அடல் பூஜல் திட்டம்
- மத்திய பட்ஜெட்டில் இந்தத் திட்டம் கடந்த 2016- 2017 நிதியாண்டில் அறிவிக்கப்பட்டது.
- இந்த திட்டத்திற்கு உலக வங்கி கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கியது.
- ரூ.6000 கோடி மதிப்பிலான இத்திட்டத்திற்கு மத்திய அரசும், உலக வங்கியும் தலா ரூ. 3000 கோடியை செலவிட உள்ளன.
- அடல் பூஜல் யோஜனா திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளில் 78 மாவட்டங்களில் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பெண் பிரதமர் - வங்கதேசம்
- உலகின் அதிக காலம் அரசியல் பதவியில் உள்ள பெண் என்ற பெருமையை அவாமி லீக் கட்சியின் தலைவரும் வங்காளதேசத்தின் பிரதமருமான ஷேக் ஹசீனா பெற்றுள்ளார்.
- இவர் 1996 முதல் 2001 வரை பிரதமராக பதவி வகித்தார். பின்னர் 2008-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானார்.
- 2008 முதல் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- இதன் மூலம் ஷேக் ஹசீனா (16 ஆண்டுகள்) அதிக காலம் பதவி வகித்து வரும் உலகின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை அடைந்துள்ளார்.
பலாலி சா்வதேச விமான நிலையம்
- தமிழா்கள் அதிகம் வசிக்கும் வடக்கு யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள பலாலி உள்நாட்டு ராணுவ விமான நிலையம், சர்வதேசத் தரத்துக்கு உயர்த்தப்பட்டு, அக்டோபர் மாதம் முதல் இந்தியாவின் சில தென் நகரங்களுக்கு நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது.
- பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தும் பணிகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில், oct 17-ஆம் தேதி அந்த விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்படவுள்ளது.
- பலாலியானது, இலங்கையின் 5-ஆவது சா்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்படவுள்ளது. அங்கு ஏற்கெனவே கொழும்பு, ரத்மலானா, மட்டக்களப்பு, அம்பந்தோட்டம் ஆகிய இடங்களில் சா்வதேச விமான நிலையங்கள் உள்ளன.
‘முகமந்திரி சுபோஷன் அபியான்’
- மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு சத்தீஸ்கர் அரசு முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் அக்டோபர் 2 ஆம் தேதி ஐந்து புதிய திட்டங்களைத் தொடங்கியது.
- ‘முகமந்திரி சுபோஷன் அபியான்’, ‘முகமந்திரி ஹாத் பஜார் கிளினிக் யோஜனா, ‘முகமந்திரி ஷெஹாரியா சேரி ஸ்வஸ்த்யா யோஜனா’, யுனிவர்சல் பி.டி.எஸ் திட்டம் மற்றும் முகமந்திரி வார்டு காரியாலே ’போன்ற திட்டங்கள் தொடங்கப்பட்டது.
- இந்த திட்டங்கள் சத்தீஸ்கர் மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகளையும் ஊட்டச்சத்தையும் வழங்கும் திசையில் ஒரு மைல்கல்லாக இருக்கும்.
பஞ்சாப்-ஹரியாணா
- 7 மாநில உயர்நீதிமன்றங்களுக்கான தலைமை நீதிபதிகள் நியமனம்.
- மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ரவிசங்கர் ஜா, பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
- அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி அஜய் லாம்பா, குவாஹாட்டி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரஜித் மஹந்தி, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும்.
- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ. மணி குமார், கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டனர்.
- கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி எல். நாராயண சுவாமி, ஹிமாசல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
- ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
- சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, குவாஹாட்டி உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. கோஸ்வாமி நியமிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி விஸ்வநாத் சமாதார், மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி விவேக் அகர்வால் ஆகியோர் அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.
- தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி பி.வி. சஞ்சய்குமார், பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
யூத் செஸ் சாம்பியன்ஷிப்
- உலக யூத் செஸ் தொடரின் 2 வது சுற்றில் இந்திய வீரர் ப்ரக்னந்தா வெற்றி பெற்றார். இதில் 18 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 2 வது சுற்றில் தமிழக வீரர் பிரகனந்தா வெற்றி பெற்றுள்ளார்.
- உலகின் இரண்டாவது இளம் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தைப் பிரகனந்தா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெண்களுக்கான 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் வெற்றி பெற்றுள்ளார்
'ஞானபாநு'
- சுப்பிரமணிய சிவா (4அக்டோபர் 1884 - 23 ஜூலை 1925) 1913-இல் 'ஞானபாநு' இதழை நடத்தியவர்.
