கிருதி நியமிக்கப்பட்டுள்ளார். ஆல்பின் குர்தியின் அரசாங்கத்திற்கு 120 வாக்குகளில் 66 வாக்குகள் கிடைத்தன, 10 எம்.பி.க்கள் வாக்களிப்பதைத் தவிர்த்தனர்.
- கொசோவோ குடியரசின் பிரதமர் கொசோவோ அரசாங்கத்தின் தலைவராக செயல்படுவார் .