போர் பதக்கம் கண்டெடுக்கப்பு (சுமார் 500 முன்)
- சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் போர் வீரர்கள் பயன்படுத்திய போர் பதக்கம், கரூர் மாவட்டம், குளித்தலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சேலம் பாரா மஹால் நாணய சங்க இயக்குநர் ஜீ.சுல்தான் தெரிவித்துள்ளார்.
- சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் போர் வீரர்கள் அடையாளக் குறியீடாக கழுத்தில் வளையம் பொருத்தி பயன்படுத்திய போர் பதக்கம் கொங்கு மண்டலத்துக்குட்பட்ட கரூர் மாவட்டம், குளித்தலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- இது செம்பு உலோகத்தில் பொறிக்கப்பட்டு, அதைச் சுற்றியும் வட்ட வடிவத்தில் அலுமினிய வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் எடை42 மில்லி கிராம் ஆகும்.
‘சந்திரயான்-3’
- ‘சந்திரயான்-3’ விண்கலம் அடுத்த ஆண்டின் முதல் பாதியில் செலுத்தப்படும் என்று விண்வெளி ஆய்வுத்துறை அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்தார்.
- நிலவை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டின் முதல் பாதியில் செலுத்தப்படும். சந்திரயான்-2 திட்டத்திலிருந்து கற்றுக் கொள்ளப்பட்ட பாடங்களின் அடிப்படையில் சந்திரயான்-3 திட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது. விண்கலத்தின் தரம், வடிவமைப்பு, திறன் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்று ஜிதேந்திரசிங் தெரிவித்தார்.
- முன்னதாக, நிலவின் தென்துருவப் பகுதியை ஆராயும் நோக்கில் சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. பின்னர், நிலவைச் சுற்றி வந்து ஆய்வு செய்யும் ஆர்பிட்டர் பகுதி, விண்கலத்திலிருந்து பிரித்து விடப்பட்டது.
ஜனஷாதி வாரம்
- மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஜனஷாதி வாரம் கொண்டாடப்படுகிறது. ஜான் ஆஷாதி கேந்திர உரிமையாளர்கள் உடல்நலம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு வகையான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து வருகின்றனர்.
- பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான நிகழ்வின் நான்காவது நாளில், ‘சுவிதா சே சம்மான்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட நிகழ்வு நடைபெறுகிறது.
பாட்மிண்டன் ஆசியா சாம்பியன்ஷிப் 2020
- பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு 2020 ஆம் ஆண்டு பேட்மிண்டன் ஆசியா சாம்பியன்ஷிப்பை சீனாவின் வுஹானில் இருந்து பிலிப்பைன்ஸின் மணிலாவுக்கு மாற்றியிருப்பதை பேட்மிண்டன் ஆசியா குழு உறுதிப்படுத்தியது. இது மணிலாவில் 2020 ஏப்ரல் 21 முதல் 26 வரை நடத்தப்படும்.
குரோனிகல்ஸ் ஆஃப் சேஞ்ச் சாம்பியன்ஸ்
- மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் இரானி புதுடில்லியில் குரோனிகல்ஸ் ஆஃப் சேஞ்ச் சாம்பியன்ஸ் என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
- பெட்டி பதோ பெட்டி பச்சாவோவின் பிரதமரின் முதன்மை திட்டத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட மட்டங்களில் எடுக்கப்பட்ட 25 புதுமையான முயற்சிகளின் தொகுப்பு இந்த பபுத்தகத்தில் இடம்பெறும்.
மாணவர் சுகாதார அட்டை
- ஜம்மு-காஷ்மீரில், லெப்டினன்ட் கவர்னர் முர்முகுழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை திர்க மாணவர் சுகாதார அட்டை திட்டத்தை தொடங்கினார்.
- இதன் கீழ், பள்ளி குழந்தைகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள், இதனால் ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தடுக்க முடியும்.