- விடுதலைப்போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப்பழகியவர். 'வீரமுரசு' எனப் புகழப்பட்டவர்
உலக ஆசிரியர் தினம்
- சர்வதேச ஆசிரியர் தினம் என்றும் அழைக்கப்படும் உலக ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5 ஆம் தேதி ஆசிரியர்களை கவுரவிப்பதற்காகவும் கல்வி மற்றும் மேம்பாட்டுக்கு அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காகவும் நடத்தப்படுகிறது.
யூத் கோ: ஆய்வகம்
- இளைஞர்களை நிலையான வளர்ச்சியின் முக்கியமான பங்காக அங்கீகரிப்பதற்கான சமீபத்திய முயற்சியில், அடல் புதுமை மிஷன் (ஏஐஎம்), நிதி ஆயோக் மற்றும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்துடன் (யுஎன்டிபி) இணைந்து இந்தியா இளைஞர் கூட்டுறவு ஆய்வகத்தை அறிமுகப்படுத்தியது, இது இளம் இந்தியாவில் சமூக தொழில்முனைவோர் மற்றும் புதுமைகளை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஸ்வச் பாரத் தூய்மை மதிப்பீடு 2019
- ஸ்வச் ரெயில், ஸ்வச் பாரத் தூய்மை மதிப்பீடு 2019 இன் கீழ், ஜெய்ப்பூர் ரயில் நிலையம் நாடு முழுவதும் உள்ள 720 நிலையங்களில் முதலிடத்தில் உள்ளது.
- ஜெய்ப்பூர் துணை நகர நிலையம் துர்காபுராவின் மூன்றாவது இடத்தைப் பிடித்தது,ஜோத்பூர் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
“டிரான்ஸ் ஃபேட் ஃப்ரீ”
- புதுடில்லியில் நடைபெற்ற 8 வது சர்வதேச செஃப் மாநாட்டில் (ஐ.சி.சி VII) மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ) “டிரான்ஸ்-ஃபேட் ஃப்ரீ” சின்னத்தை வெளியிட்டார்.
- இது டிரான்ஸ்- ஃபேட் எதிரான இயக்கத்தில் ஒரு முக்கியமான பங்கு அளிக்கிறது, மேலும் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ இன் ‘Eat Right India’ இயக்கம் விரைவுபடுத்தபடும்.
தொகுதி மேம்பாட்டு நிதி - தமிழ்நாடு
- எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை கூடுதலாக ஐம்பது லட்சம் ரூபாய் உயர்த்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
- இதுவரை ஒவ்வொரு எம்.எல்.ஏ.வின் நிதியத்தின் கீழ் ஆண்டு செலவினங்களுக்கான உச்சவரம்பு 2.5 கோடி ரூபாய்.இப்போது இந்த தொகை மூன்று கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
உலக பருத்தி தினம்
- ஜெனீவாவில் அக்டோபர் 7 முதல் அக்டோபர் 11 வரை கொண்டாடப்படும் உலக பருத்தி தினத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் இரானி பங்கேற்கிறார்.
- உலக வர்த்தக அமைப்பு (WTO) ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) செயலாளர்கள், வர்த்தக மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு (UNCTAD), சர்வதேச வர்த்தக மையம் (ITC) மற்றும் சர்வதேச பருத்தி ஆலோசனைக் குழு (ஐ.சி.ஐ.சி) உலக பருத்தி தின நிகழ்வை ஏற்பாடு செய்து வருகிறது.
ரிசர்வ் வங்கி
- இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) பணப்புழக்க சரிசெய்தல் வசதியின் (எல்ஏஎஃப்) கீழ் பாலிசி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளால் குறைத்து 5.40 சதவீதத்திலிருந்து 5.15 சதவீதமாக உடனடியாக அமல்படுத்தியுள்ளது.
கோவா கடல்சார் மாநாடு
- கோவாவில் கடல்சார் மாநாடு தொடங்கியது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், மாநாட்டின் தொடக்க நிகழ்வின் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.
- கடற்படைப் போர் கல்லூரி வழியாக இந்திய கடற்படை மூலம் கோவா இந்த மாநாட்டைநடத்துகிறது.
இந்தியா - பங்களாதேஷ்
- இந்தியா – பங்களாதேஷ் வர்த்தக மன்றம் புதுதில்லியில் தொடங்கியது.
- தெற்காசியாவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக பங்களாதேஷ் உள்ளது.
- கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவிற்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் சீராக வளர்ந்துள்ளது.
அவினாஷ் சேபிள்
- இந்தியாவின் அவினாஷ் சேபிள் டோஹியோவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்து ஆண்கள் 3,000 மீட்டர் ஸ்டீப்பிள்சேஸ் போட்டியில் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளார்.